Monday, June 25, 2018


கோவிலில் ஆகம விதி மீறலா?
ஸ்ரீரங்கம் அர்ச்சகர்கள் மறுப்பு


dinamalar 25.06.2018

திருச்சி:'ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவிலில், ஆகம விதிகள் மீறப்படவில்லை' என, கோவில் அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர்.





மே மாதம், திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்குள், கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் வந்து சென்றனர். தொடர்ந்து, மே, 24ல், ரெங்கநாதர் கோவில் மூலஸ்தானத்துக்குள், செருப்பு வீசியதாக, ஒருவர் பிடிபட்டார்.

பக்தர்கள் அதிர்ச்சி

அடுத்து, 26ம் தேதி, வசந்த உற்சவத்தின் போது, நம்பெருமாள் எழுந்தருளும் வெட்டிவேர் பந்தல் தீப்பிடித்து எரிந்தது. இதனால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோவிலில் ஆகம விதிகள் மீறப்படுவதாக, குற்றம் சாட்டிய
ஸ்ரீரங்கம் ஆலய மீட்புக் குழுவினர், ஸ்ரீரங்கத்தில், கண்டன பொதுக் கூட்டம் நடத்தினர்.

கூட்டத்தில் பங்கேற்ற, மன்னார்குடி செண்டலங்கார ஜீயர், ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜ ஜீயர் மற்றும், பா.ஜ., தேசிய செயலர் எச். ராஜா ஆகி யோர்,'ஆகம விதிகளுக்கு முரணாக செயல்படும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், கோவிலை விட்டு வெளியேற வேண்டும்' என, வலியுறுத்தினர்.

கடந்த, 22ம் தேதி, ஸ்ரீரங்கத்துக்கு வந்த, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு, ரெங்கநாதர் கோவில் முன், பூர்ண கும்ப மரியாதை அளித்து, வரவேற்பு அளித்தனர். அப்போது, அர்ச்சகர்கள் நெற்றியில் இட்ட சந்தனத்தை, உடனடியாக ஸ்டாலின், சால்வையால் அழித்த சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியது.இதனால், கோவிலில் மீண்டும் ஆகம விதிகள் மீறப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இது குறித்து, தலைமை அர்ச்சகர் முரளிதரபட்டர் கூறியதாவது:ரெங்கநாதர் கோவிலில், ஆகம விதி கள் மீறப்படுவதாக சிலர் குற்றம் சாட்டு கின்றனர். சமூக வலைதளங்களிலும் இது பற்றிய கருத்துகள் பதிவிடப்படுகின்றன. இந்த குற்றசாட்டை மையப் படுத்தி, பொதுக்கூட்டமும் நடத்தி உள்ளனர்.

குற்றச்சாட்டில், எவ்வித உண்மையும் கிடை யாது. கோவிலில் ஆகம விதிகள் மீறப்பட வில்லை. மீறப்படுவதாக கூறுபவர்கள் அதை நிரூபிக்கட்டும்.

கோவில் நிர்வாகத்துக்கும், அறநிலையத்துறை வெளியேற வேண்டும், என கூறுபவர்களுக்கும் இடையே பிரச்னைகள் இருக்கலாம். அதை வைத்து, ஆகம விதிகள் மீறப்படுவதாக கூறு வது தவறு. இதனால், கைங்கர்யம் செய்பவர் கள் மன வேதனை அடைகின்றனர்.

இது பற்றி, அறநிலையத்துறை ஆணையரி டமும், நிர்வாகக் குழு தலைவரிடமும் தெரி விக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 19.01.2026