Friday, June 9, 2017

இன்று வரதராஜபெருமாள் கோவில் கருட சேவை விழா காஞ்சீபுரத்தில் போக்குவரத்து மாற்றம்



காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் கருட சேவை விழா இன்று நடைபெறுவதையொட்டி காஞ்சீபுரத்தில் போக்குவரத்து மாற்றம்.
ஜூன் 08, 2017, 03:45 AM

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் கருட சேவை விழா இன்று நடைபெறுவதையொட்டி காஞ்சீபுரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி தெரிவித்துள்ளார்.

கருட சேவை விழா

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–

உலக பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. இன்று(வியாழக்கிழமை) கருட சேவை விழா நடக்கிறது இதையொட்டி காஞ்சீபுரத்தில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

* செங்கல்பட்டு, தாம்பரம் பகுதிகளில் இருந்து காஞ்சீபுரம் வரும் அனைத்து பஸ்களும், முத்தியால்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் வழியாக களியனூர், வையாவூர், பழைய ரெயில் நிலையம், ரெயில்வே ரோடு, சி.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி ரோடு வழியாக காஞ்சீபுரம் நகர பஸ் நிலையத்தை வந்தடைய வேண்டும். அதே வழியில் திரும்ப செல்ல வேண்டும்.

* வேலூர் மற்றும் அரக்கோணம் பகுதிகளில் இருந்து காஞ்சீபுரம் வரும் அனைத்து பஸ்களும் ஒலிமுகமது பேட்டை தற்காலிக பஸ் நிலையம் வந்து பயணிகளை இறக்கிவிட்டு அதே வழியில் வேலூர் மற்றும் அரக்கோணம் செல்லவேண்டும்.

சென்னையில் இருந்து...

* சென்னை, ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் இருந்து காஞ்சீபுரம் வரும் பஸ்கள், பொன்னேரிக்கரை, அப்பாராவ் தெரு சந்திப்பு, தாமல்வார் தெரு சர்ச், பூக்கடைசத்திரம், கிழக்கு ராஜவீதி வழியாக நகர பஸ் நிலையத்தை வந்தடைந்து பின்னர் பூக்கடை சத்திரம், கம்மாளத்தெரு, புதிய ரெயில் நிலையம் வழியாக செல்ல வேண்டும்.

* வந்தவாசி, செய்யார், உத்திரமேரூர் பகுதிகளில் இருந்து காஞ்சீபுரம் வரும் பஸ்கள் செவிலிமேடு சந்திப்பு வழியாக சென்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு செவிலிமேடு வழியாக வந்தவாசி, செய்யார் மற்றும் உத்திரமேரூர் செல்லவேண்டும்.

* வந்தவாசி, செய்யார் பகுதியிகளில் இருந்து காஞ்சீபுரம் வழியாக சென்னை செல்லும் பஸ்கள் செவிலிமேடு சந்திப்பு வழியாக காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள தற்காலிக பஸ் நிலையம் வந்து பின்னர் செவிலிமேடு, புறவழிச்சாலை, கீழம்பி வழியாக சென்னை செல்லவேண்டும்.

* சென்னையில் இருந்து காஞ்சீபுரம் வழியாக வந்தவாசி, செய்யார் செல்லும் பஸ்கள் பொன்னேரிக்கரை, வெள்ளைகேட், ஒலிமுகமதுபேட்டை தற்காலிக பஸ் நிலையம் வந்து பின்னர் கீழம்பி புறவழிச்சாலை வழியாக வந்தவாசி, செய்யார் செல்ல வேண்டும்.

தொழிற்சாலை வாகனங்கள்

* பல்வேறு தொழிற்சாலைகளின் வாகனங்கள் அனைத்தும் இன்று ஒருநாள் மட்டும் காஞ்சீபுரம் நகருக்குள் வருவதை தவிர்த்து நகருக்கு வெளியே நிறுத்தும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...