Thursday, June 15, 2017

கலெக்டர் காலில் விழுந்த குழந்தைகள்

பதிவு செய்த நாள்15ஜூன்2017 00:50


பெரம்பலுார், ஜூன் 15-

பெரம்பலுார் அருகே, காரை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில், 49; இவருக்கும், தம்பி ரவிக்கும், 40, நிலத்தகராறு காரணமாக, முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் இரவு, செந்தில் மனைவி பச்சையம்மாளை, ரவி தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த பச்சையம்மாள், பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அவருக்கு, டாக்டர்கள் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில், நேற்று தாய் - சேய் நல ஊர்தி சேவை துவக்க விழாவில் பங்கேற்க, பெரம்பலுார் கலெக்டர் சாந்தா, அரசு மருத்துவமனைக்கு வந்தார்.

அப்போது, பச்சையம்மாளின் இரு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும், கலெக்டர் காலில் திடீரென விழுந்து, தன் தாய்க்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும்; தாயை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பச்சையம்மாளை நேரில் சென்று பார்த்த கலெக்டர் சாந்தா, அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு உத்தரவிட்டார். பின், பச்சையம்மாளை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க,
போலீசாருக்கும் உத்தரவிட்டார்.


No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025