Friday, June 9, 2017

பிளாஸ்டிக்' அரிசி வர விடமாட்டோம்! : அமைச்சர் காமராஜ் திட்டவட்டம்

பதிவு செய்த நாள்09ஜூன்2017 00:06




சென்னை: ''தமிழகத்தில், 'பிளாஸ்டிக்' அரிசி, பிளாஸ்டிக் முட்டை போன்றவற்றுக்கு இடமே இல்லை. அவற்றை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவை மாநிலத்திற்குள் வராமல் தடுக்க, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்,'' என, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.

அவர் கூறியதாவது: தமிழகத்தில், அரிசி பஞ்சம் இல்லை. மத்திய அரசிடமிருந்து, மாதத்திற்கு, 2.96 லட்சம் டன் அரிசியை, விலை கொடுத்து வாங்கி, இலவசமாக வழங்குகிறோம். கூடுதல் தேவை என்றால், தேவைக்கேற்ப, 26 ஆயிரம் டன் அரிசி வாங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில், 3.14 லட்சம் டன் அரிசி வழங்கப்படுகிறது. ஒரு கிலோ அரிசி, 20 ரூபாய்க்கு வழங்கும் திட்டமும் தொடர்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை, அரிசி பற்றாக்குறைக்கு இடமில்லை. 'ஒரிஜனலில்' பிரச்னை இருந்தால் தான், 'டூப்ளிகேட்' வரும். அரிசி தட்டுப்பாடு இல்லாததால், பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை.

பிளாஸ்டிக் அரிசி குறித்து புகார்கள் வந்தால், உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரிசி முறையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வாங்கப்படுகிறது.தனியார் யாரும், பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை போன்றவற்றுக்கு, தமிழகத்தில் இடமில்லை. எனினும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' வழங்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. இது, மிகப்பெரிய திட்டம். நிதி பற்றாக்குறையிலும், 330 கோடி ரூபாய் ஒதுக்கி, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. அதில், தவறு உள்ளதாக புகார் உள்ளது.

'ஆதார்' கார்டில் விபரம், ஆங்கிலத்தில் உள்ளது. அதை, தமிழில் மொழி பெயர்க்கும் போது, சில தவறுகள் ஏற்பட்டன. இதை தவிர்க்க, தாலுகா அளவில், மூன்று பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. தவறுகள் சரி செய்யப்பட்ட பின்னரே, கம்ப்யூட்டரில் விபரம் பதிவேற்றம் செய்யப்படுகிறது.ஒரு மாதத்திற்குள், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி நிறைவடையும். மொத்தம், 1.91 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இதுவரை, ஒரு கோடி ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டு, மாவட்ட வாரியாக அனுப்பப்பட்டுள்ளன. ஸ்மார்ட் கார்டில் தவறு இருந்தால், 'ஆன்லைனில்' சரி செய்யலாம். அரசு இ - சேவை மையங்களுக்கு சென்றும், தவறுகளை திருத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...