Friday, June 9, 2017

வேலைக்காக அழைத்து சென்று சித்ரவதை குமரி இன்ஜினியர்கள் 30 பேர் மலேசியாவில் தவிப்பு: மீட்டுவர பொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கை

2017-06-09@ 00:29:01




நாகர்கோவில்: மலேசியாவில் தவிக்கும் குமரி மாவட்டத்தை சேர்ந்த 30 இன்ஜினியர்களை மீட்க அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலகத்திலிருந்து வெளியான செய்திகுறிப்பு: குமரி மாவட்டம் நெய்யூரை அடுத்த நெல்லறைகோணம் பிஜோ, ஜாஸ்பர்புஷ், கல்குறிச்சி வாழவிளை தருண்ஜோஸ் உட்பட 30 பேர் இரணியலை சேர்ந்த ஒரு தனியார் ஏஜென்சி மூலமாக கடந்த ஜனவரி 30ம் தேதி மலேசியா சென்றுள்ளனர். இந்த 30 பேரும் பொறியியல் படிப்பு முடித்த, இவர்களுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் உணவும் கொடுக்காமல், மலேசியாவில் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க உறவினர்கள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் முறையிட்டனர். இதையடுத்து அவர் கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகத்தையும், டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு உடனடியாக 30 பேரையும் இந்தியா கொண்டுவர கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து கடந்த 7ம் தேதி பாதிக்கப்பட்ட நபர்களை கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அழைத்து விசாரித்து அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளை செய்து கொடுத்தனர். விரைவில் 30 பேரையும் இந்தியாவுக்கு அனுப்ப உள்ளதாக கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...