Sunday, June 18, 2017

2 கருணை மனுக்கள் நிராகரிப்பு ஓய்வுக்கு முன் ஜனாதிபதி பிரணாப் அதிரடி

பதிவு செய்த நாள்17ஜூன்2017 22:50


புதுடில்லி:ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அடுத்த மாதம், ஓய்வு பெறவுள்ள நிலையில், இரண்டு கருணை மனுக்களை நிராகரித்து உள்ளார்.

முந்தைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், தான் ஓய்வு பெறுவதற்கு முன், 30 கருணை மனுக்களை ஏற்று, மன்னிப்பு வழங்கினார். அதற்கு மாறாக, தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 30 கருணை மனுக்களை, தொடர்ச்சியாக நிராகரித்துள்ளார்.

பிரணாப் முகர்ஜி, அடுத்த மாதம், 24ல் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், கடந்த மாதம், அவரிடம் இரண்டு கருணை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இரண்டு மனுதாரர்களும், பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததால், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள்.

இவற்றில் ஒன்று, மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில், கம்ப்யூட்டர் மென்பொருள் நிபுணரை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த, டாக்சி டிரைவரின் மனு. மற்றொன்று, 4 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த கொடூரனின் மனு.
இவை இரண்டையும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளதாக, ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, அரசியலமைப்பு சட்டம், 72வது பிரிவின்படி, ரத்து செய்ய, நிறுத்தி வைக்க, தண்டனையை குறைத்து வழங்க, ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு.

No comments:

Post a Comment

Madras HC relief for SC medico denied government quota

Madras HC relief for SC medico denied government quota Affirmative action is not exception or bounty, but is constitutional right of student...