Sunday, June 10, 2018

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் நாளை முதல் வினியோகம்

Added : ஜூன் 10, 2018 04:12

கோவை:எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பங்கள், நாளை முதல் வினியோகிக்கப்பட உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடு களும் தயார் நிலையில் உள்ளன.எம்.பி.பி.எஸ்., --- பி.டி.எஸ்., படிப்புகளுக்கு மே, 6ல் நீட் தேர்வு நடந்தது; முடிவுகள் கடந்த, 4ம் தேதி வெளியானது.

இதையடுத்து, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வினியோகிக்கப்பட உள்ளன.மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறியதாவது:

பிளஸ், 2 தேர்வு முடிவுகள், நீட் தேர்வு அடிப்படையில் வழிகாட்டி ஏடு மற்றும் விண்ணப்பங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வினியோகிக்கப்படும்.
மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளில் நேரிலும், ஆன்லைனிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை, 18ம் தேதி மாலை, 5:00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 19ம் தேதி மாலை, 5:00 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும்.
விண்ணப்ப படிவங்கள் பெற, செயலர், தேர்வு கமிட்டி, கீழ்ப்பாக்கம், சென்னை என்ற பெயரில், 500 ரூபாய்க்கான டி.டி., எடுக்க வேண்டும்.
சுயநிதி தனியார் கல்லுாரிகளுக்கான விண்ணப்பத்துக்கு, 1,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., - எஸ்.டி. மாணவர்களுக்கு இலவசம்.மாணவர்கள் சான்றொப்பம் பெறப்பட்ட ஜாதி சான்று நகலை வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் கல்லுாரி களுக்கான விண்ணப்ப விபரங்கள் குறித்து, விண்ணப்பத்தின் முகப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

விண்ணப்பங்கள் காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை வினியோகிக்கப்படும்.தட்டுப்பாடு இல்லாமல் விண்ணப்பங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்களுக்கான, டி.டி., எடுப்பதற்கு அந்தந்த மருத்துவக் கல்லுாரிகளில் வங்கிகளின் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...