Thursday, June 1, 2017

மினிமம் பேலன்ஸ் கணக்கிடுவது எப்படி?ஓர் அலசல் !!

வங்கிக் கணக்கில் தினமும் ரூ.5000 வைத்திருப்பது அவசியமா?
வங்கிக் கணக்கில் 'குறைந்த சராசரி இருப்புத்' தொகையாக
ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1000 வரை வைத்திருக்க வேண்டியதை எஸ்பிஐ வங்கி கட்டாயமாக்கியுள்ளது.

இதே சில தனியார் வங்கிகள் உதாரணமாக ஐசிஐசிஐ வங்கியில் குறைந்த சராசரி இருப்புத் தொகையாக ரூ.10 ஆயிரம் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். தவறுவோருக்கு அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*இந்த விதிமுறை பலரால் சரியாக புரிந்து கொள்ளப்பட்டாலும், கணக்கு வைத்திருக்கும் சிலருக்கு இது மிகுந்த குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது* அதாவது, வங்கிக் கணக்கில் எப்போதுமே 5 ஆயிரம் ரூபாய் இருப்பு இருக்க வேண்டுமா? ஒரு நாள் கூட 5 ஆயிரத்தில் இருந்து 1000 ரூபாய் எடுத்துவிட்டாலும் அபராதம் விதிக்கப்படுமா? குறைந்த மாத ஊதியம் பெறுவோர் இதனை எப்படி எதிர்கொள்வது என்ற ஏராளமான கேள்விகள் எழுகின்றன.

⛱ முதல் விஷயம் என்னவென்றால், குறைந்த *சராசரி இருப்புத் தொகை ரூ.5000 என்பது சரியாக புரிந்து கொள்ளப்படாததே* இதற்குக் காரணம்.
அதாவது குறைந்த சராசரி இருப்புத் தொகை என்றால், *ஒரு மாதம் முழுவதும் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தின் சராசரி இருப்புத் தொகையாகும்.* வங்கிக் கணக்கில் ஒவ்வொரு நாளும் இருக்கும் பணத்தை அதாவது *30 நாளும் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தைக் கூட்டி அதனை 30 அல்லது 31 ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவுத் தொகைதான் குறைந்த சராசரி இருப்புத் தொகை*யாகும். இந்த ஈவுத் தொகை ரூ.10,000 ஆக இருந்தால், மாதக் கடைசியில் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.2000 அல்லது அதற்கும் கீழ் இருப்பு குறைந்தாலும், எந்த அபராதமும் விதிக்கப்படாது.

உதாரணத்துக்கு..
.
உங்களது சம்பளம் 30 ஆயிரம் ரூபாயாக இருந்து, *மாதத்தின் முதல் நாளில் இருந்து 5 நாட்களுக்கு அந்த 30 ஆயிரத்தை எடுக்காமல் விட்டுவிட்டால் ஒவ்வொரு நாளும் உங்கள் வங்கிக் கணக்கில் 30 ஆயிரம் ரூபாய் இருந்ததாகக் கணக்கில் எடுக்கப்படும். எனவே, 30 ஆயிரம் ரூபாய், 5 நாட்கள் வைத்திருந்ததால் 5 ஆல் பெருக்கப்படும். அது ரூ.1,50,000/-. இந்த தொகையை 30 ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவுத் தொகை ரூ.5000. எனவே, அந்த மாதத்தின் குறைந்தபட்ச சராசரி இருப்புத் முதல் 5 நாட்களிலேயே பூர்த்தியாகிவிடுகிறது.* அதன்பிறகு நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.5000க்கும் குறைவாகப் பணம் வைத்திருந்தாலும் அதற்காக அபராதம் வசூலிக்கப்படாது.

இந்த அடிப்படையில் தான் குறைந்தபட்ச இருப்புத் தொகை கணக்கிடப்படுகிறது. எனவே, *ஒவ்வொரு நாளும் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை* என்பது புரிந்து கொள்ளுங்கள். உங்கள் சம்பளத்தின் அளவைப் பொருத்து ஓரிரு நாட்கள் கூடுதலாகவோ, குறைவாக பணத்தை வைத்திருந்தாலே அபராதத்தைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை.

அதோடு, *மாநகராட்சிகளில் இயங்கும் வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே ரூ.5000 என்பது குறைந்த சராசரி இருப்புத்தொகை அவசியம். நகராட்சி மற்றும் கிராமப் புற வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு ரூ.3,000, ரூ.2,000, ரூ.1,000 என்பதுதான் குறைந்த சராசரி இருப்புத் தொகையாகும்.*

இது தவிர, வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கும் அதிகமாக இருப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் *சில சலுகைகள் வழங்கப்படுகிறது.*

அதாவது, எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.10ம், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஆனால், வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் இருப்பு இருந்தால், அவர்கள் *எஸ்பிஐயில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்காது.* அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருப்பு வைத்தால், பிற வங்கி ஏடிஎம்களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் பிடிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...