தபால்துறை அஜாக்கிரதையால் தகர்ந்தது : ஏழை மாணவரின் மருத்துவர் கனவு
Added : ஜூன் 26, 2018 00:16
சிவகங்கை,: தபால்துறை அஜாக்கிரதையால் சிவகங்கையைச் சேர்ந்த ஏழை மாணவர் பாண்டிச்செல்வத்தின் மருத்துவர் கனவு தகர்ந்தது.சிவகங்கை அருகே காஞ்சிரங்காலைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வம். வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மகன் வசந்த். பிளஸ் 2 ல் 1,125 மதிப்பெண்கள் பெற்றார். 'நீட்' தேர்வில் 384 மதிப்பெண்கள் பெற்றார். ஓ.பி.சி, பிரிவினர் 96 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி என்பதால், மருத்துவ படிப்பு எளிதில் கிடைத்துவிடும் என நம்பிக்கையில் இருந்தார். மருத்துவப்படிப்பு விண்ணப்பத்தை ஜூன் 19 க்குள் சென்னை மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும்.அவர் ஜூன் 14 ல் காஞ்சிரங்கால் கிளை தபால் நிலையத்தில் விரைவு தபால் மூலம் அனுப்பினார். விண்ணப்பம் 9 நாட்கள் தாமதமாக ஜூன் 23 ல் இயக்குனரகத்திற்கு சென்றதால் நிராகரிக்கப்பட்டது. இதனால் வசந்த் அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து விசாரித்தபோது, சிவகங்கை கலெக்டர் வளாக தபால்நிலையத்தில், தபாலை தாமதமாக அனுப்பியது தெரியவந்தது. தபால்துறை அதிகாரிகள் அஜாக்கிரதையால் ஏழை மாணவரின் மருத்துவர் கனவு பறிபோனது.வசந்த் தாயார் ஞானஜோதி கூறுகையில், 'மருத்துவ கல்வி இயக்குனரக 'ஆன்லைனில்' பார்த்தபோது விண்ணப்பம் செல்லவில்லை என வந்தது. ஜூன் 18 ல் கேட்டபோது, இணையம் செயல்படவில்லை. தபால் சென்றுவிடும் என அதிகாரிகள் கூறினார். ஆனால் தாமதமாக அனுப்பி மகனின் வாழ்க்கையை வீணாக்கிவிட்டனர்,' என்றார்.
தபால்நிலைய அதிகாரி திருக்குமரன் கூறுகையில், 'விரைவுத் தபாலை பதிவு செய்த ஊழியர் தவறு செய்துள்ளார். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை,' என்றார்.

No comments:
Post a Comment