Monday, June 25, 2018


109வது பிறந்த நாள்: தாத்தா அசத்தல்

Added : ஜூன் 25, 2018 00:17



மதுரை: மதுரையை சேர்ந்த பெருமாள் தாத்தா 109வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். விளாங்குடி விவேகானந்தா நகர் பெருமாள் தாத்தா கூறியதாவது: 1910ல் உசிலம்பட்டி அருகே நடுப்பட்டியில் பிறந்தேன். 12 வயதில் மதுரை வந்தேன், 1936 மெஜூரா கோட்ஸில் வேலைக்கு சேர்ந்தேன். 1941 ராஜம்மாளை திருமணம் செய்தேன். தற்போது மனைவி இல்லை. சொத்து சேர்க்காத எனக்கு விலை மதிப்பில்லா சொத்துக்களாக 11 குழந்தைகள் பிறந்தன. இதில், 6 குழந்தைகள் இறந்து விட்டன. தற்போது 5 பிள்ளைகள், 13 பேரன்கள் என்னை குழந்தை போல கவனிக்கின்றனர். அதிகாலை 5:00 மணிக்கு எழுந்து 'வாக்கிங்' செல்கிறேன். உணவில் கூட கட்டுப்பாடு இல்லை. நினைத்ததை சாப்பிடுகிறேன்.உடம்புக்கு வயதானதே தவிர மனம் இளமையாகவுள்ளது. சந்தோஷ குடும்ப சூழ்நிலை ஆரோக்கியமாக வைத்து இருக்கிறது. அடுத்தாண்டு 110வது பிறந்தநாளில் சந்திப்போம் என்றார் சிரித்தபடி.

No comments:

Post a Comment

NEWS TODAY 19.01.2026