Thursday, June 15, 2017

குண்டான குழந்தைகள் அதிகம் உள்ள நாடு: இரண்டாமிடம் பிடித்த இந்தியா
2017-06-14@ 17:22:45

வாஷிங்டன் : உலகில் குண்டான குழந்தைகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் சீனா முதல் இடத்தில் உள்ளது. தி நியூ இங்கிலாந்து ஜோர்னல் ஆப் மெடிசின் என்ற அமைப்பு உலகில் அதிகம் பிரபலமான 20 நாடுகளில் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் குறித்து நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. அதன்படி இந்தியாவில் 14.4 மில்லியன் குழந்தைகள் அதிக உடல்எடையுடன் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் உலகில் அதிக உடல் எடை கொண்ட 2 பில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நோய்களும் அதிகரித்து வருகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகிறது.

இதேபோல் 2015 ஆண்டில் மட்டும் அதிக உடல் சார்ந்த நோய்களால் 4 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். உடல் எடை அதிகமான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அதிகமுள்ள நாடுகளில் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்திலும், அதிக உடல்உடை உள்ள பெரியவர்களை அதிகம் கொண்ட நாடுகளில் எகிப்து முதல் இடத்திலும் உள்ளது. உடல் எடை அதிகமானவர்கள் மிக குறைவாக உள்ள நாடுகளில் வங்கதேசும், வியட்நாமும் உள்ளன என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025