Tuesday, June 26, 2018

கல்லூரி மாணவர்கள் 17 பேர், 'சஸ்பெண்ட்'

Added : ஜூன் 26, 2018 05:31

மொடக்குறிச்சி: ஈரோடு மாவட்டம், எழுமாத்துாரில், பாரதியார் பல்கலையின், கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இங்கு, 1,900க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். 18ம் தேதி கல்லுாரி திறக்கப்பட்டதும், மாணவர்கள், இரு கோஷ்டிகளாக பிரிந்து, அடிதடி, ரகளையில் ஈடுபட்டனர். இதை, உதவி பேராசிரியர்கள் கண்டித்துள்ளனர்.இதனால், பணி முடிந்து வீட்டுக்கு சென்ற உதவி பேராசிரியர்களை வழிமறித்து, அவர்களது பைக் சாவியை பிடுங்கி, சில மாணவர்கள் மிரட்டினர். அது மட்டுமின்றி, கல்லுாரி நிர்வாகம், ஜீன்ஸ், கறுப்பு சட்டை, டீ சர்ட் மற்றும் பாக்ஸ் கட்டிங், தாடி, குறுந்தாடி, கலர் டையிங் அடித்து வர மாணவர்களுக்கு தடை விதித்திருந்தது.இதை மீறி, மாணவர்கள், முடி வளர்த்தும், பாக்ஸ் கட்டிங் செய்தும், ஜீன்ஸ் அணிந்தும் வந்தனர். கல்லுாரி ஒழுங்கு நடவடிக்கை குழு, ஒரு வாரமாக கண்காணித்து, முதல்வரிடம் புகார் அளித்தது. இதன்படி, பி.எஸ்சி., மூன்றாமாண்டு படித்த, 17 மாணவர்களை, கல்லுாரி நிர்வாகம், ஜூன், 22 முதல், ஜூலை, 6 வரை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 17.01.2025