Tuesday, June 27, 2017

மாடி வீட்டு காய்கறி தோட்டம் அமைக்க...வாய்ப்பு!40 சதவீதம் மானியம் அளித்து ஊக்குவிப்பு
பதிவு செய்த நாள்27ஜூன்
2017
01:36

பஞ்சுப்பேட்டை:மாடி வீட்டு காய்கறி தோட்டம் அமைப்பதற்கு, 40 சதவீத மானியத்தை, தோட்டக்கலை துறை அளிக்கிறது. இத்திட்டத்தை, மாவட்டத்தில், ஒன்பது வட்டாரங்களில் செயல்படுத்த, அந்த துறை முடிவு செய்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், தோட்டக்கலை மற்றும் பணப்பயிர்கள் துறை மூலம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், மாடி காய்கறி தோட்டம் அமைக்க, புதிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மாடி காய்கறி தோட்ட திட்டத்தின் கீழ், காய்கறி பயிரிடும் நபர்களுக்கு, எட்டு வகையான காய்கறி விதைகள், உயிர் உரங்கள், பதப்படுத்திய தென்னை நார் போன்ற இடு பொருட்கள் வழங்கப்பட உள்ளன.இதற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 6,000 பேருக்கு, மாடி தோட்ட காய்கறி பயிரிடும் பிளாஸ்டிக் கவர்களை, தோட்டக்கலை மற்றும் பணப்பயிர்கள் துறை ஒதுக்கீடு செய்துள்ளது.
ஒன்பது வட்டாரங்களுக்கு, இது பிரித்தளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை நகரை ஒட்டியிருக்கும் சிட்லப்பாக்கம் வட்டாரத்திற்கு, கூடுதல் பிளாஸ்டிக் கவர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

ஒரு பிளாஸ்டிக் கவரின் விலை, 522 ரூபாய். இதில், 40 சதவீத மானியம், 200 ரூபாய் போக, விவசாயிகளின் பங்களிப்பு, 322 ரூபாய். இதை செலுத்தி பிளாஸ்டிக் கவரை பெற்று செல்லலாம்.இதன் மூலமாக, வீடுகளில் தங்களுக்கு தேவையான, நஞ்சில்லாத காய்கறிகளை அவரவர் உற்பத்தி செய்து கொள்வதற்கு வழி பிறந்துள்ளது. மேலும், இயற்கை சூழ நிலை உருவாக்கி கொள்ளவும், மனதில் புத்துணர்வு பெறவும் வழி வகுக்கிறது.
அதிகாரிகளை நாடலாம்!தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், மாடி வீட்டு காய்கறி தோட்டம் அமைக்க விரும்புவோர், அந்தந்த வட்டார தோட்டக்கலை துறை அதிகாரிகளை நாடி, பயன் பெறலாம்.பி.இம்மானுவேல்தோட்டக்கலை துணை இயக்குனர், காஞ்சிபுரம்

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...