Tuesday, June 20, 2017

மொபைல் மூலம் மின் கட்டணம் : தமிழகத்தில் விரைவில் அறிமுகம்

பதிவு செய்த நாள்19ஜூன்
2017
21:59

சென்னை: விவசாய மின் இணைப்புக்கு மனு அளித்து, காத்திருப்போருக்கு புதிய சலுகைகள், 

சட்டசபையில் நேற்று அறிவிக்கப்பட்டன.

சட்டசபையில், மின் துறை அமைச்சர் தங்கமணி, புதிய அறிவிப்புகள் குறித்து கூறியதாவது:

மொபைல் போன் செயலி மூலம், மின் கட்டணம் செலுத்தும் வசதி, விரைவில் அறிமுகமாகும். 112 கி.வா., வரையிலான மின் தேவை உள்ள புதிய ஆலைகளுக்கு, 15 தினங்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும். இதேபோல், மின் கம்பம் மற்றும் பில்லர் பாக்ஸ், 30 மீட்டர் தொலைவுக்குள் இருந்தால், 24 மணி நேரத்தில், மின் இணைப்பு வழங்கப்படும். தமிழகத்தில் இலவச மின்சாரத்துக்காக, இணைப்பு கேட்டு, விவசாயிகள் பலர் காத்திருக்கின்றனர். அவர்கள், விரைந்து இணைப்பு பெறுவதற்காக, 'தட்கல்' திட்டம் அறிமுகமாகிறது. அதன்படி, 5 குதிரைத்திறன் உள்ள மின் மோட்டார்களுக்கு, 2.5 லட்சம் ரூபாய்; 7.5 குதிரைத்திறன் மோட்டார்களுக்கு, 2.75 லட்சம் ரூபாய்; 10 குதிரைத்திறன் மின் மோட்டார்களுக்கு, மூன்று லட்சம் ரூபாய் வீதம், ஒரு முறை கட்டணம் செலுத்தும், 10 ஆயிரம் பேருக்கு, ஆறு மாதங்களுக்குள் இணைப்பு வழங்கப்படும்.

இதுபோல், 'ஆப் - கிரிட்' எனப்படும், வழக்கமான மின் கட்டமைப்பில் இணைக்காமல், சூரிய சக்தி மூலம், நீர் பம்புகளை இயக்க முன்வரும் விண்ணப்பதாரர்களுக்கு சலுகை கிடைக்கும். அதன்படி, 5.75 மற்றும் 10 குதிரைத்திறன் மின் மோட்டார் வைத்திருப்போர், சூரிய சக்தி திட்டத்திற்கு மாறலாம். அவர்களுக்கு, தமிழக அரசு, 40 சதவீதம்; மத்திய எரிசக்தி துறை, 20 சதவீதம்; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின், 30 சதவீத மானியம் கிடைக்கும். விவசாயிகள், 10 சதவீதம் மட்டும் செலுத்தி, இணைப்பு பெறலாம். இது, ஆண்டுக்கு, 1,000 பேருக்கு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Fake FB page conducts MU admissions

 Fake FB page conducts MU admissions  13.04.2025 Mumbai : The University of Mumbai has lodged an official complaint with the cyber crime dep...