Friday, April 14, 2017

துபாயில் இருந்து வந்த விமானம், சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கி ஓடுபாதையில் ஓடும் போது திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டது. விமானியின் சாமர்த்தியத்தால் 164 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

 சென்னை விமான நிலையத்தில்
ஓடு பாதையில் இறங்கிய விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு
164 பயணிகள் உயிர் தப்பினர்

ஏப்ரல் 13, 04:45 AM

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை துபாயில் இருந்து 164 பயணிகளுடன் விமானம் வந்தது. அந்த விமானம் சென்னையில் தரை இறங்கி, ஓடுபாதையில் ஓடிக்கொண்டு இருந்தபோது திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டு சக்கரங்கள் சுழலவில்லை.

இதனால் விமானத்தில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. இதை அறிந்த விமானி, சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை ஓடுபாதையிலேயே பத்திரமாக நிறுத்தினார்.

164 பேர் உயிர் தப்பினர்

விமானியின் சாமர்த்தியம் காரணமாக விமானத்தில் இருந்த 164 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். அந்த விமானம் ஓடுபாதையில் நின்றதால் மற்ற விமானங்கள் தரை இறங்க முடியாமல் பாதிப்பு ஏற்படும் என்பதால் உடனடியாக இழுவை வாகனங்கள் மூலமாக ஓடுபாதையில் நின்ற விமானத்தை இழுத்து வந்து வழக்கமாக விமானங்கள் நிறுத்தப்படும் இடத்தில் நிறுத்தப்பட்டது.

பின்னர் பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர். அதன்பிறகு விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறை பழுது பார்க்கும் பணி நடைபெற்றது.

அந்த விமானம் சென்னையில் இருந்து மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். எந்திரக்கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு சுமார் 1 மணி நேரம் தாமதமாக அந்த விமானம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.

No comments:

Post a Comment

NEWS TODAY 29.01.2026