Monday, June 5, 2017

பள்ளிக் கல்வித்துறையில் 82 பேருக்குக் கருணை வேலை!
சகாயராஜ் மு



பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரிந்து பணிக் காலத்தில் காலமான ஊழியர்கள், ஆசிரியர்களின் 82 வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, ஏழு பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

பள்ளிக் கல்வித்துறையில் ஏற்படும் இளநிலை உதவியாளர் காலிப்பணியிடத்தில், 25 சதவிகிதப் பணியிடங்கள் தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர் சிறப்பு விதியின் கீழ், கருணை அடிப்படையில் நிரப்பப்பட்டுவருகிறது. அரசு ஊழியர், ஆசிரியரின் இறந்த தேதியின் அடிப்படையில், முன்னுரிமை நிர்ணயம்செய்யப்பட்டு உயிரிழந்த ஊழியர், ஆசிரியரின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டுவருகிறது.

2016-17ஆம் ஆண்டுக்கான இளநிலை உதவியாளர் உத்தேச காலிப் பணியிடங்களை நிர்ணயம்செய்து, அவற்றுள் 82 இளநிலை உதவியாளர் பணியிடங்களைக் கருணை அடிப்படையில் நிரப்பிட அரசாணை வெளியிட்டது. அதன்படி, பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான ஊழியர்கள், ஆசிரியர்களின் 82 வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் ஏழு பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின்போது, பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் த.உதயச்சந்திரன், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ஆர்.இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குநர் எஸ்.கார்மேகம் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...