Tuesday, June 26, 2018


ஓ.எம்.ஆர். சாலையில் சுங்க கட்டணம் 10 சதவீதம் அதிகரிப்பு



ஓ.எம்.ஆர்.சாலையில் சுங்க கட்டணம் 10 சதவீ தம் அதிகரித்துள்ளது. புதிய கட்டணம் ஜூலை 1–ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஜூன் 26, 2018, 04:00 AM
சென்னை,

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப் பாட்டின் கீழ் தமிழ்நாட்டில் 44 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன.

தமிழ்நாடு சாலை மேம் பாட்டு நிறுவனத்தின் பரா மரிப்பின் கீழ் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அக்கறை முதல் மாமல்லபுரம் வரையிலான 33.1 கி.மீட்டர் சாலையும், ஓ.எம்.ஆர்.(பழைய மகாபலிபுரம் சாலை) சாலை யில் மத்திய கைலாஷ் சந்திப்பு முதல் சிறுச்சேரி வரையிலான 20.1 கி.மீட்டர் சாலையும் உள்ளது.

இதில் ஓ.எம்.ஆர்.சாலை யில் பெருங்குடி சீவரம், துரைப்பாக்கம், மேடவாக்கம், ஈ.சி.ஆர். லிங்க் சாலை, ஏகாத் தூர் ஆகிய 5 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைந் துள்ளன. தற்போது இந்த மார்க்கத்தில் ஆட்டோ தவிர கார், இலகு ரக வாகனம், பஸ், சரக்கு வாகனம், பல அச்சு வாகனங்களுக்கு சுங்க கட்ட ணம் 10 சதவீதம் உயர்த்தப்பட் டுள்ளது.


ஓ.எம்.ஆர். மார்க்கத்தில் கடந்த 2016–ம் ஆண்டு ஜூலை 1–ந்தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்படி 2 ஆண்டுகளுக்கு பிறகு தற் போது கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓ.எம்.ஆர். சாலையில் ஐ.டி. நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. தினமும் ஆயிரக்கணக் கான வாகனங்கள் அந்த சாலை வழியாக பயணிக் கின்றன. இந்த கட்டண உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப் தியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 17.01.2025