பஸ் வசதி இல்லாததால் பரமக்குடி கல்லூரி மாணவிகள் தவிப்பு:கருவேலம் சூழ்ந்த பாதையில் பயணிக்கும் அவலம்
Added : ஜூன் 25, 2018 22:41
பரமக்குடி;பரமக்குடி கல்லுாரிக்கு போக்குவரத்து வசதியில்லாததால் மாணவிகள் கருவேல மரங்களுக்கு இடையே பயணிக்கும் நிலை உள்ளது.காரைக்குடி அழகப்பா பல்கலை உறுப்புக்கல்லுாரி பரமக்குடியில் 2012 ம்ஆண்டு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது. தொடர்ந்து ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் வேந்தோணி கால்வாய் பகுதியில் பல லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.பணிகள் நிறைவடைந்து திறக்கப்படாத கட்டடம் குறித்து கடந்த ஆண்டு தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியது. இதனையடுத்து உடனடியாககல்லுாரி திறக்கப்பட்டது.பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து கல்லுாரிக்கு போர்டிங் ரோடு வழியாக தண்டவாளத்தை கடந்து வேந்தோணி கால்வாய் ரோட்டில் செல்ல வேண்டும்.மற்றொரு வழியாக பஸ் ஸ்டாண்டில் இருந்து ஐந்து முனை ரோடு வழியாகமுதுகுளத்துார் ரோட்டில் இருந்து கால்வாய் பாலம் வழியாக செல்லமுடியும்.ஆனால் பஸ் போக்குவரத்து இல்லாததால் மாணவ, மாணவிகள் கல்லுாரிக்கு எதிரில் உள்ள சாக்கடை கால்வாயில் இறங்கி, கருவேல மரங்களுக்கு இடையேஆபத்தான சூழலில் செல்கின்றனர்.எம்.ஜி.ஆர்., நகர், ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் தண்டவாளங்களில் ஏறி, இறங்கி ரயில்வே ஸ்டேஷன் ரோடு, ஆர்ச் வழியாக செல்கின்றனர்.இக்கல்லுாரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், 13 நிரந்தர பேராசிரியர்கள், 15 ஆசிரியரல்லாதவர்கள், 20 கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளனர். விரைவில் அரசு கல்லுாரியாக மாற்றப்படவுள்ளது.எனவே மாணவிகளின் பாதுகாப்பு கருதி அரசு டவுன் பஸ்கள் மற்றும்மினி பஸ்களை கல்லுாரி வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:
Post a Comment