Friday, June 9, 2017

டாக்டர்கள் பற்றாக்குறை : அரசுக்கு 'நோட்டீஸ்'

பதிவு செய்த நாள்08ஜூன்2017 23:33

சென்னை: அரசு மருத்துவமனைகளில், டாக்டர்கள் பற்றாக்குறை குறித்து விளக்கம் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி, தமிழக அரசு மருத்துவமனைகளில், ஒரு லட்சம் டாக்டர்கள் இருக்க வேண்டும். ஆனால், 18 ஆயிரம் பேரே உள்ளனர். இதனால், தினமும் ஏராளமான நோயாளிகள், சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.
அறுவை சிகிச்சைக்கும், மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து வெளியான செய்தி அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்தது.

இதையடுத்து, ஆணையம் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் இயங்கும் அரசு மருத்துவமனைகள்; சுகாதார மைய வசதிகள்; மாவட்ட, தாலுகா ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை; அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கை; காலி இடங்கள் குறித்த விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில், டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழக தலைமை செயலர், சுகாதாரத் துறை செயலர் ஆகியோர், எட்டு வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...