Monday, June 25, 2018

8 பேர் நகத்தை தான் வெட்டுவேன் : மன்சூர் பல்டி

Added : ஜூன் 25, 2018 00:53

சேலம்,: ''சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை போட வந்தால், எட்டு பேரின் நகத்தை வெட்டுவேன் என்று தான் சொன்னேன்,'' என, சிறையில் இருந்தபடி, வக்கீலிடம் நடிகர் மன்சூர்அலிகான் பேசியுள்ளார்.

சேலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில், 'சேலம் - சென்னை, எட்டு வழிச்சாலை போட வருவோரில், எட்டு பேரை வெட்டுவேன்' என, நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசமாக பேசினார். இது தொடர்பாக, மன்சூர் அலிகானை, தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.நடிகர் மன்சூர் அலிகான், சிறையில் இருந்து போனில், அவரது வக்கீல் மாயனிடம் பேசியதாவது:சிறை டெலிபோனில் இருந்து, மன்சூர்அலிகான் பேசுகிறேன். வெளியே எடுத்து விடுவீங்கல்ல. வெட்டுவேன் என்றால், நகத்தை வெட்டுவேன். முடியை வெட்டுவேன். கொலை பண்ணுவோம்னா சொன்னேன். சாதாரண வார்த்தை இது, இதற்கு போய், 'டார்ச்சர்' பண்றாங்க.நடிக்க விடாம பொழப்ப கெடுக்கறாங்க. கண்டிஷன் போட்டு அங்க, இங்கன்னு அனுப்பினா, நாசமாய் போய் விடுவேன். கண்டிஷன் என்றாலும் கோடம்பாக்கம், தி.நகருன்னு கேளுங்க.எனக்கு பணம் இல்லை. குழந்தைகளுக்கு காலேஜ் பணம் கட்ட கூட வழியில்லாமல் இருக்கேன். எப்படியும் ஜாமின்ல எடுத்துடுவீங்கல்ல. பார்த்துக்கோங்க; போட்டது போட்டபடியே கெடக்கு. குழந்தைகளை காலேஜ் சேர்க்காம வந்துட்டேன்; ரம்ஜான் கூட கொண்டாடவில்லை.இவ்வாறு அவர் பேசியதாக, வக்கீல் மாயன், தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 19.01.2026