Tuesday, June 6, 2017

கத்தார் விவகாரம் : என்ன ஆகும் ஏழு லட்சம் இந்தியர்களின் நிலை?
இரா. குருபிரசாத்

கத்தார் நாடு தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி, சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட ஏழு நாடுகள், தூதரகத் தொடர்புகள் உள்பட கத்தாருடனான அத்தனை தொடர்புகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த நான்கு நாடுகளுடனான அத்தனை உறவுகளிலிருந்தும் நீங்குமாறு கத்தாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கத்தார் நாட்டின் விமானங்கள், கப்பல்கள் அனைத்தும் இன்னும் இரண்டு வார காலத்தில் வெளியேற வேண்டும் என பஹ்ரைன் உத்தரவிட்டுள்ளது.



இனிவரும் காலங்களில், கத்தார் நாட்டின் எந்தவொரு விமானமோ, கப்பலோ மேற்கூறிய நாடுகளுக்கு வர அனுமதி இல்லை. தீவிரவாதத்திலிருந்து தங்கள் நாடுகளைப் பாதுகாக்க, கத்தார் வழியான எல்லைகளையும் மூடிவிட்டதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் தலைமையில் ஒன்றிணைந்துள்ள அரேபிய நாடுகள், தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கத்தார் ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தா போன்ற அமைப்புகளுக்கு உதவி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கத்தாரில் பணி புரியும் ஏழு லட்சம் இந்தியர்கள் இதனால் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அங்கு பணி புரியும் இந்தியர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து, அங்கு பணி புரியும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதனிடையே, இந்த விவகாரத்தால் இந்தியர்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக, நலமுடன் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...