Tuesday, June 13, 2017


சித்தா, ஆயுர்வேத படிப்புக்கு விண்ணப்ப வினியோகம் எப்போது?

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ முறை படிப்புக்களுக்கான விண்ணப்பம் வினியோகம் துவங்காததால், மாணவர்கள் தவிப்பில் உள்ளனர்.
தமிழகத்தில், இரு சித்த மருத்துவ கல்லுாரிகள் உட்பட, ஆறு இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், ௩௯௦ இடங்கள் உள்ளன. சுய நிதி கல்லுாரிகளில் இருந்தும், ௨௦௦க்கும் மேற்பட்ட இடங்கள், மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு கிடைக்கும்.இந்த ஆண்டு, பிளஸ் ௨ மதிப்பெண் அடிப்படையில் தான், இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கு வழக்கமாக, ஜூனில், விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டு, செப்டம்பரில் கவுன்சிலிங் நடக்கும். ஆனால், இந்த ஆண்டு இதுவரை விண்ணப்ப வினியோகத்தை துவக்காமல், ஹோமியோபதி மற்றும் இந்திய மருத்துவமனை இயக்குனரகம் காலம் தாழ்த்தி வருகிறது.

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, 'நீட்' தேர்வு கட்டாயமாகி உள்ளதால், ஏராளமான மாணவர்கள், சித்தா உள்ளிட்ட ஆயுர்வேத படிப்பில் சேர ஆர்வம் காட்டி வரும் நிலையில், விண்ணப்ப வினியோகம் துவங்காதது, பல குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குழு அதிகாரிகள் கூறியதாவது:இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான சேர்க்கை, இந்தாண்டு, பிளஸ் ௨ மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது.

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான அறிவிப்பு வெளியான பிறகே,இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகும். மேலும், நடப்பாண்டில், இந்திய மருத்துவ முறை கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து, இந்திய மருத்துவ முறைக்கான மத்திய கவுன்சிலிங் ஆய்வு செய்துள்ளது. இந்த பணிகள் முடிந்ததுமே,விண்ணப்பம் வினியோகம் துவங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Posted by kalviseithi.net



No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...