Wednesday, June 21, 2017

ரேஷன் நுகர்வோருக்கு 'ஸ்மார்ட் கார்டுகள்'எப்போது: மாவட்டவாரியாக தயார் செய்வதால் தாமதம்

பதிவு செய்த நாள்21ஜூன்
2017
02:33




மதுரை;சென்னையில் அச்சிடும் பணி நடப்பதால் மதுரை மாவட்டத்தில் தற்போது பயன்பாட்டிலுள்ள ரேஷன்கார்டுகளுக்கு பதில் 'ஸ்மார்ட் கார்டுகள்'
வழங்குவது தாமதமாகிறது.

இம்மாவட்டத்தில் ஒன்பது லட்சம் ரேஷன்கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் 1387 ரேஷன்கடைகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் தற்போது பயன்பாட்டிலுள்ள ரேஷன் கார்டுகளுக்கு பதில் 'ஸ்மார்ட் கார்டுகள்' வழங்கும் பணி நடக்கிறது. இதற்காக ஆதார் மற்றும் அலைபேசி எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் இதுவரை மூன்று கட்டங்களாக 3.95 லட்சம் 'ஸ்மார்ட் கார்டுகள்' வழங்கப்பட்டுள்ளன. நேற்று நான்காவது கட்டமாக 48 ஆயிரத்து 500 'ஸ்மார்ட் கார்டுகள்' வந்துள்ளன. அவற்றை பத்து தாலுகாவிற்கும் பிரித்து அனுப்பும் பணியில் மாவட்ட வழங்கல் அலுவலர் பொன்ராம் தலைமையில் அலுவலர்கள் ஈடுபட்டனர். இதற்கிடையில் ஆதார் மற்றும் அலைபேசி பதிவு செய்தவர்கள் 'ஸ்மார்ட் கார்டு' கேட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

மதுரை உட்பட தமிழகத்தின் ஒன்றரை கோடிக்கும் மேலான ரேஷன்கார்டுகளுக்கு பதில் 'ஸ்மார்ட் கார்டுகள்' அச்சடிக்கும் பணி சென்னையில் நடக்கிறது. அவர்கள் மாவட்ட வாரியாக தேர்வு செய்து அச்சடிப்பதால் 'ஸ்மார்ட் கார்டுகள்' வழங்குவது தாமதமாகிறது.
இதற்கிடையில் வழங்கப்பட்டுள்ள 'ஸ்மார்ட் கார்டுகளில்' பெயர், போட்டோ மாறியிருப்பதாக கூறி, அதை மாற்ற கோரி ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வருகின்றனர்.

உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆதார் மற்றும் அலைபேசி எண்களை பதிவு செய்த அனைவருக்குமே 'ஸ்மார்ட் கார்டுகள்' வழங்கப்படும். ஒரே நேரத்தில் மாநிலத்திலுள்ளவர்களுக்கு கார்டுகள் அச்சிடப்படுவதால் தாமதமாகிறது. இருப்பினும் இவற்றை விரைந்து வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையிலிருந்து 'ஸ்மார்ட் கார்டுகள்' வந்தவுடன் உடனடியாக நுகர்வோருக்கு வழங்குகிறோம். ஆதார் எண் பதிவு செய்யாதவர்களுக்கு 'ஸ்மார்ட் கார்டுகள்' வழங்கப்படாது.
ஆதார் மற்றும் அலைபேசி எண்கள் விடுபட்டவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் பதிவு செய்ய வேண்டும். 'ஸ்மார்ட் கார்டுகளில்' திருத்தம் செய்ய நினைப்பவர்கள் உணவுப்பொருள் வழங்கல் துறை இணையதளம் அல்லது அரசு பொது இ சேவை மையங்களை அணுகலாம். திருத்தம் செய்த பிறகு புதிய கார்டுகளை கட்டணம் செலுத்தி இ சேவை மையங்களில் பெறலாம், என்றார்.

- See more at: http://www.dinamalar.com/news_detail.asp?id=1795051#sthash.VNectz9I.dpuf

No comments:

Post a Comment

Madras HC relief for SC medico denied government quota

Madras HC relief for SC medico denied government quota Affirmative action is not exception or bounty, but is constitutional right of student...