Friday, June 9, 2017

'நீட்' தேர்வுக்கு எதிரான வழக்கு : சென்னைக்கு மாற்றம்

பதிவு செய்த நாள்08ஜூன்2017 23:30

மதுரை: 'நீட்' தேர்வை ரத்து செய்து, ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில், மறு தேர்வு நடத்த தாக்கலான வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மாற்றியது.
மதுரை டி.ஆர்.ஓ.,காலனி ஜொனிலா உட்பட 9 பேர் தாக்கல் செய்த மனு:
இளங்கலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, 'நீட்' எனும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு மே 7 ல் நடந்தது. மாறுபட்ட வினாக்கள் கொண்ட வினாத்தாள்கள், பல்வேறு இடங்களில் வினியோகிக்கப்பட்டன. இது அதிர்ச்சியளிக்கிறது.

'நீட்' தேர்வு முடிவு தரவரிசை அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடந்தால், எங்களுக்கு பாதிப்பு ஏற்படும். தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

மே 7 ல் நடந்த தேர்வை ரத்து செய்து, அகில இந்திய அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில், புதிதாக 'நீட்' தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனு செய்திருந்தனர்.

திருச்சி சக்தி மலர்க்கொடி மற்றொரு மனு தாக்கல் செய்தார்.
மே 24 ல் நீதிபதி எம்.வி.முரளிதரன், 'நீட் தேர்வு முடிவை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. விசாரணை ஜூன் 12 க்கு ஒத்திவைக்கப்படுகிறது' என்றார்.

இதுபோன்ற வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த இரு மனுக்களையும் அங்கு சேர்த்து விசாரிக்கும் வகையில், உயர்நீதிமன்ற பதிவுத்துறை மாற்றியது.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...