Thursday, June 22, 2017

பிரதமர் மோடியை 'வாட்ஸ்- ஆப்'பில் அவதூறாக விமர்சித்தவர் கைது
பதிவு செய்த நாள்22ஜூன்
2017
00:27

சின்னமனுார்: பிரதமர் மோடியை 'வாட்ஸ்-ஆப்'பில் அவதுாறாக விமர்சித்த நாம் தமிழர் கட்சி பிரமுகரை சின்னமனுார் போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், மார்க்கையன்கோட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெகன், 27. நாம் தமிழர் கட்சியின் நகர நிர்வாகியாக உள்ளார். இதே ஊரை சேர்ந்த பழனிக்குமார், பா.ஜ.,வின் மண்டல தலைவராக உள்ளார்.
மத்திய அரசு மற்றும் பா.ஜ., கட்சி செயல்பாடுகள் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிடுவதில் இருவரிடையே மோதல் உள்ளது. 'வாட்ஸ்-ஆப்'பில் ஜெகன், பா.ஜ., தொண்டர்கள் முதல் மாநில, தேசிய பொதுசெயலாளர் மற்றும் பிரதமர் மோடியை அவதுாறாக விமர்சித்து வீடியோ பதிவிட்டுள்ளார். இதனை 'சிடி'யில் பதிவு செய்த பழனிக்குமார் தலைமையிலான பா.ஜ., நிர்வாகிகள் சின்னமனுார் போலீசில் புகார் கொடுத்தனர். எஸ்.ஐ., முத்துப்பாண்டி, ஜெகனை கைது செய்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025