Saturday, March 21, 2015

மத்திய அரசு ஊழியர்களுக்கு யோகா பயிற்சி ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1-ந் தேதி முதல் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.

யோகா

மனதையும், உடலையும் ஒருங்கிணைத்து ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிநடத்தும் பயிற்சி, யோகா. இந்தியாவில் உருவான இந்த யோகா பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

இதுகுறித்த விழிப்புணர்வை உலகமெங்கும் ஏற்படுத்தும் வகையில் சர்வதேச யோகா தினத்தை கடைப்பிடிக்க ஐ.நா. ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். பல்வேறு நாடுகளும் அவருக்கு இதில் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படும் என ஐ.நா. சபை அறிவித்துள்ளது. இது மோடியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என கருதப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு யோகா

இப்போது மோடி, அடுத்த கட்டமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு யோகா பயிற்சி வழங்க முடிவு எடுத்துள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஏப்ரல் 1-ந் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சி ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து அனைத்து நாட்களிலும் வழங்கப்படும். டெல்லியில் சமாஜ்சதன் கிரி கல்யாண் கேந்திராவில், மொரார்ஜி தேசாய் தேசிய யோகா இன்ஸ்டிடியூட்டுடன் இணைந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பதிவு செய்ய வேண்டும் என்பதோ, கட்டணம் செலுத்த வேண்டும் என்பதோ கிடையாது.

நாடு முழுவதும் உள்ள 31 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த யோகா பயிற்சி கிடைக்க உள்ளது.

அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி

இதே போன்று மூத்த அதிகாரிகள், மன அழுத்த மேலாண்மை உத்திகளை கற்றுக்கொள்ளும் வகையில் 2 நாள் பட்டறையையும் மத்திய அரசு நடத்துகிறது. இந்த பட்டறை, வரும் 28-ந் தேதியும், 29-ந் தேதியும் டெல்லியில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறையும், மத்திய மந்திரிசபை செயலகமும்

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...