Thursday, June 15, 2017

வறுமைக்கோட்டுக்கு கீழ் வந்த பெரும் பணக்காரர்கள்
பதிவு செய்த நாள்15ஜூன்2017 02:04

புகையில்லா கிராமத்தை உருவாக்கும் நோக்கில், மத்திய அரசு, 'பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா' எனும், பி.எம்.யு.ஒய்., என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோரின் வீடுகளுக்கு, சமையல் காஸ் அடுப்பு வழங்க திட்டமிட்டுள்ளது.

காஸ் இணைப்பு பெற, காஸ் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய, 'டிபாசிட்' தொகையை, அரசே வழங்கும்; 999 ரூபாய்க்கு காஸ் அடுப்பும் வழங்கப்படும்; வங்கி கடனும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு இல்லாதவர்களின் விபரம், சிலிண்டர் வினியோகிக்கும் எண்ணெய் நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ளது. சிலிண்டர் வினியோக நிறுவன ஊழியர்கள், நேரில் கள ஆய்வுக்கு செல்லும் போது, பெரும் பணக்காரர்கள் பலரின் பெயர், பட்டியலில் இடம் பெற்றிருப்பதும், இணைப்பு இல்லாத, வறுமை கோட்டுக்கு கீழ் வாழும், பலரது குடும்பங்களின் விபரம் இடம் பெறாததும் தெரியவந்துள்ளது.எனவே, குறைகளை சரி செய்யும் நோக்கில், 'பி.எம்.யு.ஒய்., பிளஸ்' என்ற பெயரில், ஏற்கனவே எடுக்கப்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோரின் பட்டியலில், விடுபட்ட, உண்மையிலேயே வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோரின் விபரங்கள் சேர்க்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025