Thursday, June 22, 2017

ஆடி அமாவாசை: காசி, கயாவுக்கு சுற்றுலா ரயில்

பதிவு செய்த நாள்22ஜூன்
2017
00:13

சென்னை: ஆடி அமாவாசையை ஒட்டி, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி.,யானது, காசி, கயாவுக்கு, சுற்றுலா சிறப்பு ரயில்களை இயக்குகிறது. 

இந்த சிறப்பு சுற்றுலா ரயில், மதுரையில் இருந்து, ஜூலை, 19ல், திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் சென்றால், உத்தர பிரதேச மாநிலம் காசியில், கங்கையில் புனித நீராடுவதோடு, காசி விஸ்வநாதரை தரிசிக்கலாம். பின், அலகாபாத், திரிவேணி சங்கமத்தில் நீராடுவதோடு, மதுராவில், கிருஷ்ணஜென்ம பூமியை தரிசிக்கலாம். 

பீஹார் மாநிலம், கயாவில் முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தலாம். உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவாரில் மானசதேவி கோவிலுக்கும், டில்லியில் குதுப்மினார், இந்தியா கேட், ராஜ்காட், தீன் மூர்த்தி பவன், இந்திரா காந்தி நினைவிடங்களுக்கும் சென்று வரலாம். 11 நாட்கள் சுற்றுலாவுக்கு ஒருவருக்கு, 10 ஆயிரத்து, 795 ரூபாய் கட்டணம்.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், சலுகை கட்டணத்தில் பயணிக்கலாம். மேலும் தகவல் தேவைப்படுவோர், சென்னை, சென்ட்ரல் ரயில் நிலைய ஐ.ஆர்.சி.டி.சி., மையத்திற்கு, 90031 40681 என்ற, மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025