Friday, April 14, 2017

அமைச்சர்கள் மீதான புகார் : வருமான வரித்துறை விளக்கம்

பதிவு செய்த நாள் 13 ஏப்  2017  23:36

சென்னை போலீஸ் கமிஷனரிடம், அமைச்சர்கள் மீது அளித்த புகாரில், நான்கு வித குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளதாக, வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். கடந்த, 7ம் தேதி, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், சோதனை நடத்திய போது, இடையூறு செய்த அமைச்சர்கள் மீது, போலீஸ் கமிஷனரிடம், வருமான வரி அதிகாரிகள் புகார் செய்தனர். அதுபற்றி, அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அளித்துள்ள புகாரில், நான்கு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளோம். முதலில், எங்கள் ஊழியர்களை சிலர் மிரட்டினர். இரண்டாவதாக, எங்களது எச்சரிக்கையையும் மீறி, அமைச்சர்கள் காமராஜ், ராதாகிருஷ்ணன் மற்றும் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் அத்துமீறி நுழைந்தனர்.

மூன்றாவதாக, எங்களிடம் இருந்து ஆவணங்களை பறித்து வெளியே வீசினர். நான்காவதாக, எங்கள் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தனர். இந்த நான்கு குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளோம். பெண் அதிகாரியை மிரட்டியதாக, புகார் தரவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, இடைத்தேர்தலின் போது, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி, தேர்தல் கமிஷனால் மாற்றப்பட்ட ஜார்ஜ், மீண்டும் கமிஷனராக நியமிக்கப் படுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்த புகார் மீது மேல் நடவடிக்கை இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

‘Will divide society’: SC stays new UGC equity regulations

‘Will divide society’: SC stays new UGC equity regulations  ‘Dangerous Impact On Goal Of Castelessness’  D hananjay.Mahapatra@timesofindia.c...