Thursday, June 22, 2017

சென்னையில் மேலும் 100 மினி பஸ்கள்

பதிவு செய்த நாள்21ஜூன்
2017
23:44

சென்னை: ''சென்னையில் புதிதாக, 100 மினி பஸ்கள் இயக்க, ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கிராமங்களுக்கு, மினி பஸ்கள் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - ரத்தினசபாபதி: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதி, ஆவுடையார் நகரத்தில் இருந்து, ஒக்கூர் வழியாக ஏம்பல் வரை, பஸ்கள் இயக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்: அப்பகுதிக்கு, தற்போதுள்ள பஸ் வசதியே, போதுமானதாக உள்ளது.

ரத்தினசபாபதி: சென்னையில், மினி பஸ்கள் இயக்கப்படுவது போல, கிராமங்களுக்கும் மினி பஸ்கள் இயக்க வேண்டும். எம்.எல்.ஏ.,க்கள் கூறும் வழித்தடங்களில், குறைந்தது, ஐந்து மினி பஸ்களை இயக்க வேண்டும்.
அமைச்சர் விஜயபாஸ்கர்: சென்னையில், குறுகிய தெருக்கள் உள்ள பகுதிகளுக்கும், பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, மினி பஸ்களை இயக்க, ஜெ., உத்தரவிட்டார். அதன்படி, 200 மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், 100 மினி பஸ்களை இயக்க, ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கிராமங்களில் மினி பஸ்கள் இயக்குவது குறித்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.



No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025