Thursday, June 15, 2017

பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் புதுவை கவர்னர் மீது கோர்ட்டில் வழக்கு : சட்டப்பேரவையில் நாராயணசாமி அறிவிப்பு

2017-06-15@ 00:29:38




புதுச்சேரி : சென்டாக் முதுநிலை மருத்துவ படிப்பு மற்றும் பட்டய படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான அறிக்கையை முதல்வர் நாராயணசாமி புதுவை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். அதன் விவரம் வருமாறு: முதுநிலை மருத்துவ படிப்பில் மத்திய சுகாதாரத்துறையின் இட ஒதுக்கீட்டு கொள்கைகளை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. அரசு இடங்களான 162 இடங்களுக்கு 267 பேர் விண்ணப்பித்திருந்தனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கலந்தாய்வு நடத்தப்பட்டது. இரண்டு கட்ட கலந்தாய்வுகளில் 91 இடங்கள் புதுவை அரசின் ஒதுக்கீடாகவும், 118 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாகவும் ஆணை வழங்கப்பட்டது. பட்டய படிப்பில் 13 இடங்கள் நிரப்பப்பட்டது. அதன்படி 71 இடங்கள் காலியாக இருந்தன. நீட் மதிப்பெண் குறைக்கப்பட்டதால் மாணவர்கள் சேர்க்கை மீண்டும் நடத்தப்பட்டது.இதில் புதுவையை சேர்ந்த 10 பேர் சேர்க்கப்பட்டனர். இதன் மூலம் மொத்தம் 101 இடங்கள் அரசு இடங்கள் நிரம்பியது.

இந்த நிலையில் கவர்னர் சென்டாக் நடைபெறும் இடத்துக்கு சென்று அரசின் மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். 71 இடங்களை தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தாரை வார்த்து விட்டதாக பொய்யான தகவலை கூறி உள்ளார். அது மட்டுமல்லாமல் அதிகாரிகளு–்ம், அரசியல்வாதிகளும் ஊழல் செய்துள்ளார்கள். நான் தலையிட்டு அதை சரி செய்துள்ளேன் என கூறி உள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை அவரால் நிரூபிக்க முடியுமா? என சவால் விடுக்கிறேன். புதுச்சேரி மாணவர்களை திசை திருப்பி கலப்பட பொய்யை கூறிய கவர்னர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். சபாநாயகர் வைத்திலிங்கம்: இந்த விவகாரத்தில் உரிமை மீறல் பிரச்னை கொண்டு வருகிறீர்களா? முதல்வர் நாராயணசாமி: சென்டாக் விவகாரத்தில் மாணவர்களை பொதுமக்களை திசை திருப்பும் நோக்கத்தோடு ஊழல் முறைகேடு நடந்திருப்பதாக பொய்யான தகவல்களை கூறி வரும் கவர்னர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025