Tuesday, June 20, 2017

பிறந்த நாளையொட்டி ராகுலுக்கு மோடி வாழ்த்து

2017-06-20@ 03:49:13


புதுடெல்லி; ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் 47வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. ராகுல் வெளிநாட்டிற்கு சென்றுள்ளபோதும், அவரது பிறந்த நாளை கட்சி பிரமுகர்கள் கேக் வெட்டியும் பட்டாசுகள் வெடித்தும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடினர். இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி, ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு டிவிட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், ‘‘ராகுல் காந்தி மிகவும் ஆர்வமுடனும் துடிப்புடனும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் நீண்ட ஆயுளுடன் எல்லா வளமும் நலமும் பெற்று பல ஆண்டுகள் நீடூழி வாழவேண்டும்’’ என்று கூறியுள்ளார். ராகுல்காந்தி, தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது பாட்டியிடம் ஆசிபெறுவதற்காக கடந்த 13ம் தேதி வெளிநாட்டிற்கு சென்றார். அவர் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

No comments:

Post a Comment

NEWS TODAY 31.01.2026