Friday, June 9, 2017

வழுக்கை தலை ஆண்களே பத்திரம்: தலையில் தங்கம் என்ற வதந்தியால் கொலை
dinakaran
2017-06-08@ 17:38:22



மிலாங்கே: ஆப்பிரிக்காவில் வழுக்கை தலை ஆண்களின் மண்டையில் தங்கம் இருக்கிறது என்று பரவி வரும் புரளியால் அவர்களை குறிவைத்து ஒரு கும்பல் கொலை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மொசாம்பிக் நாட்டில் தான் இந்த வதந்தி பரவி வருகிறது. மொசாம்பிக் நாட்டில் மக்கள் போதிய கல்வி அறிவு இல்லாமல் பின்தங்கிய நிலையில் உள்ளனர். மேலும் இங்குள்ள மக்களிடம் மூட நம்பிக்கை அதிகமாக உள்ளது. இதனால் அங்கு குற்றச்சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

இந்நிலையில் மிலாங்கே மாவட்டத்தில் சமீப காலமாக ஒரு வதந்தி பரவி வருகிறது. அதாவது வழுக்கை தலை ஆண்கள் மண்டையின் உள்பகுதியில் தங்கம் இருக்கும் என்று யாரோ வதந்தி பரப்பி உள்ளனர். இந்த வதந்தி காட்டுத்தீயாக பரவி வருகிறது. இதனால் மண்டையில் உள்ள தங்கத்தை எடுப்பதாக வழுக்கை தலை ஆண்களை குறிவைத்து ஒரு கும்பல் கொலை செய்து வருகிறது. மேலும் இதுவரை 3 பேர் இதற்காக கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வழுக்கை தலை ஆண்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அந்நாட்டு போலீசார் அறுவுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 29.01.2026