Tuesday, June 6, 2017

பல்ஸர் மற்றும் டொமினார் பைக்குகளின் விலைகளை உயர்த்தியது பஜாஜ்!
ராகுல் சிவகுரு

இந்தியாவின் டாப்-5 பைக் தயாரிப்பாளர்களுள் ஒருவரான பஜாஜ் ஆட்டோ, தனது பல்ஸர் சீரிஸ் மற்றும் டொமினார் பைக்குகளின் விலைகளை, ஆயிரம் ரூபாய் உயர்த்தியுள்ளது. இதற்கு அதிகரிக்கும் உற்பத்திச் செலவுகள், உதிரிபாகங்களின் விலை ஆகியவை காரணமாகச் சொல்லப்படுகிறது. தனது ஏற்றுமதி, உள்நாட்டு விற்பனை ஆகியவை சரிந்து வரும் நேரத்தில், இந்த விலை உயர்வு வெளியிடப்பட்டுள்ளது, பஜாஜுக்கு மைனஸாகவே பார்க்கப்படுகிறது.





பஜாஜின் பவர்ஃபுல் பைக்கான டொமினார், ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்குப் போட்டியாக, கடந்தாண்டு இறுதியில் களமிறங்கியது. பைக் விற்பனைக்கு வந்து 7 மாதங்களே நிறைவடையாத நிலையில், இதன் விலை 3 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்திருக்கிறது. அப்படி இருந்தும், கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க பைக்காகவே அது திகழ்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.


இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில், BS-IV இன்ஜின் - AHO ஹெட்லைட் - புதிய கலர் & கிராஃபிக்ஸ் ஆப்ஷன்களுடன் வெளியான 2017 பல்ஸர் சீரிஸ் பைக்குகளின் விலைகளை, ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, V - அவென்ஜர் - பிளாட்டினா - CT100 ஆகிய மற்ற பைக் மாடல்களின் விலையிலும், விரைவில் மாறுதல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொமினார் மற்றும் பல்ஸர் சீரிஸ் பைக்குகளின், மாற்றியமைக்கப்பட்ட சென்னை எக்ஸ் ஷோரூம் விலைப்பட்டியல் பின்வருமாறு;








Dominar 400 : Rs 1,41,677 (STD), Rs 1,55,927 (ABS)

Pulsar RS 200 : Rs 1,25,272 (STD), Rs 1,37,486 (ABS)

Pulsar NS 200 : Rs 99,391

Pulsar 220F : Rs 94,045

Pulsar 180 : Rs 82,104

Pulsar 150 : Rs 77,412

Pulsar 135 LS – Rs 62,729

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...