Thursday, June 15, 2017

தொடர் முகூர்த்தம் காரணமாக காய்கறிகள் விலை 30 சதவீதம் அதிகரிப்பு

2017-06-12@ 00:33:37




சேலம்: தொடர் முகூர்த்தம் காரணமாக, அனைத்து காய்கறிகளின் விலையும் 30 முதல் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரலில் கடும் வெயில் மற்றும் போதிய மழை இல்லாததால் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து சரிந்தது. அதே சமயம், கடந்த இரண்டு மாதமாக தொடர் முகூர்த்தம் காரணமாக காய்கறிகளின் தேவை அதிகரித்து, அனைத்து காய்கறிகளின் விலையும் 30 முதல் 40 சதவீதம் விலை கூடியுள்ளது.

சேலம் காய்கறி மார்க்கெட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரூ.10 க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி நேற்றைய நிலவரப்படி ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.30க்கு விற்ற கத்தரிக்காய் ரூ.50க்கும், ரூ.20 க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.40க்கும், ரூ.25க்கு விற்ற புடலங்காய் ரூ.40க்கும், ரூ.20க்கு விற்ற பாகல் ரூ.50க்கும், ரூ.30க்கு விற்ற அவரை ரூ.60க்கும் விற்கப்படுகிறது. இதேபோல், ரூ.15க்கு விற்ற முள்ளங்கி ரூ.30க்கும், ரூ.20க்கு விற்ற பச்சைமிளகாய் ரூ.40க்கும், ரூ.40க்கு விற்ற சின்னவெங்காயம் ரூ.100க்கும்,ரூ.12க்கு விற்ற பெரிய வெங்காயம் ரூ.20க்கும், ரூ.30க்கு விற்ற கேரட் ரூ.60க்கும், ரூ.15க்கு விற்ற உருளைக்கிழங்கு ரூ.25க்கும், 20க்கு விற்ற பீட்ரூட் ரூ.40க்கும், ரூ.30க்கு விற்ற நூல்கோல் ரூ.50க்கும், ரூ.30க்கு விற்ற பீன்ஸ் ரூ.60க்கும், ரூ.30க்கு விற்ற இஞ்சி ரூ.50க்கும்,ரூ.20க்கு விற்ற முட்டைகோஸ் ரூ.40க்கும் விற்கப்படுகிறது. ஆனி மாதத்தில் 5 முகூர்த்தங்கள் வருகின்றன. அதனால் இன்னும் ஒன்றரை மாதத்திற்கு இதே விலை தான் நீடிக்கும் என காய்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025