Tuesday, June 27, 2017

உ.பி.,யில் சுடப்பட்ட சென்னை வாலிபர் பலி

பதிவு செய்த நாள்26ஜூன்
2017
23:48


சென்னை: தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர் ஆதித்யகுமார், 31. சென்னையில் உள்ள, கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்தார். அதே நிறுவனத்தில், வேலை பார்த்த, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த, விஜயலட்சுமியை, 28, காதலித்து, மே மாதம் தான் மணந்தார். இருவரும், சென்னை, ராமாபுரத்தில் வசித்து வந்தனர்.ஜூன், 3ல், உத்தர கண்ட் மாநிலம், ஹரித்து வாரில் உள்ள, அத்தை வீட்டுக்கு, மனைவியுடன் ஆதித்யகுமார் சென்றார்.

உடன், நண்பர் ஷியாம் தேஜாவையும் அழைத்துச் சென்றார். சென்னையில் இருந்து, விமானம் மூலமாக டில்லி சென்ற இவர்கள், அங்கு வாடகைக்கு எடுத்த டூவீலரில், ஹரித்துவார் சென்றனர். பின், ஜூன், 17ல், புதுமண தம்பதி ஒரு டூ-வீலரிலும், மற்றொரு டூ-வீலரில், ஷியாம் தேஜாவும் டில்லி திரும்பினர். உத்தர பிரதேச மாநிலம், முசாபர் நகரில், ஹரித்துவார்- - டில்லி நெடுஞ்சாலையில், அவர்கள் சென்ற போது, எதிரே டூவீலரில் வந்த நபர்கள், ஆதித்யகுமாரை துப்பாக்கியால் சுட்டனர். காயமடைந்த அவர் மீரட்டில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, நேற்று முன்தினம் ஆதித்யகுமார் இறந்தார். அவரது மனைவி விஜய லட்சுமிக்கு எலும்பு முறிவுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 11.01.2026