Saturday, June 9, 2018

காரில், 'ஏசி' போட்டு தூங்கியவர் மரணம்

Added : ஜூன் 09, 2018 04:15

கோவை : காருக்குள், 'ஏசி' போட்டு துாங்கிய பவுண்ட்ரி உரிமையாளர் திடீரென இறந்தார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவை, பீளேமேடு அடுத்த சின்னியம் பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியன்,41, வார்ப்பட தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரது மாமியாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பீளமேடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாமியாரை பார்ப்பதற்கு, நேற்று முன்தினம் இரவு மருத்துவமனைக்கு குடும்பத்துடன், இன்னோவா காரில் சென்றார்.

மனைவி மற்றும் குழந்தைகள் மருத்துவமனை வார்டில் துாங்கினர். அங்குள்ள பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்திய சுப்பிரமணியன், 'ஏசி' போட்டு கதவை பூட்டி, காருக்குள் துாங்கினார்.நேற்று காலை, 10:00 மணியாகியும், சுப்பிரமணியன் வராததால், அவரது மனைவி கீழே வந்து பார்த்தார். அப்போது, காருக்குள் சுப்பிரமணியன் துாங்கிய நிலையில் இருந்தார். கதவை தட்டியும் திறக்கவில்லை. பின், கதவை உடைத்து பார்த்தபோது, சுப்பிரமணியன் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

காருக்குள் 'ஏசி' இயங்கிய நிலையில் இருந்தது. கதறி அழுத அவரது மனைவி, பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் சடலத்தை கைப்பற்றி, மாரடைப்பால் இறந்தாரா, 'ஏசி' இயங்கியதால், மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தாரா என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...