Tuesday, June 26, 2018

'மாஜி' ராணுவத்தினர் வாரிசுகளுக்கு மருத்துவ படிப்பில் கூடுதல் இடங்கள்

Added : ஜூன் 26, 2018 04:05

சென்னை: அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 3,355; தனியார் கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 517 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. அதேபோல, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,095; தனியார் கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 690 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. மொத்தமுள்ள, 5,657 மருத்துவ இடங்களுக்கு, 43 ஆயிரத்து, 935 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.இதற்கான தரவரிசை பட்டியல், வரும், 28ல் வெளியிடப்படுகிறது. முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை, 1 முதல், 5ம் தேதி வரை நடைபெறுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு, 3 சதவீதமாக இருந்த ஒதுக்கீடு, 5 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு, ஏழு, எம்.பி.பி.எஸ்., - ஒரு, பி.டி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு, ஐந்து, எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்டு வந்தன. நடப்பாண்டில், 10, எம்.பி.பி.எஸ்., - ஒரு, பி.டி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.'ஆதார்' கட்டாயம்

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள், 'ஆதார்' அட்டையை எடுத்து வருவது கட்டாயமாகி உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 17.01.2025