Sunday, September 24, 2017

SRM med scam: SC orders quashing of FIR on Pachamuthu

TNN | Updated: Sep 23, 2017, 23:38 IST

Chennai: The Supreme Court has directed 136 parents/teachers who had lodged complaints against SRM University chairman TR Pachamuthu alias Parivendhar, to file affidavits in Madras high court saying they had no objection to quash the criminal proceedings against the educationist.

"On filing the affidadivts, the high court shall quash the proceedings arising out of the FIR," said a division bench of Justice AK Sikri and Justice Ashok Bhshan on Friday. Till the FIR is quashed the amount shall not be disbursed to the aggrieved parents, who must file individual affidavits.

After paying several lakh rupees to S Madhan for for PG medical seats in SRM university last year, the parents lodged cheating case against him as well as Pachamuthu since they got neither admissions nor refund of the money. Madhan staged a suicide drama and disappeared for months, before being arrested from a hideout in Tirupur.

In order to secure bail, Pachamuthu deposited Rs 75 crore, and another Rs 10 crore. However, last week, Madras high court refused to quash the case even though it asked aggrieved parents to furnish proof and take refund from out of the deposit. It also named a retired judge as administrator.

On Friday, however, the apex court recorded the submissions of the parents that they had no objection to quashing the case against Pachamuthu. It also made it clear that Pachamuthu too should be involved in the disbursal process so that he would be able to verify that only genuine persons had filed affidavits and received payments.
Cold war erupts between EPS and OPS

tnn | Sep 24, 2017, 04:50 IST

Chennai: Chief minister Edappadi K Palaniswami is waging a two-pronged war - one against T T V Dhinakaran and the other against O Panneerselvam - to strengthen his own position within the AIADMK. The fight against Dhinakaran is more open and head-on and the entire state machinery has been unleashed against T T V and a select few MLAs in his camp, whereas, the war against O Panneerselvam is covert and discreet for now.

Sources in the secretariat said OPS was being kept only as a figurehead deputy chief minister, without any power to take decisions. All major decisions in his department have to be routed through Palaniswami. OPS does not even have the freedom to choose officials in his own departments, leave alone influencing others. Certain postings in the police department continue to be a serious bone of contention between OPS and EPS. For instance, OPS was keen on getting a few officials shifted from their current posts for causing trouble to himself and his supporters before the merger of the two factions. Edappadi, however, has shot down the demand because those officials are crucial in his scheme of things. They played a major role in strengthening his position since February.

Panneerselvam, for the time being, has chosen not to precipitate matters further by pressing for his demands, said a source close to him. "His tendency is to wait for the right time to strike. But his supporters are impatient and are putting pressure on him to put his foot down and demand positions for them," he said.

In hind sight, the merger of the two AIADMK factions was a blunder, said a senior leader in the OPS camp. "OPS has been made deputy chief minister and there is a perception that he has been given due recognition. That he is only a figure head is perhaps not known to the outside world. 'Mafoi' K Pandiarajan, who was one of the main votaries of the merger, has been given an insignificant portfolio. Take the case of OPS supporters; before the merger of the two factions, EPS had filled up all party posts, and except K P Munusamy, no one from the OPS camp has been given any party position. The steering committee headed by OPS could have been expanded by inducting more leaders. But EPS has chosen to wait till the EC decides on the party name and symbol," said the leader.

The merger was a dire necessity for both OPS and EPS to stay afloat, especially when they were pitted against a marauding Dhinakaran. "Despite the merger, the cold war between the two continues because OPS was a chief minister in the past and he cannot digest the fact that he is deputy to Edappadi," said political commentator Gnani Sankaran. "Still, since they need to stay together for survival and to fight Dhinakaran, who is a bigger threat, their cold war may not get hot," said Sankaran.
உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் பெண் பலி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு

பதிவு செய்த நாள்24செப்
2017
01:05

சென்னை, உடல் பருமனை குறைக்க, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண், பரிதாபமாக இறந்தார். தவறான சிகிச்சையே இறப்புக்கு காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், விசாரணை நடத்த தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், சோகிழ்நாச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் அழகேசன், 52. இவரது மனைவி வளர்மதி, 46; மகன், சதீஷ், 26; மகள்கள் சரண்யா, 25, சங்கீதா, 21 என, நான்கு பேரும் உடல் பருமனால் அவதிப்பட்டு வந்தனர். இதில், வளர்மதி, 160 கிலோ; சதீஷ், 130 கிலோ; சரண்யா, 120 கிலோ,சங்கீதா, 90 கிலோவும் இருந்தனர்.

செயலிழந்து விடும்இவர்கள், சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, லைப் லைன் மருத்துவமனையில், எடை குறைப்பு சிகிச்சைக்கு ஆலோசனை பெற்றனர். 'உடல் எடை அதிகம் இருந்தால், இதயம் செயலிழந்து விடும்; உடல் குறைப்பு அறுவைச் சிகிச்சை பெறுவதுஅவசியம்' என, டாக்டர்கள் taரிவித்துள்ளனர்.ஒரு மாத பரிசோதனைகளுக்குப்பின், ஆக., 26ல், நான்கு பேருக்கும், அறுவை சிகிச்சை நடந்தது. வளர்மதிக்கு உடல் சீராகாததால், ஒன்பது முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. திடீரென வளர்மதிக்கு, காய்ச்சல்ஏற்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று அதிகாலை
பரிதாபமாக உயிரிழந்தார்.'தவறான சிகிச்சையே இறப்பிற்கு காரணம்' என, அவரது கணவர், அழகேசன், கீழ்ப்பாக்கம்போலீசில் புகார் செய்தார்.இதுகுறித்து, வளர்மதியின் மகள் சரண்யா
கூறியதாவது:

 'உங்கள் அம்மா இருக்கும் எடைக்கு, ஒரிரு ஆண்டுகள் தான் உயிருடன் இருப்பார். நீங்களும், 45 வயது வரை தான் உயிருடன் இருப்பீர்கள். உங்கள் உடல் பருமன் ஒருவித புற்றுநோய். அறுவை சிகிச்சை செய்தால் சரியாகிவிடும்' என, டாக்டர்கள் கூறினர்.

'நான்கு பேருக்கும் அறுவை சிகிச்சை செய்வதால், சலுகை தருகிறோம். மருந்துகளுக்கு, 80 ஆயிரம் ரூபாய் கட்டினால் போதும்' எனக்கூறி, எங்களை அறுவை சிகிச்சை செய்ய சம்மதிக்க வைத்தனர்.

நான்கு பேருக்கும், தனித்தனியாக அறுவை சிகிச்சை செய்வதாக கூறிய டாக்டர்கள், ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை செய்தனர். இதனால், எங்கள் நான்கு பேருக்குமே உடல் நிலை மோசமானது. அம்மா எங்களை விட்டு பிரிந்து விட்டார்.திருமணமாகாத நிறைய பேர், உடல் குறைப்புக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். என் அம்மாவின் மரணத்தை சுட்டிக்காட்டி, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இன்னொரு உயிர்பலி ஏற்பட்டு விடக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.
விசாரணைக்கு உத்தரவு

இதுகுறித்து, அரசின், மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் சேவை இயக்குனர், பானு கூறியதாவது: உடல் பருமன் அறுவை சிகிச்சை மேற்கொள்ள, மருத்துவமனைக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இறந்த வளர்மதிக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டதா என, ஆய்வு செய்ய, டாக்டர்கள் கிருஷ்ணராஜ், கமலக்கண்ணன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்  பட்டுள்ளது.இந்த குழுவின் அறிக்கை அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

நுரையீரல் பாதிப்பு காரணமா

'லைப் லைன்' மருத்துவ குழும தலைவர், ஜெ.எஸ்.ராஜ்குமார் அளித்துள்ள விளக்கம்:

எடை குறைப்பு அறுவை சிகிச்சையில் உள்ள ஆபத்துகள் குறித்து விபரித்த பின், வளர்மதி, அவரது மூன்று பிள்ளைகளுக்கும், அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை பெற்ற சில வாரங்களில், பிள்ளைகளின் எடை, 10 கிலோ குறைந்துள்ளது.வளர்மதி, சில ஆண்டுகளுக்கு முன், வேலூரில், தனியார் மருத்துவமனையில், செயற்கை சுவாச கருவி பொருத்தும் அளவுக்கு, ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்த விவரத்தை குடும்பத்தினர் தெரிவிக்கவில்லை.வளர்மதிக்கு சர்வதேச நெறிமுறைகளை பின்பற்றி, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், எட்டு லட்சம் ரூபாய் நிதி, நன்கொடையாளர்களிடம் இருந்து திரட்டப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பின், அவரது நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பால், சுவாச பிரச்னை ஏற்பட்டது. நிபுணவத்துவம் வாய்ந்த, 18 டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி,மாரடைப்பால் வளர்மதி இறந்தார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டாக்டர்கள் சொல்வது என்ன

அப்பல்லோ மருத்துவமனை உடல் பருமன் துறை நிபுணர், டாக்டர், ராஜ்குமார் பழனியப்பன் கூறியதாவது: உடல் பருமனை மூன்று விதமாக பிரிக்கலாம். மிதமான உடல் பருமன் உடையோர், உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுபாடுகள் வழியாக குறைக்கலாம். அடுத்த நிலையில் இருப்போருக்கு, மருந்துகள் மூலம் தீர்வு காணப்படும். மூன்றாவதாக அதிக உடல் பருமன் உடையோருக்கு, ஒன்பது விதமான அறுவை சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒவ்வொரு நோயாளிகளுக்கும், ஒவ்வொரு விதமான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளிகள், ஓராண்டுக்கு தொடர்ந்து
டாக்டர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.



பிளஸ் 2வில் 600 'மார்க்' கூட வாங்காத அரசு பள்ளி ஆசிரியர்கள்

பதிவு செய்த நாள்24செப்
2017
00:14

இடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் ௨ மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பால், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலர் கலக்கமடைந்து உள்ளனர்.
மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில், பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், தகுதித் தேர்வு தேவை என, வலியுறுத்தப்பட்டது. 

அதனால், தகுதித் தேர்வு முடிக்காத, லட்சக்கணக்கான ஆசிரியர்களை, பணியிலிருந்து வெளியேற்ற வேண்டிய நிலை, தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு ஏற்பட்டது.இந்த பிரச்னையை தீர்க்க, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, சலுகை வழங்கப்பட்டு
உள்ளது. 

அதன்படி, மத்திய அரசின், என்.ஐ.ஓ.எஸ்., எனப்படும், தேசிய திறந்த நிலைப் பள்ளியில், 'டிப்ளமா' ஆசிரியர் கல்வியியல் படிப்பில், ௨௦௧௯க்குள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு முன்னரே பணியில் சேர்ந்த, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
அதே நேரம், அரசு பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்களாக உள்ளவர்கள், பிளஸ் ௨வில், ௧,௨௦௦ மதிப்பெண்ணில், குறைந்தபட்சம், ௫௦ சதவீதமான, ௬௦௦ மதிப்பெண்ணாவது பெற்றுள்ளனரா என, ஆய்வு செய்ய உத்தர
விடப்பட்டு உள்ளது. 

ஆய்வின் முடிவில், ௫௦ சதவீத மதிப்பெண் பெறாத ஆசிரியர்களை மட்டும், தேசிய திறந்தநிலைப் பள்ளியில், 'டிப்ளமா' கல்வியியல் படிப்பில் சேர்க்க,
கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.

இந்த நடவடிக்கையால், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். 

மேலும், ௫௦ சதவீத மதிப்பெண் கூட பெறாமல், குறுக்கு வழியில் யாரும் ஆசிரியர் படிப்பு முடித்தனரா என்றும், கல்வித் துறையில் விசாரணை துவங்கி உள்ளது. 

அதனால், 'பிளஸ் ௨ சான்றிதழ் சரிபார்ப்பு கூடாது' என, தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கி உள்ளனர். - நமது நிருபர் -

வருமான வரித்துறையினர் மூன்று நாட்களாக நடத்திய சோதனையில், 'மாஜி' அமைச்சர் 

செந்தில் பாலாஜியின் சொந்தங்கள் பல்வேறு அட்டகாசங்களில் ஈடுபட்டு,60 கோடி ரூபாய்க்கு மேல், வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரிய வந்து உள்ளது. பினாமிகள் பெயரில் இருந்த, 10 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிக் கணக்குகள் அனைத்தையும் முடக்கிய வரித்துறை, அவை யாருடையன என,'கிடுக்கிப்பிடி'விசாரணையை துவக்கி உள்ளது.



கரூரைச் சேர்ந்தவர், அ.தி.மு.க., மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி. தினகரன் ஆதரவாளரான இவரின், எம்.எல்.ஏ., பதவி, சமீபத்தில் பறிக்கப்பட்டது.இந்நிலையில், கரூரில் உள்ள அவரின் நெருங்கிய நண்பர்களின் நிதி நிறுவனங்கள், வீடுகள், அலுவலகங்களில், 21ம் தேதி காலை, வருமான வரித்துறை சோதனை துவங்கியது.

பல குழுக்கள்

சென்னை, திருச்சி, கோவை மற்றும் மதுரையைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள், பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர்.சட்டசபை தேர்தலின் போது, செந்தில் பாலாஜியின், தேர்தல், வரவு - செலவுகளை கவனித்ததாக கூறப்படும், கரூர், 'ஆர்த்தி ஏ டிரேட்'உரிமையாளர்கள் சாமிநாதன்,

முன்னாள், ஜெ., பேரவை நிர்வாகி, மனோகரன், 'ஆஸி டெக்ஸ்' உரிமையாளர்கள்,தியாகராஜன், செல்வராஜ் ஆகியோரின் அலுவலகம், வீடுகளில் சோதனை நடந்தது.

மேலும், அ.தி.மு.க., முன்னாள் நகர அவைத் தலைவர், சரவணன், சாயப்பட்டறை உரிமையாளர், சுப்பிரமணியன்,'கொங்கு மெஸ்' உரிமையாளர், சுப்பிரமணியன், ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் உள்ளிட்ட உறவினர்கள், நண்பர்கள்வீடுகள், நிதி நிறுவனங்கள், அலுவலகங்களில்மூன்றாவது நாளாக நேற்று சோதனை நடந்தது.

நேற்று மாலை, ஐந்து இடங்களில் சோதனை தொடர்ந்தது. சோதனையில், 60 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, வருமான வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டு உள்ளது.ஆவணங்கள் ஆய்வு இது குறித்து, தமிழக வருமான வரித்துறை புலனாய்வு தலைமையக அதிகாரிகள் கூறியதாவது:

கரூரில், ஆகஸ்டில் ஏழு நிதி நிறுவனங்களில், வருமான வரி சோதனை நடந்தது. அதன் தொடர்ச்சியாக, மூன்று நாட்களாக, ஒன்பது நிதி நிறுவனங்கள், அவற்றின் உரிமையாளர்
களுக்கு சொந்தமான அலுவலகங்கள், நண்பர்கள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடந்தது.இதில், சிக்கிய ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அதில், 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான, வருமான வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ரொக்கமாக, 1.2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சில நிறுவனங்கள், 'சீல்' வைக்கப்பட்டுள்ளன.

வரித்துறை சோதனைக்குள்ளான பலர்,

தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களின் பெயர்களில், வங்கிகளில் போலி கணக்கு துவங்கி, பணப் பரிவர்த்தனை மேற்கொண்டு உள்ளனர். அவ்வாறு, 30க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளில் சேமிப்பாக, 10 கோடி ரூபாய் இருந்தது. இந்த கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.

பினாமிகள் யார் யார்; அதன் பின்னணியில் உள்ளோர் குறித்தும், விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் மீது, 'பினாமி' பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். சில நிறுவனங்களுக்கு, 'சீல்' வைக்கப்பட்டு உள்ளது. சோதனை இன்னும் நிறைவடையவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிக்கிய ஆடிட்டர்!

மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்தங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதும், பினாமிகள் பெயரில் பணம் பதுக்கி அட்டகாசம் செய்தது தொடர்பாகவும் வரித்துறையினர், 'கிடுக்கப்பிடி' விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களின் வரி ஏய்ப்புக்கு, ஆடிட்டர் ஒருவர் உதவியது தெரிய வந்துள்ளது. இவர் மீதும், நடவடிக்கை பாய உள்ளது.

'வருமான வரித்துறை சட்டம், 278ன்படி, வருமான வரி ஏய்ப்புக்கு உதவும் ஆடிட்டர்களுக்கு, ஆறு மாதம் முதல், ஏழு ஆண்டுகள் வரை, சிறைத்தண்டனை அளிக்க, சட்டத்தில் வழி உண்டு. அவரது, அங்கீகாரம் ரத்தாகவும் வாய்ப்புள்ளது' என, வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

- நமது சிறப்பு நிருபர் -

'மாஜி' செந்தில் பாலாஜிக்கு இறுகுகிறது வளையம்
பதிவு செய்த நாள்23செப்
2017
22:36

கரூர், கரூரில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானோரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைகளில், ஏராளமான ஆதாரங்கள், ஆவணங்கள் சிக்கியுள்ளன; இதன் அடிப்படையில், செந்தில்பாலாஜியிடம் விசாரணை நடக்க உள்ளது.
கடந்த, 21 முதல், கரூரில், தினகரன் ஆதரவாளரான, முன்னாள் அமைச்சர், செந்தில்பாலாஜியின் உறவினர்கள், நெருக்கமானோர், வருமானவரித்துறை சோதனையில் சிக்கியுள்ளனர். இவர்களின், ஜவுளி நிறுவனம், நிதி நிறுவனங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று காலை, 10:00 மணி முதல், ஆர்த்தி ஏ டிரேடர்ஸ் உள்ளிட்ட பல இடங்களில், மூன்றாவது நாளாக சோதனை நடந்தது. கடந்த, மூன்று நாட்களாக நடந்த சோதனையில், 60 கோடி ரூபாய் அளவுக்கு, வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக தெரிய
வந்துள்ளது. மேலும், மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், கரூர் அருகே, ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள ஜவுளி நிறுவனம், அதே பகுதியில் உள்ள, அவருடைய தம்பி, அசோக்குமார் வீடு மற்றும் உதவியாளர்களிடம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தவில்லை.

செந்தில் பாலாஜி தேர்தலில் போட்டியிட்டபோது, பணம் பட்டுவாடா செய்ததாக கூறப்படும் தியாகராஜன், மருத்துவக் கல்லுாரிக்கு நிலம் தானமாக
வழங்கிய, 'நவ்ரங் டையிங்' உரிமையாளர், சுப்பிரமணி, அரசு கான்ட்ரக்டர், சங்கர் ஆனந்த், நண்பர் சரவணன் ஆகியோரிடம், வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.குறிப்பாக, அரவக்குறிச்சி தேர்தலின் போது, செலவு செய்யப்பட்ட தொகை குறித்த விபரத்தை, செந்தில் பாலாஜியின் நண்பர்களிடம், வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரித்துள்ளனர். விசாரணையின் போது கிடைத்த தகவல்கள், அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதன் அடிப்படையில், அடுத்து, செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த, வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.

தினகரன் அணி நிர்வாகியின் நிறுவனத்துக்கு, 'சீல்'

கரூரில், தினகரன் அணியின் நிர்வாகி சரவணனின், நிதி நிறுவனத்துக்கு, வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளரும், தினகரன் அணியின், கரூர் மாவட்ட துணை செயலாளருமாகிய சரவணன் வீட்டில், நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள், 'ரெய்டு' நடத்தினர்.

அதை தொடர்ந்து, கரூர்-திண்டுக்கல் சாலை, லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில், சரவணனுக்கு சொந்தமான நிதி நிறுவனத்துக்கு, வருமான வரித்துறை துணை இயக்குநர் சந்திர மவுலி தலைமையிலான அதிகாரிகள், நேற்று அதிகாலை, 'சீல்' வைத்தனர். இந்த நிறுவனத்தில் இருந்த ஆவணங்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.



ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்! - நவராத்திரி ஸ்பெஷல்-4
பதிவு செய்த நாள்
செப் 23,2017 18:51


நவ எனும் சொல், மிக சிறப்பு வாய்ந்தது. இதற்கான பொருள் இரண்டுமே, பொருத்தமாய் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. ஒன்று, ஒன்பது; மற்றொன்று புதியது. ஆக, இந்த நவராத்திரியை, ஒன்பது ராத்திரிகள் என்று பொருள் கொள்வதைவிட, புதிய ராத்திரிகள் என்று பொருள் கொண்டு பார்க்க வேண்டும்.

சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்ற வரிசைப்படி பார்த்தால், முதலில் பிரம்மா, பின், விஷ்ணு, முடிவில், சிவன் இம்மூவரின் துணைவியர் முறையே சரஸ்வதி,லட்சுமி, துர்க்கை என்று தான் வர வேண்டும். ஆனால், நவராத்திரியின்போது, இந்த வரிசை மாற்றமடைந்து, துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்றானது. மலைமகளான துர்க்கையே, முதல் மகளாக இருப்பதால், நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும், துர்க்கை இடம் பெற்று நம் துயர் துடைக்கிறாள்.

ஆன்மாவை, இறைவன்பால் வழிப்படுத்த, திருவருள் தான் துணை நிற்கிறது. இந்த திருவருட்சக்தி தான் சித்சக்தி, பராசக்தி, ஆதிபராசக்தி எனப்படுகிறது. இதில், ஆதிபராசக்தி தான் துர்க்கையாகும்.

முதல் மூன்று ராத்திரிகளிலும் அந்த துர்க்கையை வழிபட்டு மங்கலத்தையும், அருளையும், ஞானத்தையும் பெற்ற நாம், நான்காம் நாளான இன்று முதல், மூன்று நாட்களுக்கு மஹாலட்சுமியை வழிபட, ஆயத்தமாகிறோம்.

வழிபாடு முறை

அம்பாள்:
வைஷ்ணவி
வாகனம்:
கருடன்
நைவேத்யம்:
புளியோதரை, பானகம்
மலர்கள்:
செந்தாமரை,ரோஜா
பூஜை நேரம்:
காலை: 8:00 - 9:00
மாலை: 6:00 7:00
பால் பாயாசம்,
அவல் பாயாசம், கேசரி வினியோகிக்க வேண்டும்.
தாம்பூலம்:
9 அல்லது 11 வகை
கொடுக்கப்பட வேண்டும்.
ராகம்: காம்போதி
வணங்கவேண்டியவர்கள்:
பூசம், அனுஷம், உத்திரட்டாதி
திசை புத்தி நடப்பவர்கள்:
செவ்வாய் திசை அல்லது புத்தி
சிறப்பு: மங்கள காரியங்கள்
நம் வீட்டில் எந்தவிதமான தடங்கலும் இன்றி நடைபெற, நான்காம் நாளான இன்று
விரதம் இருத்தல் நலம்.
மாடுகள் வாங்க அதிகாரிகள் ஆந்திரா பயணம்

பதிவு செய்த நாள்23செப்
2017
18:45

தமிழகத்தில், பயனாளிகளுக்கு இலவசமாக கறவை மாடு வழங்கும் திட்டத்திற்கு, மாடுகளை வாங்குவதற்காக, அதிகாரிகள், ஆந்திரா சென்றுள்ளனர்.

தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி அமைந்து, ஆறு ஆண்டுகளாக, மாநிலம் முழுவதும், பெண்களுக்கு, இலவசமாக, ஆடு மற்றும் கறவை மாடுகள் வழங்கப்படுகின்றன. 

தமிழகம் முழுவதும், 2016ல், கடும் வறட்சி நிலவியதால், இலவச, ஆடு, மாடு வழங்கும் திட்டம், தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சில இடங்களில், மீண்டும் மழை பெய்ய துவங்கியதால், இத்திட்டங்களுக்காக, பெண் பயனாளிகளை தேர்வு செய்யும் பணி துவங்கியது. இதற்காக, மாடுகள் வாங்க, அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து, கால்நடைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
திட்டத்தின் கீழ், 12 ஆயிரம் பெண்களுக்கு, கலப்பின - ஜெர்சி பசு மாடுகள் வாங்க வேண்டும். ஒரு மாட்டிற்கு, 35 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
மாடுகளை வாங்க, அதிகாரிகள், ஆந்திரா மற்றும் கர்நாடகாவிற்கு சென்றுள்ளனர். அக்., முதல், பயனாளிகளுக்கு, மாடுகள் வழங்கப்படும்.இதேபோல, இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தில், 1.5 லட்சம் பெண்களுக்கு, தலா, நான்கு ஆடுகள் வழங்கப்பட உள்ளன. ஆடுகள், தமிழகத்திற்குள் தான் வாங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர். -- நமது நிருபர் -
ராமமோகன ராவ் இம்மாதம் ஓய்வு

பதிவு செய்த நாள்24செப்
2017
00:40




சென்னை, பல்வேறு சர்ச்சையில் சிக்கிய, முன்னாள் தலைமை செயலர் ராமமோகன ராவ், இம்மாதம் ஓய்வு பெறுகிறார்.

ஆந்திராவைச் சேர்ந்தவர் ராமமோகன ராவ். 1985ல், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பொறுப்பேற்றார். தற்போது, திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். இவர், 2011 முதல், 2016 வரை, முதல்வராக இருந்த, ஜெ.,வின் செயலராக பணியாற்றினார்.

கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்றது. ஜெ., முதல்வரானார். அப்போது, தலைமைச் செயலராக, ராமமோகன ராவ் நியமிக்கப்பட்டார். ஜெ., மறைவுக்கு பின், ராமமோகன ராவ் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

சென்னை, தலைமை செயலகத்தில், அவரது அறையிலும், சோதனை நடந்தது. அதைத் தொடர்ந்து, தலைமை செயலர் பதவியில் இருந்து, அவர் நீக்கப்பட்டார். அத்துடன், அவர் மீது, பல்வேறு புகார்கள் எழுந்தன. சர்ச்சைகளில் சிக்கிய ராமமோகன ராவ், இம்மாதம் ஓய்வு பெறுகிறார்.
நவ திருப்பதி கோவில்களில் சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்24செப்
2017
00:34


திருநெல்வேலி, பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தின், முதல் சனிக்கிழமையான நேற்று, நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நவ திருப்பதி கோவில்களிலும், நேற்று அதிகாலை, 5:௦௦ மணிமுதல் இரவு வரை சிறப்பு பூஜைகள், ஆராதனை நடந்தது.

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில், நத்தம் விஜயகான பெருமாள் கோவில், திருப்புளிங்குடி காசினிவேந்தர் பெருமாள் கோவில் பெருங்குளம் மாயகூத்தர் கோவில், இரட்டை திருப்பதியான அரவிந்த லோசன்கோவில்களில், பக்தர்கள் திரண்டனர்.
34 பைசாவுக்கு 'செக்' ரூ.40 செலவில் தபால்

பதிவு செய்த நாள்23செப்
2017
22:58

-கொடைக்கானல், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. கோழி இறைச்சிக்கடை நடத்துகிறார். தனியார் தொலைத் தொடர்பு நிறுவன 'போஸ்ட் பெய்ட்' இணைப்பு வாடிக்கையாளர். கடந்த மாதம் இவர் 'பிரீ பெய்ட்' இணைப்புக்கு மாறினார்.

இந்நிலையில் செப்.5ம் தேதி அவருக்கு, அந்த நிறுவனத்தில் இருந்து கூரியர் தபாலில் 'செக்' வந்தது. அதில், '34 பைசா' என எழுதப்பட்டிருந்தது.இதுதொடர்பாக அவர் கூறியதாவது: போஸ்ட் பெய்ட் கட்டணம் செலுத்தியதில், மீதமிருந்த 34 பைசா எனக்குத் தருவதற்காக ரூ.40 செலவு செய்து கூரியரில் 'செக்' அனுப்பி உள்ளனர். கணக்கு வழக்கில் தாங்கள் சரியாக இருப்பதாகக் காட்ட அந்நிறுவனம் இப்படி 'செக்' அனுப்பியிருக்கும், என்றார்.


தபால் நிலையங்களில் சிறுசேமிப்பு கணக்குகள் காலாவதி அக்.31க்குள் புதுப்பிக்க வாய்ப்பு

பதிவு செய்த நாள்23செப்
2017
22:46

சிவகங்கை, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 350 தபால் நிலையங்களில் காலாவதியாகி விட்ட 50 ஆயிரம் அஞ்சலக சிறுசேமிப்பு கணக்குகளை வரும் அக்., 31க்குள் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.வங்கிகளை போல் அஞ்சலகங்களிலும் அஞ்சலக சேமிப்பு கணக்கு, 5 ஆண்டு வரையிலான அஞ்சலக கால வைப்பு நிதி, அஞ்சலக தொடர் வைப்பு திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 'பொன் மகன்' பொது வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி கணக்கு வைப்பு திட்டத்ததில் 'செல்வ மகள்' சேமிப்பு திட்டம் மற்றும் கிஸான் விகாஸ் பத்திரம் ஆகிய 9 சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இத்திட்டங்களில் குறைந்தபட்சம் ரூ.20 செலுத்தி சேமிப்பு கணக்கை துவங்கலாம்.

 சிறுசேமிப்பு திட்டங்களுக்கு ஏற்ப வட்டி விகிதங்கள் மாறுபடும். கடந்த ஆண்டு அஞ்சலக சிறுசேமிப்பு திட்டத்தின் மூலம் ரூ.20 ஆயிரத்து 737 கோடியே 29 லட்சம் வசூலானது. இதில் பொதுமக்களுக்கு திரும்ப கொடுத்த தொகை 17 ஆயிரத்து 227 கோடியே 19 லட்சமாகும்.

அஞ்சலக சிறுசேமிப்பு கணக்குகளில் தொடர்ந்து 3 ஆண்டு முதலீடு செய்து வந்தால், கடன் பெறும் வசதி உள்ளது. அதேபோல் தொடர்ந்து 3 ஆண்டு பணம் செலுத்தவோ, எடுக்கவோ இல்லாமல் இருந்தால், அந்த சிறுசேமிப்பு கணக்குகள் காலாவதியாகி விடும். அத்தகைய கணக்குகளில் ஏற்கனவே இருந்த தொகையை திரும்ப எடுப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. காலாவதியான சிறுசேமிப்பு கணக்குகளை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள அஞ்சல்துறை புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சிவகங்கை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் சிவநாதன் கூறியதாவது:

மத்திய அரசு எடுத்த பணமதிப்பு குறைப்பு நடவடிக்கைக்கு பிறகு பொதுமக்கள் அஞ்சலக சேமிப்புகளில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை பெண்களே
இத்திட்டத்தில் அதிகளவு உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் 350 தபால் நிலையங்கள் உள்ளன. இவற்றில் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் 50 ஆயிரம் அஞ்சலக சிறுசேமிப்பு கணக்குகள் காலாவதியாகி விட்டன. அவற்றை வரும் அக்., 31 வரை புதுப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதுவரை புதுப்பிக்காதவர்கள் அருகிலுள்ள அஞ்சலகங்களையோ, சிறுசேமிப்பு கணக்கு வைத்திருக்கும் அஞ்சலகங்களையோ தொடர்பு கொண்டு புதுப்பித்து கொள்ளலாம் என்றார்.
மகளுக்கு, 'ஐ போன்' வாங்க சிங்கப்பூர் சென்ற தந்தை

பதிவு செய்த நாள்
செப் 23,2017 20:42



புதுடில்லி,:புகழ்பெற்ற, 'மொபைல் போன்' தயாரிப்பு நிறுவனமான, 'ஆப்பிள்' சமீபத்தில், 'ஐ போன் - 8, 8 பிளஸ்' ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. இவை, குறிப்பிட்ட நாடுகளில் உள்ள, 'ஆப்பிள்' நிறுவனத்தின், நேரடி விற்பனை கடைகளில் மட்டுமே, முதற்கட்டமாக அறிமுகமானது.

தென்கிழக்கு ஆசிய நாடான, சிங்கப்பூரில் உள்ள, ஆப்பிளின் கடையில், நேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டது. உள்ளூர் மக்களுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், 13 மணி நேரம் வரிசையில் காத்திருந்து, புதிய, ஐ போனை வாங்கிச் சென்றனர். நம் நாட்டைச் சேர்ந்த, தொழிலதிபரான, ஆமின் அகமது தோலியாவும், 43, சிங்கப்பூர் சென்று, புதிய போனை வாங்கி உள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:என் மகளுக்கு, திருமண பரிசாக, 'ஐ போன் - 8 பிளஸ்' வாங்க முடிவு செய்தேன். இதற்காக, சிங்கப்பூர் வந்தேன். எனக்கு ஒன்றும், என் மகளுக்கு ஒன்றும் என, இரண்டு போன்கள் வாங்கினேன்; மகிழ்ச்சியாக உள்ளது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததால், சோர்வு ஏற்பட்டது; எனினும், என் மகளின் மகிழ்ச்சிக்காக, இதை ஏற்றுக்
கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
அங்கீகாரம் பெறுவதில் அலட்சியம் விதிமீறும் மழலையர் பள்ளிகள்

பதிவு செய்த நாள்24செப்
2017
03:48

அங்கீகாரம் பெறவேண்டும் என்ற அரசு உத்தரவை, அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், அடிப்படை வசதியற்ற நிலையில் மழலையர் பள்ளிகள் செயல்படும் நிலை நீடிக்கிறது.

தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள், துவக்க நிலை அங்கீகாரம் பெறுவதோடு, மூன்று ஆண்டுகளுக்கு, ஒரு முறை தொடர் அங்கீகாரமும் பெற வேண்டும். நிறுத்தி வைப்புபோதிய உள்கட்டமைப்பு வசதியில்லாத பள்ளிகளுக்கு, தொடர் அங்கீகாரம் வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.அனைத்து வகை கல்வி நிறுவனங்களும் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற, உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை பின்பற்றி, கடந்த, 2015ல், மழலையர் பள்ளிகளும் அங்கீகாரம் பெற வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது.

ஆனால், மழலையர் பள்ளி துவக்கப்படுவது, சமீப காலமாக அதிகரித்து உள்ளது. ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் வண்ண படங்கள் வரைந்து, 'ப்ளே ஸ்கூல்' பள்ளியாக மாற்றி விடுகின்றனர்.இப்பள்ளிகள் நடத்தப்படுவது குறித்து, தொடக்கக்கல்வித்துறைக்கு தகவல் கூட தெரிவிப்பதில்லை.

யு.கே.ஜி., வரையிலான வகுப்புகள் மட்டுமே இப்பள்ளிகளில் நடத்தப்படுவதால், பெற்றோரும் அங்கீகாரம் குறித்து கேள்வி கேட்பதில்லை.அலட்சியம்இது குறித்து, தொடக்கக் கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில், அங்கீகாரம் பெறாதவற்றை மூடுவதற்கே, பல்வேறு தடைகள் வருகின்றன.

நீதிமன்ற ஆணை, அரசியல் தலையீடு உள்ளிட்டவற்றை துணையாக கொண்டு, ஏராளமான எண்ணிக்கையில், அங்கீகாரம் பெறாத பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.இந்த நிலையில், மழலையர் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டப்படுகிறது. இதனால், அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்கவோ, அவற்றை பெறவோ பள்ளிகளும் அக்கறை காட்டுவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
பதிவு செய்த நாள்24செப்
2017
05:40




'இந்த கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' கிடைப்பது சிரமம்' என, தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு, 2011 முதல், லேப் - டாப்களை, அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இதுவரை, 40 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. 2016 - 17 கல்வியாண்டில், லேப் - டாப் கொள்முதலுக்கு, 'டெண்டர்' விடுவதில் பிரச்னை ஏற்பட்டதால், கடந்த ஆண்டு மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. தற்போது, இந்த கல்வியாண்டிலும், அதே நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது:கடந்த கல்வியாண்டுக்கான லேப் - டாப்கள், இப்போது தான் வர துவங்கியுள்ளன. அவற்றை கொடுத்து முடிப்பதற்கே, பல மாதம் ஆகிவிடும். வழக்கமாக, லேப் - டாப் கொள்முதல் செய்வதற்கு முன், தகவல் தொழில்நுட்ப துறையில், அது தொடர்பாக அரசாணை வெளியிடப்படும்.
அதன்பின், பல மாதங்கள் கழித்து, கொள்முதல் துவங்கும். இந்த ஆண்டுக்கான அரசாணை, இன்னும் வெளியிடப்படவில்லை. அதனால், இந்த கல்வியாண்டில் பயிலும் மாணவர்களும், காத்திருக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

'லேப் - டாப்' கொள்முதல் செய்யும் பொறுப்பு, 'எல்காட்' எனும் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தை சேர்ந்தது. அதன் மேலாண் இயக்குனர், சுடலைக்கண்ணனிடம், இது பற்றி கேட்டதற்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.

- நமது நிருபர் -




செல்போன் எண்ணுடன், ஆதார் எண் இணைப்பதற்கு அலைக்கழிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு


செல்போன் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வரும் வாடிக்கையாளர்கள் தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றம் சாட்டி உள்ளனர்.

செப்டம்பர் 24, 2017, 02:45 AM
சென்னை,

இந்தியாவில் போலி சிம் கார்டுகள் மூலம் சமூக விரோதிகள் மற்றும் பயங்கரவாதிகள் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக செல்போன் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ஆதார் எண் இணைக்கப்படாத செல்போன் எண்களின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் ஆதார் எண்ணை, செல்போன் எண்ணுடன் இணைப்பதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆதார் எண்ணை செல்போன் நிறுவனங்கள், சிறிய செல்போன் கடைகளில் பொதுமக்கள் இணைத்து வருகின்றனர்.

இந்தநிலையில், இதில் பொதுமக்களுக்கு சில பிரச்சினைகள் இருப்பதாகவும், செல்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை அலைக்கழிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி, சென்னை அடையாரை சேர்ந்த கே.வெங்கடேசன்(வயது 61) என்பவர், ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

செல்போன் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்காக சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள நான் பயன்படுத்தி வரும் ‘சிம்கார்டு’ நிறுவனத்தின் அலுவலகத்துக்கு நேரில் சென்றேன். அப்போது, எனது கைரேகை பொருந்தவில்லை என்று கூறி திருப்பி அனுப்பினார்கள்.

பின்னர் சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது, கைரேகை பொருந்தாவிட்டால் என்ன? உங்கள் கண் கருவிழி மற்றும் முகத்தையும் ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளோம் அவற்றை வைத்து செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என கூறினர். மீண்டும் அந்த நிறுவனத்துக்கு சென்று இதுபற்றி கூறியபோது, அவர்கள் அதற்கு கூடுதல் செலவாகும் எனவே ஆதார் எண்ணை செல்போன் எண்ணுடன் இணைக்க முடியாது என்று தெரிவித்து விட்டனர்.

எனக்கு தற்போது 61 வயதாகிவிட்டதால் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. செல்போன் பயன்படுத்தும் வயதானவர்கள் அனைவருக்கும் பெரும்பாலும் இந்த பிரச்சினை ஏற்படும். எனவே எங்களை போன்ற வயதானவர்களை அலைக்கழிக்காமல் இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாரிவேந்தர் மீதான மோசடி வழக்கை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


பாரிவேந்தர் மீதான மோசடி வழக்கை ரத்து செய்யுமாறு சென்னை ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

செப்டம்பர் 24, 2017, 04:30 AM

புதுடெல்லி, 

எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி பல மாணவர்களின் பெற்றோரிடம் பல கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் அதிபர் மதன் கைது செய்யப்பட்டார். அவர் அந்த தொகையை பாரிவேந்தரிடம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்ததால் எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தின் தலைவர் பாரிவேந்தரும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் பாரிவேந்தருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய கோர்ட்டு, ரூ.85 கோடியை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் உத்தரவாதமாக செலுத்த உத்தரவிட்டது. இந்த தொகையை அவர் சைதாப்பேட்டை கோர்ட்டில் செலுத்தினார்.இந்தநிலையில், தன் மீது தொடரப்பட்ட மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி பாரிவேந்தர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, பாரிவேந்தர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும் அவர் மீதான வழக்கை விரைவாக விசாரித்து, 8 வாரத்துக்குள் குற்றப்பத்திரிகையை சம்பந்தப்பட்ட கோர்ட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்யவேண்டும் என்றும் கடந்த 6–ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.

மேலும் இந்த வழக்கில் ஜாமீன் உத்தரவாதமாக கீழ் கோர்ட்டில் பாரிவேந்தர் செலுத்தியுள்ள தொகையை 20–ந்தேதிக்குள், பாதிக்கப்பட்ட 136 மாணவர்களின் பெற்றோருக்கு பிரித்து வழங்கவேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.ஐகோர்ட்டின் இந்த உத்தரவை ரத்துசெய்யக்கோரி பாரிவேந்தர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூ‌ஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பாரிவேந்தர் தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:–

இந்த வழக்கில் புகார்தாரரான டாக்டர் கே.ஜெயச்சந்திரன் என்பவர் தாக்கல் செய்த கேவியட் மனுவில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி பாரிவேந்தர் தொகையை செலுத்தும் பட்சத்தில் இந்த வழக்கை ரத்து செய்வதில் தங்களுக்கு ஏதும் ஆட்சேபணை இல்லை என்று கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் 136 பேர் தங்கள் தொகையை திரும்ப கோரியுள்ளனர். இவர்கள் அனைவரும் இதேபோன்ற நிபந்தனையில் வழக்கை ரத்துசெய்வதற்கு ஒப்புக்கொள்கிறார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.எனவே, புகார்தாரர்கள் அனைவரும் சென்னை ஐகோர்ட்டுக்கு இதனை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். அந்த பிரமாண பத்திரங்கள் பெயரில் சென்னை ஐகோர்ட்டு பாரிவேந்தருக்கு எதிரான வழக்கை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும். இந்த பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யும் வரை எந்த தொகையும் யாருக்கும் திரும்ப வழங்கக்கூடாது. உரிய நபர்கள் மட்டுமே இந்த தொகையை திரும்ப பெறும் வண்ணம் ஐகோர்ட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த உத்தரவு பாரிவேந்தருக்கு மட்டுமே செல்லும். இந்த தொகையை திருப்பி அளிக்கும் போது மனுதாரர் பாரிவேந்தர் தரப்பும் உடன் இருக்கும். இந்த நிபந்தனையுடன் இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவை சசிகலா கூட பார்க்கவில்லை



‘‘சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவை சசிகலா கூட பார்க்கவில்லை’’ என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

செப்டம்பர் 24, 2017, 05:00 AM

குடகு,
டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் குஷால் நகரில் உள்ள ‘பெண்டிங் பான்’ எனும் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளார்.

டி.டி.வி.தினகரன் நேற்று காலை சொகுசு விடுதியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது கவர்னர் சென்று அவரை பார்த்தார். ஆஸ்பத்திரியில் இருந்த ஜெயலலிதாவை அப்பல்லோ டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், வெளிநாட்டு டாக்டர்கள் பார்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.

செப்டம்பர் மாதம் 22–ந் தேதி ஜெயலலிதா உடல்நல குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அக்டோபர் 1–ந் தேதி முதல் ஜெயலலிதாவை சசிகலா கூட பார்க்கவில்லை. ஜெயலலிதாவுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக யாரையும் டாக்டர்கள் பக்கத்தில் அனுமதிக்கவில்லை.

எப்போதாவது அனுமதி பெற்று 2 நிமிடம் மட்டும் பார்த்துவிட்டு வருவார். அம்மாவின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு கூட உத்தரவிடட்டும். எங்களிடம் வீடியோ ஆதாரம் உள்ளது. சசிகலா அனுமதித்தால் அதை வெளியிடுவோம்.இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்
மயிலாடுதுறை துலா கட்டத்தில் காவிரி மகா புஷ்கர விழா நிறைவு பெற்றது


மயிலாடுதுறை துலா கட்டத்தில் நடைபெற்று வந்த காவிரி மகா புஷ்கர விழா நிறைவு பெற்றது. இதில் 12 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்.

செப்டம்பர் 24, 2017, 04:00 AM
மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள காவிரி துலா கட்டத்தில் கடந்த 12-ந் தேதி மகா புஷ்கர விழா தொடங்கியது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சென்றனர். பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குடும்பத்துடன் வந்து துலா கட்டத்தில் புனித நீராடினர்.

விழாவையொட்டி துலா கட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த காவிரி அம்மனுக்கு தினமும் பாலாபிசேகம் நடந்து வந்தது. மாலையில் நடந்த ஆரத்தி வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முதல்நாளில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் புனித நீராடினர். அதைத்தொடர்ந்து கடந்த 20-ந்தேதி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புனிதநீராடி வழிபாடு செய்தார்.

விழாவின் நிறைவு நாளான நேற்று துலா கட்டத்தில் புனித நீராட வந்த பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. விழாவையொட்டி துலா கட்டத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று விடுமுறை நாள் என்பதால் ஒரு லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். நிறைவுநாள் என்பதால் துலாகட்டத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில் ஓங்கார ஆசிரமத்தின் நிறுவனர் சுவாமி ஓங்காரனந்தா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பெண்ணாக மாறிய வக்கீல் குமார் என்கிற ராஜகுமாரிக்கு, துர்க்கை அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட பட்டு சேலையை சிவாச்சாரியார்கள் வழங்கினர்.

நேற்று மாலை காவிரிக்கு ஆரத்தி வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து காவிரி தாய்க்கும்-சமுத்திரராஜனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகா புஷ்கர விழாவில் விடையாற்றி உற்சவம் நடக்கிறது. காவிரி மகா புஷ்கர விழா நாட்களில் துலா கட்டத்தில் மொத்தம் 12 லட்சம் பக்தர்கள் புனித நீராடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணாடி நொறுங்கியதால் சவுதி அரேபியா விமானம் ரத்து பயணிகள் வாக்குவாதம்


சென்னையில் இருந்து சவுதி அரேபியாவுக்கு செல்ல இருந்த விமானத்தின் கண்ணாடி நொறுங்கி இருந்ததால் விமானம் ரத்து செய்யப்பட்டு, பயணிகள் அனைவரும் தனியார் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
செப்டம்பர் 24, 2017, 04:00 AM

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகருக்கு நேற்று முன்தினம் இரவு விமானம் செல்ல இருந்தது. அதில் பயணம் செய்ய இருந்த 261 பயணிகள், சோதனைகளை முடித்துக்கொண்டு விமானத்தில் ஏறி தயாராக அமர்ந்து இருந்தனர்.

விமானத்தில் ஏறிய விமானி, இறுதி கட்ட சோதனைகளை செய்தார். அப்போது விமானத்தின் பின்பக்கத்தில் உள்ள கண்ணாடி ஒன்று நொறுங்கி இருந்ததை கண்டுபிடித்தார்.

நொறுங்கிய கண்ணாடியுடன் விமானத்தை இயக்கினால் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இதுபற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக தொழில்நுட்ப வல்லுனர்கள் விரைந்து வந்து, விமானத்தில் நொறுங்கி இருந்த கண்ணாடியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

தங்களுக்கு உணவு எதுவும் வழங்காமல் நீண்ட நேரம் விமானத்தில் அமர்ந்து இருப்பதாக கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்த அதிகாரிகள், பயணிகளுக்கு தேவையான உணவு, பிஸ்கட், தண்ணீர் ஆகியவற்றை வழங்கினர்.

ஆனால் நொறுங்கிய கண்ணாடியை உடனடியாக மாற்ற முடியாததால் விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

சவுதி அரேபியாவில் இருந்து விமானத்தின் கண்ணாடி வந்ததும், அது மாற்றப்பட்ட பிறகு விமானம் புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு அரசு பஸ்சை போதையில் ஓட்டி வந்த டிரைவருக்கு பொதுமக்கள் தர்மஅடி


நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு அரசு பஸ்சை போதையில் ஓட்டி வந்த டிரைவருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

செப்டம்பர் 24, 2017, 05:00 AM

ஆலந்தூர்,

நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு அரசு விரைவு பஸ் வந்து கொண்டு இருந்தது. கிழக்கு கடற்கரை சாலையில் பாலவாக்கத்தில் வந்தபோது அரசு பஸ், சாலையில் அங்கும் இங்குமாக தள்ளாடியபடியே சென்றது.

சாலையோரம் நிறுத்தி இருந்த ஆட்டோ மீதும் பஸ் மோதியது. பஸ் தறிகெட்டு ஓடுவதை கண்டதும் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினார்கள். இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், தொலைதூர பஸ் என்பதால் டிரைவர் தூக்க கலக்கத்தில் ஓட்டி இருக்கலாம் என்று நினைத்து கூச்சலிட்டபடி சென்று பஸ்சை மடக்கி நிறுத்தினர்.

ஆனால் பஸ்சை விட்டு கீழே இறங்கிய டிரைவர், போதையில் தள்ளாடியபடி வந்து நின்றார். அப்போதுதான் அவர், குடிபோதையில் பஸ்சை ஓட்டி வந்தது தெரிந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பஸ் டிரைவருக்கு தர்ம அடி கொடுத்து நீலாங்கரை போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர், திருச்செந்தூரை சேர்ந்த மகாராஜன்(வயது 35) என தெரியவந்தது. நாகப்பட்டினத்தில் இருந்து புதுச்சேரி வழியாக பஸ் வந்த போது, அங்கு அவர் மது அருந்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் மகாராஜனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் பயணிகள் அனைவரும் மாற்று பஸ்சில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பேரறிவாளன் ‘பரோல்’ மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு


பேரறிவாளனுக்கு அளிக் கப்பட்ட பரோலை, அவரது தாயாரின் வேண்டுகோளை ஏற்று மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் 24, 2017, 05:30 AM
சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் கடந்த 26 ஆண்டுகளாக பேரறிவாளன் அடைக்கப்பட்டிருந்தார். தமிழக அரசுக்கு அவரது தாயார் அற்புதம் அம்மாள், ஒரு கடிதம் எழுதினார். அதில், தனது கணவரும் பேரறிவாளனின் தந்தையுமான ஞானசேகரனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதால், மகனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

அதைப்பரிசீலித்து, கடந்த ஆகஸ்ட் 24-ந் தேதியில் இருந்து 30 நாட்களுக்கு பேரறிவாளனுக்கு பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து பேரறிவாளன் தனது பெற்றோர் வசிக்கும் ஜோலார்பேட்டை வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். அவரும் தனது உடல் நிலை தொடர்பாக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்

செப்டம்பர் 24-ந் தேதியுடன் (இன்று) பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோல் முடிகிறது

இந்த நிலையில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தாயார் அற்புதம் அம்மாள் மீண்டும் கடிதம் எழுதினார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எனது மகன் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு (பரோல்) வழங்கினீர்கள். 26 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் வீட்டுக்கு வந்துள்ளார். இது அவருக்கு இடைக் கால நிவாரணம் என்றாலும் அவர் நிரந்தர விடுதலை பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த விடுப்பு 24-ந் தேதியோடு முடிகிறது. தொடர்ச்சியாக சிறையில் இருந்ததால் அவருக்கு உயர் ரத்த அழுத்த நோய் உள்பட பல வியாதிகள் உள்ளன. எங்களது ஒரே மகனின் இந்த நிலை குறித்த கவலையால் பெற்றோராகிய நாங்களும் உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ளோம்.

கடந்த 2, 4, 8-ந் தேதிகளில் பேரறிவாளனுக்கு வீட்டிலேயே ரத்த பரிசோதனை நடந்தது. வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்பதால் டாக்டரை நேரில் போய் சந்திக்க அவரால் இயலவில்லை. நோயால் வாடும் கணவர், மகள், மகன் ஆகிய 3 பேரையும் நோயாளியான என்னால் கவனிக்க முடியவில்லை.

பேரறிவாளன் என்னுடனே இருந்தால் எனக்கு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பலம் கிடைக்கும். அவரது வருகைக்குப் பின்பு உடல் நிலையில் முன்னேற்றம் கண்டுள்ள எங்கள் குடும்பத்தினர் மேலும் நலம் பெறுவார்கள். எனவே அவருக்கு அளிக்கப்பட்ட சாதாரண விடுமுறையை மேலும் 30 நாட்கள் நீட்டித்துத் தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, சிறை அதிகாரிகள் ஆகியோரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைத்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.

அந்த முடிவை அரசாணையாக நிரஞ்சன் மார்டி பிறப்பித்தார். அதன்படி பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதத்துக்கு அதாவது அக்டோபர் 24-ந் தேதிவரை பரோல் காலம் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, அவர் தனது வீட்டில் போலீஸ் பாதுகாப்புடன் மேலும் ஒரு மாதம் வசிப்பார்.

Saturday, September 23, 2017

ஐ.டி., பெண் அதிகாரியின் கணவரிடம் விசாரிக்க முடிவு

பதிவு செய்த நாள்23செப்
2017
02:15

சென்னை, வருமான வரித்துறை பெண் அதிகாரி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக, அவரது கணவரான, ஆந்திர மாநிலம், ஜெகன் மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர்., காங்., கட்சியைச் சேர்ந்த, எம்.எல்.ஏ.,விடம், சி.பி.ஐ.. அதிகாரிகள் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில், தமிழகம் - புதுவை பிராந்தியத்தின் தணிக்கை பிரிவில், ஆணையராக பணிபுரிந்து வருபவர், டி.எச்.விஜயலட்சுமி. 

அவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான ஆதாரங்கள், சென்னை, சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு கிடைத்தன. அதைத் தொடர்ந்து, அவர் மீதும், ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியில், பிரகாசம் தொகுதி, எம்.எல்.ஏ.,வாக உள்ள, அவரது கணவர் சுரேஷ் மீதும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது: கணவன் - மனைவி இருவரும், 2010 முதல், 2016 வரையிலான காலகட்டத்தில், 5.95 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிஉள்ளனர். ஆனால், 4.84 கோடி ரூபாய்க்கு மட்டும், கணக்கு காட்டியுள்ளனர். 

எனவே, வருமானத்திற்கு அதிகமாக, 1.1 கோடி ரூபாய், அதாவது, 22 சதவீதம் கூடுதலாக, சொத்து சேர்த்துள்ளனர். விஜயலட்சுமியன் கணவர், ரயில்வேயில் கணக்குத் துறையில் உயர் அதிகாரியாக இருந்தவர். பின், ஜெகன் மோகனின் கட்சியில் சேர்ந்து, 2009ல், எம்.எல்.ஏ., ஆனார். 

தற்போது மீண்டும், எம்.எல்.ஏ.,வாக உள்ளார். சுரேஷிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அதற்காக, விரைவில் ஆந்திரா செல்ல உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
திருப்பதி பிரம்மோற்சவம் பழநியிலிருந்து 10 டன் பூக்கள்
பதிவு செய்த நாள்23செப்
2017
00:07



பழநி: திருமலை பிரம்மோற்சவ விழாவிற்காக, பழநி புஷ்ப கைங்கர்யா சபா சார்பில், 10 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. பழநி புஷ்ப கைங்கர்யா சபா சார்பில், திண்டுக்கல், நிலக்கோட்டை, திருச்சி பகுதிகளில் இருந்து பூக்களை சேகரித்து, ஆண்டுதோறும் திருப்பதியில் நடைபெறும், புரட்டாசி, பிரம்மோற்சவ விழாவிற்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்தாண்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட, 700 கிலோ பூக்களை, பழநி மாரியம்மன் கோவிலில் இருந்து, திருப்பதிக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

சபா நிர்வாகி ஒருவர் கூறுகையில், '15 ஆண்டுகளாக, திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு, டன் கணக்கில் பூக்களை அனுப்புகிறோம். 'இந்த ஆண்டில், முதற்கட்டமாக, துளசி, வாடாமல்லி, மரிக்கொழுந்து, செண்டுமல்லி, தாமரை, சம்பங்கி பூக்களை அனுப்பி வைக்கிறோம்.

'தொடர்ந்து பூக்களை சேகரித்து, பிரம்மோற்சவத்தின், 10 நாட்களுக்கும், 10 டன் பூக்களை அனுப்ப உள்ளோம்' என்றார்.
தினகரன் கூடாரம் காலியாகிறது2 பேர் அணி மாறினர்
மேலும் பலர் மாற உறுதி


தினகரன் ஆதரவு எம்.பி., வசந்தி முருகேசன், நேற்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து, ஆதரவு தெரிவித்தார்.அவரைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்கள் பலரும் அணி மாற திட்டமிட்டிருப்பதால், தினகரன் கூடாரம் காலியாகிறது.



டில்லி, திஹார் சிறையில்இருந்து, தினகரன் வெளியில் வந்தபோது,37 எம்.எல்.ஏ.,க்கள், சென்னையில் அவரை சந்தித்து, ஆதரவு தெரிவித்தனர்.முதல்வர் பழனிசாமியும், அமைச்சர்களும்,தினகரனை ஓரங்கட்டியதும், அவரின் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களில் பலரும் அணி மாறினர். இறுதியாக,19 எம்.எல்.ஏ.,க்கள் மட்டும், தினகரன் பக்கம் சென்றனர்.

தகுதி நீக்கம்

மேலும், பலஎம்.எல்.ஏ.,க்கள், 'ஸ்லீப்பர் செல்' எனப்படும் ரகசியபடையாக, முதல்வர் அணியில் உள்ளனர். அவர்கள் உதவியுடன், ஆட்சியை கவிழ்க்கப் போவதாக, தினகரன் பூச்சாண்டி காட்டி வந்தார்;

ஆனால், முதல்வர் தரப்பில் பயப்படவில்லை. அந்த கோபத்தில் இருந்த தினகரன் உத்தரவின்படி, 19 எம்.எல்.ஏ.,க்கள், ஆக., 22ல், கவர்னரை சந்தித்து, முதல்வருக்கு அளித்து வரும் ஆதரவை, வாபஸ் பெறுவதாக, கடிதம்
கொடுத்தனர்.அதற்கு பதிலடி தர, முதல்வர் தரப்புஅதிரடி நடவடிக்கையில்இறங்கியது. கவர்னரிடம் கடிதம் கொடுத்தவர்களை தகுதி நீக்கம் செய்ய, அரசு தலைமை கொறடாராஜேந்திரன், சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார்.தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், தங்களை தகுதி நீக்கம் செய்ய மாட்டார்கள். முதல்வர் தரப்பில் இறங்கி வருவர் என எதிர்பார்த்தனர்.

அதற்கு மாறாக,சபாநாயகர் தனபால், விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பியதுடன், நேரில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டார்.அதனால் உஷாரான, எம்.எல்.ஏ., ஜக்கையன், சபாநாயகரை சந்தித்து, கவர்னரிடம்அளித்தகடிதத்தை, திரும்பப் பெறுவதாக அறிவித்தார். அதனால், அவர் சபாநாயகரின் நடவடிக்கையில் இருந்து தப்பினார். ஆனால், தினகரன் ஆதரவு, மற்ற எம்.எல்.ஏ.,க் கள், 18 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து,அவர்கள் தொடர்ந்த வழக்கிலும், உயர் நீதிமன்றம், சபாநாயகர் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. இதனால், 18 பேரும் பதவி பறிபோனகலக்கத்தில் உள்ளனர்.கவிழ்க்க முடியாது மேலும், தினகரன் கூறியபடி, 'ஸ்லீப்பர் செல்' எம்.எல்.ஏ.,க்கள் யாரும் இல்லை என்பதும், ஆட்சியை கவிழ்க்க முடியாது என்பது உறுதியாகி உள்ளதாலும், அவர்கள் அனைவரும், அணி மாறும் மனநிலைக்கு வந்து விட்டனர்.

அதனால், ஜக்கையனை தொடர்ந்து, தற்போது, பெண் எம்.பி., ஒருவரும், தினகரனை விட்டு விலகியுள்ளார். தென்காசி தொகுதியைச் சேர்ந்த வசந்தி முருகேசன்,இதுவரை,தினகரன் அணியில் இருந்தார்.நேற்று, முதல்வர் பழனிசாமியை சந்தித்து, அணி மாறினார். அடுத்தடுத்து, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், தினகரன் அணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதால், அவரது கூடாரம்காலியாகி வருகிறது.

சென்னை, கிரீன்வேஸ் சாலையில், முதல்வர் பழனிசாமியை சந்தித்த பின், வசந்தி முருகேசன் கூறியதாவது: 'எனக்கு பின்னாலும், அ.தி.மு.க., 100 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்களுக்காக இயங்கும்' என, ஜெ., தெரிவித்தார். அதன்படி, அவர் தந்த நலத் திட்டங்களை, முதல்வர், துணை முதல்வர் இணைந்து, செயல்படுத்தி வருகின்றனர்.

தொண்டர்கள் கொதிப்பு:

ஆனால், 'தி.மு.க.,வோடு கூட்டு சேர்ந்து, ஆட்சியை கவிழ்ப்பேன்' என, தினகரன் கூறுகிறார். இதனால், தொண்டர்கள் கொதிப்படைந்து உள்ளனர். மக்கள் நலனுக்காக செயல்பட்ட, ஜெ., ஆட்சியை கலைப்பதாக கூறுவதை, ஏற்க முடியாது. எனவே, அவர் அணியிலிருந்து விலகினேன். விரைவில், மற்றவர்களும் வருவர். ஜெ.,வால் உருவாக்க பட்ட, எம்.எல்.ஏ.,க்களை, சிறை பிடித்து வைத்துள்ளனர்.

ஆட்சி கவிழக் கூடாது என்பதற்காக, முதல்வருக்குஆதரவு தெரிவித்துள்ளேன். இந்த ஆட்சி தொடர வேண்டும் என, மக்கள் நினைக்கின்றனர்.இவ்வாறு அவர்கூறினார்.

ஏழாக குறைவு!

தினகரன் அணியில், ராஜ்யசபா எம்.பி.,க்கள், விஜிலா சத்தியானந்த்,நவநீதகிருஷ்ணன், கோகுலகிருஷ்ணன்; லோக்சபா எம்.பி.,க்கள் கோவை நாகராஜன், தென்காசி வசந்தி முருகேசன், விருதுநகர் ராதாகிருஷ்ணன், வேலுார் செங்குட்டுவன், திண்டுக்கல் உதயகுமார் என, எட்டு பேர் இருந்தனர். இவர்களில்,வசந்தி முருகேசன் அணி மாறியதை தொடர்ந்து, தினகரன் ஆதரவு எம்.பி.,க்கள் எண்ணிக்கை, ஏழாகக் குறைந்துள்ளது.

- நமது நிருபர் -
தேங்காய் விலை ரூ.80 : குமரி மாவட்டத்தில், 'ஷாக்'

பதிவு செய்த நாள்23செப்
2017
02:08


நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில், ஒரு தேங்காய், 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தேங்காய் உற்பத்தியில், கன்னியாகுமரி மாவட்டம், முன்னணியில் இருந்து வந்தது. 

ஈத்தொமொழி தேங்காய் பிரபலமானதாகும். இங்கு, அதிக அளவில் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள தேங்காயை துருவினால், அதிக அளவில் தேங்காய் பூ கிடைக்கும்; அதிக ருசியும் இருக்கும்.கடந்த ஒரு மாத காலமாக, தேங்காய் விலை, 'கிடுகிடு' என உயர்ந்து வருகிறது. நேற்று, ஒரு கிலோ தேங்காய், 50 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு பெரிய தேங்காய், 80 ரூபாய் வரை விற்பனை ஆனது.'சில மாதங்களாக, மழை சரிவர பெய்யாததால், பல இடங்களிலும், தென்னையின் கொண்டை காய்ந்து, காய் உற்பத்தி பாதிக்கப்பட்டது தான், விலை உயர்வுக்கு காரணம்' என, வியாபாரிகள் தெரிவித்தனர்.தற்போது, மழை பெய்தாலும், விளைச்சல் ஆக பல மாதங்கள் ஆகும் என்பதால், தேங்காய் விலை இன்னும் உயரும் என, தெரிகிறது.

பேரறிவாளனை சிறையில் அடைக்க நடவடிக்கை
பதிவு செய்த நாள்23செப்
2017
00:50

ஜோலார்பேட்டை: நாளை, பேரறிவாளனை சிறையில் அடைக்க, சிறை துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், ஆக., 24ல், 30 நாள் பரோலில் விடுதலை செய்யப்பட்டு, ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில், குடும்பத்தினருடன் தங்கி உள்ளார். பேரறிவாளன் பரோல், நாளை முடிகிறது. இந்நிலையில், மேலும் ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் என, அவரது தாய் அற்புதம்மாள், முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.அதற்கு, இன்னும் பதில் வரவில்லை. இதனால், பேரறிவாளனை, நாளை மாலை, 5:00 மணியில் இருந்து இரவு, 8:00 மணிக்குள், வேலுார் சிறைக்கு கொண்டு வர, சிறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து
வருகின்றனர். இது குறித்த தகவலை, பேரறிவாளனுக்கு, நேற்று சிறை துறை அதிகாரிகள், நேரில் வந்து தெரிவித்தனர்.கடந்த, 27 நாட்களில், பேரறிவாளனை, 1,657 பேர் சந்தித்து பேசியுள்ளனர். இந்நிலையில், பேரறிவாளன் வீட்டு முன், 40 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த, பேரறிவாளன் இல்லம் என்ற பெயர் பலகை, நேற்று அகற்றப்பட்டு, செங்கொடி இல்லம் என, பெயர் மாற்றப்பட்டு, புதிய பலகை வைக்கப்பட்டுள்ளது.
குடவாசல் நபருக்கு சென்னையில் மையம் : ஆசிரியர் தேர்வு வாரியம் கூத்து
பதிவு செய்த நாள்22செப்
2017
23:46

இன்று நடக்கும், அரசின் சிறப்பாசிரியர் தேர்வில், குடவாசலை சேர்ந்தவருக்கு, 400 கி.மீ., தொலைவில், சென்னை, கோடம்பாக்கத்தில், தேர்வு மையம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில், 1,325 காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம், இன்று போட்டி தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வுக்கு, 37 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.மாநிலம் முழுவதும், 18 மாவட் ங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வருக்கும், அருகருகே உள்ள மாவட்டங்களில், தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், குடவாசலை சேர்ந்த கோபு என்பவருக்கு, 400 கி.மீ., தொலைவில் உள்ள, சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள, பதிப்பக செம்மல் அரசு மேல்நிலை பள்ளியில், தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்வர் மிகவும் மனவேதனையும், உடல் சோர்வும் அடைந்துள்ளார். இதற்காக, அந்த தேர்வர் குடவாசலில் இருந்து, தேர்வு துவங்கும் நேரத்துக்கு முன், எட்டு மணி நேரம், பஸ்சில் பயணம் செய்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பமும், வசதிகளும் மேம்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம், இன்னும் குளறுபடிகளின் கூடாரமாக உள்ளதையே காட்டுகிறது என, சிறப்பாசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர். 

- நமது நிருபர் -
தக்காளி கிலோ ரூ.15க்கு விற்பனை

பதிவு செய்த நாள்22செப்
2017
23:47

தக்காளி விளைச்சல் அதிகரித்து உள்ளதால், அவற்றின் விலை வேகமாக சரிய துவங்கியுள்ளது. தமிழகத்தில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், தக்காளி சாகுபடி நடக்கிறது. தற்போது, விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் வரத்து அதிகமாகி உள்ளதால், தக்காளி விலை வேகமாக சரிய துவங்கி உள்ளது. ஆகஸ்டில், 50 ரூபாய்க்கு விற்ற, ஒரு கிலோ தக்காளி, தற்போது, 15 ரூபாய்க்கும், இரண்டாம் ரக தக்காளி, 10 ரூபாய்க்கும் கிடைக்கிறது. பண்டிகைகள் நெருங்கும் நேரத்தில், தக்காளி விலை குறைந்து வருவது, நுகர்வோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

- நமது நிருபர் -
வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை
பதிவு செய்த நாள்23செப்
2017
05:49




சென்னை: வரும், 29ம் தேதி முதல், தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.

ஆயுத பூஜை, தசரா உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக, அரசு மற்றும் தனியார் வங்கி ஊழியர்களுக்கு, தொடர்ச்சியாக, நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. செப்., 29 - அக்., 2 வரை, வங்கிகள் இயங்காது. அதனால், வாடிக்கையாளர்கள், 28ம் தேதிக்கு முன், வங்கிபரிவர்த்தனைகளை முடித்து கொள்வது சிறந்தது. ஏற்கனவே, ஆக., 12 - 15 வரை, நான்கு நாட்கள் வங்கிகளுக்கு, தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது.
வரும், 26ம் தேதி வரை கன மழை பெய்யும்

பதிவு செய்த நாள்23செப்
2017
04:51



சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும், 26ம் தேதி வரை, கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தென் மேற்கு பருவமழை, வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில், தீவிரமாக பெய்து வருகிறது. தமிழகத்தில் சில தினங்களாக, மழை குறைந்து வெப்பநிலை அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பெரும்பாலான இடங்களில், வரும், 26ம் தேதி வரை கன மழை பெய்யலாம் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை

பதிவு செய்த நாள்23செப்
2017
05:46




திருப்பூர்: தசரா பண்டிகை எனப்படும் நவராத்திரி விழா, வரும், 29ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, சிவில் கோர்ட்டுகளுக்கு தசரா விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும், சனி ஞாயிறு வார விடுமுறை. அடுத்த வாரம், 29 மற்றும், 30 தேதிகள் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி அரசு விடுமுறை. அக்., முதல் தேதியன்று, ஞாயிறு வார விடுமுறை. அக்.,2ம் தேதி காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை.இதையொட்டி இன்று, 23ம் தேதி முதல், அக்., 2ம் தேதி வரை, 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும், வரும், 3ம் தேதி முதல், வழக்கம் போல் செயல்படும்.

கிரிமினல் கோர்ட்டுகள், 28ம் தேதி வரை வழக்கம் போல் செயல்படும். அவற்றுக்கு, 29 முதல் அக்., 2 வரை, நான்கு நாட்கள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கமலிடம் சிக்காமல் ஜகா வாங்கிய ரஜினி
பதிவு செய்த நாள்23செப்
2017
05:22




'நீட்' நுழைவுத்தேர்வு உள்ளிட்ட விஷயங்களில், மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து வரும், நடிகர் கமல், விரைவில் அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதற்காக, 'ரஜினியுடனும் கைகோர்க்க தயார்' என, கமல் கூறியிருந்தார்.

ஆனால், அதை விரும்பாத ரஜினி, பிரதமர் மோடியின், 'துாய்மை இந்தியா' திட்டத்திற்கு, 'டுவிட்டரில்' ஆதரவு தெரிவித்து, கருத்து பதிவிட்டுள்ளார். அதில், அவர், 'பிரதமரின் துாய்மை இந்தியா திட்டத்தை, நான் முழுமையாக ஆதரிக்கிறேன். துாய்மையே தெய்வீகமானது' என, குறிப்பிட்டுள்ளார்.

கமல் கடுமையாக எதிர்க்கும் பிரதமரை ஆதரித்து, ரஜினி, தன் அரசியல் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி விட்டதாக, அவரது ரசிகர்கள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -



கிரிக்கெட் மட்டை தாக்கியதில் மூளைச்சாவு ஏற்பட்டு இறந்த பள்ளி மாணவனின் உடலை வாங்க மறுப்பு



கிரிக்கெட் மட்டை தாக்கி மூளைச்சாவு அடைந்த பள்ளி மாணவன் உயிரிழந்தான். அவனது உடலை வாங்க மறுத்து சேலத்தில் உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செப்டம்பர் 21, 2017, 05:45 AM
சேலம்,

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகில் உள்ள சித்தம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பெருமாள்-சின்னராசு தம்பதியின் மகன் விஸ்வேஷ்வரன்(வயது13). இவன், விட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 16-ந் தேதி அங்குள்ள பள்ளி விடுதி மைதானத்தில் சக மாணவர்களுடன் விஸ்வேஷ்வரன் கபடி விளையாடிக்கொண்டிருந்தான்.

அதே மைதானத்தில் பள்ளி ஆசிரியர் குப்புசாமி, சில மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார். இவருக்கு சொந்த ஊர் வெண்ணந்தூர் ஆகும். ஆசிரியர் குப்புசாமி பந்தை அடித்தபோது, கையில் இருந்த கிரிக்கெட் மட்டை நழுவி அருகில் கபடி விளையாடிக்கொண்டிருந்த மாணவன் விஸ்வேஷ்வரன் தலையின் பின்பகுதியில் பலமாக தாக்கியது. இதனால், மாணவன் மயங்கி தரையில் சரிந்தான். அவனை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு விஸ்வேஷ்வரன் பின்மண்டையில் தாக்கிய கிரிக்கெட் மட்டையால் மூளைச்சாவு அடைந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து ‘கோமா’ நிலையிலேயே இருந்த அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.45 மணிக்கு நினைவு திரும்பாமலேயே விஸ்வேஷ்வரன் உயிரிழந்தான்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சொந்த கிராமத்தில் இருந்து உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். அங்கு உயிரிழந்த மாணவன் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அதன் பின்னர் காலை 11 மணிக்கு, மாணவன் உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி அரசு ஆஸ்பத்திரி முன்பு உயிரிழந்த விஸ்வேஷ்வரனின் தாயார் சின்னராசு, தாய்மாமா வடிவேல் மற்றும் ஆதிதமிழர் பேரவையினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சேலம் டவுன் போலீஸ் உதவி கமிஷனர் அன்பு, இன்ஸ்பெக்டர்கள் குமரேசன்(சேலம் டவுன்), கிருஷ்ணமூர்த்தி(செவ்வாய்பேட்டை), கண்ணன்(அஸ்தம்பட்டி) மற்றும் போலீசார் விரைந்து வந்து சமாதானம் பேசி, அரசு ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் அழைத்து சென்றனர். மேலும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சப்-டிவிஷன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ், மொளசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் ஆகியோரும் ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

பேச்சுவார்த்தையின்போது உறவினர்கள் தரப்பில் கூறுகையில், மாணவன் விஸ்வேஷ்வரன் கபடி விளையாடவில்லை. பள்ளிக்கூட காம்பவுண்டு சுவரில்தான் உட்கார்ந்திருந்தான். எனவே மாணவன் விஸ்வேஷ்வரனை ஆசிரியர் திட்டமிட்டுத்தான் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்திருப்பதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம். எனவே, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதுடன், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழும் வழக்குப்பதிவு செய்திட வேண்டும் என வலியுறுத்தினர். கொலை வழக்கு பதிவு செய்யாவிட்டால் மாணவன் உடலை வாங்கி செல்லமாட்டோம் என உறுதியாக மறுத்தனர்.

அதற்கு போலீஸ் தரப்பில், ஏற்கனவே கிரிக்கெட் மட்டையால் தாக்கியதாக ஆசிரியர் மீது இ.பி.கோ 338 பிரிவின் கீழ் காயம் ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது மாணவன் உயிரிழந்து விட்டதால் 304 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, அஜாக்கிரதையாக காயம் ஏற்படுத்தி மரணம் விளைவித்தல் என்ற சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது ஒரு எதிர்பாராத சம்பவம் என்று விளக்கம் அளித்தனர். ஆனால், மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதை ஏற்க மறுத்தனர்.

முன்னதாக சாலை மறியலின்போது மாணவனின் தாயார் சின்னராசு அழுதபடியே கூறுகையில், “என் மகன் எந்த விளையாட்டிலும் ஈடுபடவில்லை. மைதானத்தில் அவன் இருந்தபோது வேண்டும் என்றே கிரிக்கெட் மட்டையால் ஆசிரியர் தாக்கி இருக்கிறார். இந்த ஆசிரியர் புதிதாகத்தான் பள்ளியில் பணிக்கு சேர்ந்திருக்கிறார். எனவே, ஆசிரியர் மீது கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்திட வேண்டும். மேலும் ஆசிரியரை உடனடியாக அரசு பணி நீக்கம் செய்ய வேண்டும். ஆஸ்பத்திரியில் என் மகன் இறந்தே 3 நாட்கள் ஆகி விட்டது. செயற்கை சுவாசம் கொடுத்து உயிருடன் இருப்பதுபோல காண்பித்து விட்டனர். என் மகனை கொன்று விட்டனர். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்“ என்றார்.இவ்வாறு அவர் பேசிக்கொண்டிருந்தபோதே, சின்னராசு மயங்கி விழுந்தார். தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஏற்கனவே, மாணவனை தாக்கியதாக மொளசி போலீசார் ஆசிரியர் குப்புசாமியை கைது செய்தனர். அத்துடன் ஆசிரியர் குப்புசாமியை நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா பணி இடைநீக்கம் செய்தும் உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்போது உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் போராட்டம் காரணமாக குப்புசாமி மீது 304 பிரிவு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கை மாற்றம் செய்து போலீசாரால் பதிவு செய்யப்பட்டது. இந்த பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், ஆசிரியர் குப்புசாமி ஜாமீனில் எளிதில் வரமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மொளசி போலீசார் ஆசிரியர் குப்புசாமி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ததால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவன் உடலை வாங்கிசெல்வதற்கு முதலில் சம்மதம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு பின் மாணவன் விஸ்வேஷ்வரன் உடலை, டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்ய தொடங்கினர். ஆனால், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ், உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்கும் பட்சத்தில்தான் உடலை வாங்குவோம் என்று உறவினர்கள் தரப்பில் உறுதியாக இருந்தனர். அதனால், விஸ்வேஷ்வரன் உடலை வாங்காமலேயே அனைவரும் ஊர் திரும்பினர். மாணவன் உடல் தொடர்ந்து சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டு உள்ளது.


தலையங்கம்

அரசியலில் நடிகர்கள் ஜொலிப்பார்களா?


தமிழக அரசியல் ஒரு வித்தியாசமான அரசியல். முன் பெல்லாம் தமிழ்நாட்டில் அரசியலில் நன்கு முதிர்ச்சி பெற்ற, அனுபவம்வாய்ந்த, தியாகம் செய்த தலைவர்களின் கொள்கைப்போர்கள்தான் நடந்தன.

செப்டம்பர் 23 2017, 03:00 AM

தமிழக அரசியல் ஒரு வித்தியாசமான அரசியல். முன் பெல்லாம் தமிழ்நாட்டில் அரசியலில் நன்கு முதிர்ச்சி பெற்ற, அனுபவம்வாய்ந்த, தியாகம் செய்த தலைவர்களின் கொள்கைப்போர்கள்தான் நடந்தன. ஏற்கனவே அறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும் திரை உலகத் தோடு தொடர்புகள் வைத்துக்கொண்டவர்கள் என்றாலும், நடிகர்கள் நாடாள முடியுமா? என்றபோது, முதலில் எம்.ஜி.ஆர். நடிகராக இருந்தாலும், தொடக்கம் முதலே தி.மு.க.வோடு கொள்கைபிடிப்பில் இருந்து, தி.மு.க. கட்சியைச் சேர்ந்தவராகவே அரசியலிலும், சினிமாவிலும் வலம்வந்தார். ஆக, அரசியல் அனுபவத்தோடு, அரசியலில் நுழைந்த எம்.ஜி.ஆர். தனிக்கட்சி தொடங்கி 5 ஆண்டு களில் ஆட்சியை பிடித்தார். அவருக்குப்பிறகு ரசிகர்களின் பேராதரவு கொண்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார், கார்த்திக், விஜய காந்த், சீமான் என்று எவ்வளவோ பேர்கள் அரசியல் கட்சிகள் தொடங்கினாலும், எம்.ஜி.ஆர். மட்டுமே அரசியல் வானில் சுடர் ஒளிவீசும் நட்சத்திரமாக ஜொலித்தார். ஆட்சியையும் பிடித்து சாகும்வரை முடிசூடா மன்னராகவே இருந்தார். ஜெயலலிதாவும் சினிமா நடிகைதான் என்றாலும், 1982–ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் கட்சிக்குள் கொண்டுவரப்பட்டு, சிலஆண்டுகள் கட்சிப்பணியாற்றிய பிறகே முதல்–அமைச்சர் ஆனார்.

தமிழ்நாட்டில் மட்டும்தான் சினிமா பிரபலங்கள் பெருமளவில் கட்சிகளை தொடங்குகிறார்கள். எம்.ஜி.ஆரைப் பின்பற்றி, ஆந்திராவில் மட்டும் என்.டி.ராமாராவ் தனிக்கட்சி தொடங்கி முதல்–மந்திரி ஆனார். மற்றபடி, கேரளாவிலோ, கர்நாடகத்திலோ சினிமா துறையில் வெற்றி பெற்றவர்கள், அரசியல் துறையில் நுழையவும் முடிய வில்லை. நுழைந்தாலும் வெற்றியை பெறமுடியவில்லை. தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களான மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் ஆகியோர் நடிப்பு துறைக்குச் சென்றாலும், அதில் தொடர்ந்து அவர்கள் ஈடுபடவில்லை. இந்தநிலையில், ஜெயலலிதா மரணத் திற்குப்பிறகு கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் அரசியலில் நுழையப் போவதற்கு அடையாளமாக இவ்வளவு நாளும் சில கருத்துகளை கூறிக்கொண்டே வந்தார். ரஜினிகாந்த் வெளிப்படையாக இன்னும் சொல்லவில்லை. கமல் ஹாசனா, ரஜினிகாந்தா யார் முதலில் வரப்போகிறார்கள்? என்று இருந்தநிலையில், இப்போது கமல்ஹாசன் சில டெலிவி‌ஷன்களுக்கு அளித்த பேட்டியில், ‘தான் அரசிய லுக்குள் நுழையப்போகிறேன்’ என்று சொன்னது மட்டு மல்லாமல், தனிக்கட்சி தொடங்கப்போவதையும் தெள்ளத் தெளிவாக தெரிவித்துவிட்டார். அடுத்த 100 நாட்களில் தேர்தல் நடந்தால் நிச்சயமாக நான் அங்கு இருப்பேன் என்று சொன்ன அவர், இப்போதுள்ள எந்த அரசியல் கட்சிகளோடும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளமாட்டேன். தனிக்கட்சிதான் தொடங்குவேன் என்பதை தெளிவாக கூறிவிட்டார். இவர் தொடங்கும் கட்சி, ரஜினிகாந்த் கட்சி யோடு கூட்டுவைத்துக்கொள்ளுமா? என்பது குறித்தும் தெளிவான பதிலை சொல்லிவிட்டார். நாங்கள் திரைஉலகில் போட்டியாளர்களாகவே இருந்தோம். அதேபோல், அரசியலிலும் எதிர் எதிராகவே இருக்க விரும்புகிறோம். இருவருக்குமே ஊழலை எதிர்த்து போராடவேண்டும் என்ற ஒரேகொள்கை இருந்தாலும், நான் தனிவழியில் செல்கிறேன். அவர் மற்றொரு வழியில் செல்கிறார் என்று இருவரும் தனித்தனியான கட்சிகளை தொடங்கப் போவதை தெரிவித்துவிட்டார்.

அரசியலில் நுழைந்து முதல்–அமைச்சராக வரத்தயார் என்று கூறி, மக்களை சந்திக்கப்போகிறேன் என்றும் கூறி விட்டார். ரஜினிகாந்த் என்னோடு இணைய சம்மதித்தால், நான் தயார் என்றும் கூறியிருக்கிறார். ஆக, தமிழக அரசியலில் வெகுசில நாட்களில் சினிமா நடிகர்கள் தொடங்கும் 2 புதிய அரசியல் கட்சிகள் உதயமாகப் போகின்றன என்பது மக்களின் எதிர்பார்ப்பு. இந்த 2 அரசியல் கட்சிகளில் எது மக்கள் ஆதரவை பெறப் போகிறது?, 2 கட்சிகளுமே எம்.ஜிஆர். தொடங்கியதுபோல மக்கள் ஆதரவோடு ஜொலிக்குமா? அல்லது புகழ்மிக்க தொடக்கத்தைக்கண்டு தொடர்ந்து ஒளிவிடாமல் மங்கிப் போய்விடுமா? என்பதை தமிழக மக்கள்தான் சொல்ல வேண்டும். ரசிகர்களெல்லாம் தொண்டர்களாக எம்.ஜி.ஆருக்கு பின்சென்றதுபோல் மாறுவார்களா? அல்லது ரசிகர்களாக மட்டும் தங்கி இருந்து விடுவார்களா? என்பதை காலம்தான் சொல்லவேண்டும்.








தமிழகத்தில் பல இடங்களில் மருத்துவக் கட்டிடங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்



தமிழகத்தில் பல இடங்களில் மருத்துவக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

செப்டம்பர் 23, 2017, 03:15 AM
சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இளஞ்சிசு தீவிர பராமரிப்பு மையத்துடன் கூடிய மகப்பேறு பிரிவுக் கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 22-ந் தேதி (நேற்று) தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக திறந்துவைத்தார்.

மேலும், திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 30 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவுக் கட்டிடம்; பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், நீலகிரி மாவட்டம் டி.ஓரநல்லி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் ஆகிய இடங்களில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடங்கள்;

திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம், தர்மபுரி மாவட்டம் கே.என்.ஹள்ளி மற்றும் செல்லமுடி, விழுப்புரம் மாவட்டம் ஆரம்பூண்டி மற்றும் எரையூர் ஆகிய ஐந்து புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் என மொத்தம் 8 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் கிராமத்தில், 7 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் தரை மற்றும் முதல் தளத்துடன் 5 ஆயிரத்து 102 சதுர அடி கட்டிட பரப்பளவில் கட்டப்பட்டுள்ள கும்பகோணம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனர் அலுவலகக் கட்டிடத்தையும் அவர் திறந்துவைத்தார். இந்த அலுவலகம், தஞ்சாவூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 17 பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களையும், 31 பருத்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களையும் உள்ளடக்கியதாகும். இவ்வலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய- மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் வாயிலாக 16 ஆயிரத்து 209 பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்


ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே இனி ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்து உள்ளது.

செப்டம்பர் 23, 2017, 05:15 AM

புதுடெல்லி, 

ரெயில் பயணிகள் முன்பு ரெயில் நிலையத்துக்கு தான் சென்று டிக்கெட் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது பெரும்பாலானோர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் வீட்டில் இருந்து கொண்டே ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

இதுவரை இந்த முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்து வங்கி டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலமாக எடுக்கப்பட்டு வந்தன. அதற்கு என சேவை கட்டணம் பயணிகளின் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டது.உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நேரத்தில் ரூ.20 என பிடித்தம் செய்யப்பட்ட சேவை கட்டணத்தை ஐ.ஆர்.சி.டி.சி. தள்ளுபடி செய்தது. ஆனால் இதனால் தங்களுக்கு இழப்பு ஏற்படுவதாக சில வங்கிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதே சமயம் இதற்கு இந்தியன் வங்கி உள்ளிட்ட வங்கிகள் ஒத்துழைப்பு தந்தன.

ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பை தொடர்ந்து ரிசர்வ் வங்கி தற்காலிகமாக ஒரு விதிமுறையை வகுத்தது. அதன்படி ரூ.1000 வரை டிக்கெட் எடுப்பவர்களுக்கு 0.25 சதவீதமும், ரூ.2000 வரை 0.5 சதவீதமும், ரூ.2000–க்கு மேற்பட்ட கட்டணங்களுக்கு 1 சதவீதமும் சேவை கட்டணமாக ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் வசூலிக்கப்பட்டது.பிப்ரவரி 16–ந்தேதிக்கு பிறகு ரூ.1000 வரை ரூ.5–ம், ரூ.2000 ஆயிரம் வரை ரூ.10, ரூ.2000–க்கு மேற்பட்ட கட்டணங்களுக்கு 0.5 சதவீதமும் சேவை கட்டணமாக வசூலிக்கும்படி ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. இந்த கட்டணம் வசூலிப்பதில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்துக்கும், வங்கிகளுக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டன.

இதையடுத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, யுனைட்டைட் பாங்க் ஆப் இந்தியா, சென்டிரல் வங்கி, ஹெச்.டி.எப்.சி., ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் கார்டுகள் மூலமே இனி டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அறிவித்து உள்ளது.
வங்கி கணக்கு துவக்கம் ஏர்டெல்லுக்கு, ‘நோட்டீஸ்’
பதிவு செய்த நாள்23செப்
2017
00:28



புதுடில்லி : பார்தி ஏர்­டெல் நிறு­வ­னம், அரசு உத்­த­ர­வுப்­படி, மொபைல் போன் வாடிக்­கை­யா­ளர்­களின், ‘ஆதார்’ விப­ரங்­களை பெற்று வரு­கிறது. அவற்­றின் மூலம், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு தெரி­விக்­கா­மல், அதன், ‘ஏர்­டெல் பேமென்ட் பேங்க்’கில் கணக்கு துவக்கி விடு­வ­தாக, ஆதார் ஆணை­யத்­திற்கு புகார்­கள் வந்­துள்ளன.

இதை­ய­டுத்து, ஆணை­யம், பார்தி ஏர்­டெல், ஏர்­டெல் பேமென்ட்ஸ் பேங்க் ஆகி­ய­வற்­றுக்கு, ‘நோட்­டீஸ்’ அனுப்­பி­யது.அதில், மொபைல் போன் வாடிக்­கை­யா­ள­ரின் ஒப்­பு­த­லின்றி, ஏர்­டெல் பேமென்ட் பேங்க் கணக்கு துவக்­கு­வது, சட்­ட­மீ­றல் மற்­றும் அப­ரா­தம் விதிக்­கக் கூடிய குற்­றம் என்­றும், உட­ன­டி­யாக, தகுந்த நட­வ­டிக்கை எடுத்து, அறிக்கை அனுப்­பும்­படி அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது.

இதற்கு, ‘வாடிக்­கை­யா­ள­ரின் ஒப்­பு­த­லு­டன் மட்­டுமே, வங்­கிக் கணக்கு துவக்­கப்­ப­டு­கிறது. சட்ட விதி­க­ளின்­படி, வாடிக்­கை­யா­ள­ருக்கு விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்தி, வெளிப்­ப­டை­யான செயல்­பா­டு­களை தொடர்ந்து மேற்­கொள்­வோம்’ என, பார்தி ஏர்­டெல் மற்­றும் ஏர்­டெல் பேமென்ட் பேங்க் பதில் கடி­தம் அனுப்பி உள்ளன.
திருப்பதி பிரமோற்சவ விழா : ரேணிகுண்டாவுக்கு சிறப்பு ரயில்

பதிவு செய்த நாள்23செப்
2017
00:01


சென்னை: திருப்பதி பிரமோற்சவ விழாவையொட்டி, அரக்கோணம் - ரேணிகுண்டா; சென்னை கடற்கரை - அரக்கோணம் இடையே, இன்று முதல், அக்., 2 வரை, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

l அரக்கோணத்தில் இருந்து, மாலை, 3:00க்கு புறப்படும் ரயில், மாலை, 5:00 மணிக்கு, ஆந்திரமாநிலம், ரேணிகுண்டா சென்றடையும். திருத்தணி, ஏகாம்பரகுப்பம் மற்றும் புத்துார் நிலையங்களில் நின்று செல்லும்

l ரேணிகுண்டாவில் இருந்து, மாலை, 5:35க்கு புறப்படும் ரயில், இரவு, 9:00 மணிக்கு, சென்னை கடற்கரை சென்றடையும். புத்துார், ஏகாம்பரகுப்பம், திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், திருநின்றவூர் மற்றும் பெரம்பூரில் நின்று செல்லும்

l சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, பயணியர் வருகையொட்டி, தேவையான நேரங்களில், அரக்கோணத்திற்கு, தினசரி பாசஞ்சர் ரயில் இயக்கப்படும்

l சென்னை சென்ட்ரலில் இருந்து, அரக்கோணத்திற்கு, மதியம், 1:00க்கு இயக்கப்படும், விரைவு பயணியர் ரயில், பட்டாபிராம் சைடிங் நிலையத்தில் இருந்து, புறநகர் மின்சார ரயில் பாதையில் இயக்கப்படும். இதனால், இன்று முதல், அக்., 2 வரை, திருநின்றவூரில் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மானாமதுரையில் மர்மக்காய்ச்சல் பரவுகிறது சுகாதார சீர்கேட்டால் மக்கள் பாதிப்பு
பதிவு செய்த நாள்22செப்
2017
23:33


மானாமதுரை மானாமதுரை ஒன்றியத்தில் மர்ம காய்ச்சலுக்கு ஏற்கெனவே 3 பேர் பலியான நிலையில் நேற்று ராஜகம்பீரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பலியானார்.

மானாமதுரை ஒன்றியத்தில் தற்போது கடந்த 15 நாட்களாக ராஜகம்பீரம்,பீக்குளம்,காட்டுஉடைகுளம்,மேலப்பிடாவூர், கீழமேல்குடி,உட்பட பல ஊர்களில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் மானாமதுரை மருத்துவமனைக்கு தினந்தோறும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

மேலும் தனியார் மருத்துவமனைகளிலும் மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏ.பீக்குளம்
கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி என்பவர் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு மானாமதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மதுரை தனியார் மருத்து
வமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார்.அதே போன்று காட்டு உடைகுளத்தில் 10 வயது
மருது என்ற பள்ளி மாணவனும்,65 வயது மூதாட்டி ஒருவரும் மர்மக் காய்ச்சலுக்கு பலியாயினர். 

இந்நிலையில் ராஜகம்பீரம் கிராமத்தைச் சேர்ந்த பாலசண்முகம் 32 மனைவி பிரியா30,என்பவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார்.
இறந்து போன பிரியாவிற்கு 4 மற்றும் 3 ,1வயதில் மூன்று ஆண்குழந்தைகள் உள்ளனர்.

கிராமங்களில் பரவும் மர்மக்காய்ச்சல்:

மானாமதுரை ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன.தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் கிராமங்களில் ஆங்காங்கே குப்பை அகற்றப்படுவதில்லை. சரியான வாறுகால் வசதியில்லாமல் வீடுகளின் முன்பு சாக்கடைநீர் தேங்கி கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி கிராமங்களில் பலருக்கும் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல கிராமங்களில் சுகாதாரமான குடிநீர் வசதி கிடைக்காமல் பலர் அசுத்தமான நீரை பருகுவதினாலும் பலருக்கு காய்ச்சல்,வாந்தி,வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அவதிக்குள்ளாகிவருகின்றனர்.இதனை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் பாராமுகமாக இருப்பதினால் மர்மக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.
ஆகவே மாவட்ட நிர்வாகத்தினர் மானாமதுரை ஒன்றியத்தில் காய்ச்சல் பரவி வரும் இடங்களில் மருத்துவ முகாம் நடத்தி தீவிரமாக பரவிவரும் மர்மகாய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்று கிராம மக்களும்,சமூகஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து
வருகின்றனர்.
அசல் ஓட்டுனர் உரிமம் மறந்தால் சிறையா?: ஐகோர்ட் கேள்வி

பதிவு செய்த நாள்23செப்
2017
04:33



சென்னை: 'அசல் ஓட்டுனர் உரிமத்தை மறந்து வைத்து விட்டாலும், சிறை தண்டனை விதிப்பது சரியா?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

உத்தரவு:

வாகனங்களை ஓட்டுபவர்கள், அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும் என, தமிழக போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்தது. அதை தொடர்ந்து, 'ஓட்டுனர் உரிமம் இல்லாமல், வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு, அபராதம் அல்லது மூன்று மாத சிறை தண்டனை விதிக்க, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஜி.பி.,யின் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

விசாரணை:

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கம் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில், ஆஜரான வழக்கறிஞர்கள் சுப்ரமணியன், கோவிந்தராமன், 'அசல் உரிமம் இல்லை என்றால், சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க, சட்டத்தில் இடமில்லை. எனவே, அதை ரத்து செய்ய வேண்டும்' என, கோரினர்

தண்டனை சரியல்ல

அதற்கு, தலைமைநீதிபதி, ''வாகனங்கள் ஓட்டும் போது, அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும். உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்பது வேறு; ஓட்டுனர் உரிமம் இல்லாமல், வாகனத்தை ஓட்டுவது என்பது வேறு. ''இந்த வேறுபாட்டை தெளிவுபடுத்த வேண்டி உள்ளது. அதற்காக, ஒருவர், உரிமத்தை எடுத்து வர மறந்து விட்டால், சிறை தண்டனை என்பது சரியல்ல,'' என்றார். பின், விரிவான உத்தரவை பிறப்பிப்பதாக, முதல் பெஞ்ச் தெரிவித்தது.
திருமண மோசடி செய்யும் என்.ஆர்.ஐ.,பாஸ்போர்ட்...மத்திய அரசுக்கு
உயர்நிலை நிபுணர் குழு பரிந்துரை


புதுடில்லி: 'என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடு வாழ் இந்தியர்களை திருமணம் செய்து பாதிக்கப்படும் பெண்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், என்.ஆர்.ஐ.,யின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யலாம்' என, மத்திய அரசுக்கு உயர்நிலை நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது.



'திருமணத்துக்கு பின் மனைவியை வெளிநாட்டுக்கு அழைத்து செல்வதில்லை; அங்கு அவர்களை கொடுமைபடுத்துகின்றனர்' என, என்.ஆர்.ஐ.,க்கள் மீதான புகார்கள் அதிகரித்து வருகின்றன.தேசிய பெண்கள் ஆணையத்தின் தகவலின்படி, 2014ல் மட்டும், என்.ஆர்.ஐ.,க்களை திருமணம் செய்த பெண்கள், 346 புகார்களை அளித்துள்ளனர்.

இதை தடுக்கவும், பாதிக்கப்படும் பெண்களுக்கு உரிய உதவிகள் கிடைக்கவும், மத்திய வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜும், பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை அமைச்சர், மேனகாவும் இணைந்து, ஒரு குழுவை அமைத்தனர்.

ஓய்வு பெற்ற நீதிபதியும், பஞ்சாப் மாநில, என்.ஆர்.ஐ., கமிஷன் முன்னாள் தலைவருமான, அரவிந்த் குமார் கோயல் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது;

இந்தக் குழு, பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தியது. அதனடிப்படையில், மத்திய அரசக்கு பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது.

நிபுணர் குழு பரிந்துரைகள் குறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது:பாதிக்கப்படும் பெண்கள் அளிக்கும் புகாரின் அடிப்படை யில்,சம்பந்தபட்ட, என்.ஆர்.ஐ., யின் பாஸ்போர்ட் முடக்கப்படுவதன் மூலம், விரைவாக நீதி கிடைக்க வாய்ப்புள்ளது. பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ், என்.ஆர்.ஐ., மீது எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால் அல்லது கோர்ட் உத்தரவு கிடைத்தால், அவரை நாடு கடத்தும் நடவடிக்கையை எடுக்க முடியும்.

ஆனாலும், இது குறித்து விழிப்புணர்வு இல்லாதது மற்றும் மிகவும் சிக்கலான நடைமுறைகளால், இதை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவது இல்லை. பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையையும், நாடு கடத்தும் சட்டப் பிரிவு களில் சேர்க்க வேண்டும்; இதன் மூலம், இந்தக் குற்றங்களை செய்வோரை நாடு கடத்தி வந்து, அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
வெளிநாட்டில் உள்ள பெண், அங்கு வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் நிதியுதவியை, 1.8 லட்சம்ரூபாயில் இருந்து, 3.6 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.
இவ்வாறு பல பரிந்துரைகளை, உயர்நிலை நிபுணர் குழு வழங்கியுள்ளது. இது குறித்து விரைவில் முடிவு செய்யப்பட்டு, சட்ட வடிவம் கொடுக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருமண பதிவு கட்டாயம்:

மத்திய அரசு நியமித்து உள்ள உயர்நிலை நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரைகளில் கூறப்பட்டு உள்ளதாவது: திருமணம் செய்து ஏமாற்றுவது உள்ளிட்டவற்றை தடுக்கவும், உடனடி நடவடிக்கை எடுக்கவும், என்.ஆர்.ஐ., திருமணத்தை பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும். இதற்காக மத்திய அரசு சட்டம் நிறைவேற்றுவதற்கு முன், மாநில அரசுகள் அதை செயல்படுத்தலாம்.

திருமணப் பதிவின்போது, என்.ஆர்.ஐ.,க்களின் பாஸ்போர்ட் விபரம், சமூக பாதுகாப்பு எண், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முகவரிகள் ஆகியவற்றை குறிப்பிடுவதை கட்டாயமாக்க வேண்டும். பஞ்சாபில் இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

தேசிய பெண்கள் ஆணையத்தைத் தவிர, என்.ஆர்.ஐ., திருமண பிரச்னையை கவனிக்க, உள்துறை, வெளியுறவு, பெண்கள் வளர்ச்சி துறைகள் இணைந்த ஒரு குழுவை அமைக்க வேண்டும்.இவ்வாறு பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

Thursday, September 21, 2017

Chennai to get new world-class airport in five years and a fancy aero-city around it


By Express News Service  |   Published: 20th September 2017 09:13 PM  |  
For representational purposes (File | EPS)
CHENNAI: Chennai is all set to go hip, with a new Greenfield world-class airport, and a Gurgaon like aero-city developed around it.  All this in just five years, according to plans revealed by the Centre.
The Centre on Wednesday said it was working with the state government on firming up plans for a second airport in Chennai and creating urban development around it.
Union Minister of State for Civil Aviation Jayant Sinha told reporters that efforts were on to acquire 1,000 to 2,000 acres of land to develop a world-class airport from scratch, and make Chennai a global hub for aviation.
The minister said the aero-city would be developed on the lines of Gurgaon with globally-advanced facilities. He also said the new airport would be built within next five years as Chennai airport would have attained saturation by then.
What happens then to existing plans for expanding the present Arignar Anna International Terminal? Asked about this, the minister said work was progressing and bids for building new terminals as part of Phase II expansion of Chennai airport will be floated in January next year.
“From the date of bidding, it will take 24 to 36 months to complete the entire second phase of Chennai airport expansion,” he said.
Expansion work is likely to cost more than Rs 2,000 crore, and would include walkators (like an escalator on a flat surface) within and connecting terminals, like in several new airports where distances between gates are too long to walk.
The minister, who was in the city to inaugurate the opening of air services from Chennai to Mysuru, said the first phase of regional connectivity scheme has been a success with large players like Indigo, Jet Airways and Spicejet wanting to take part in the bids under the second phase.
“There are 400 airstrips in India and under the first phase, we are planning to open 100 of them. So we still have 300 more airstrips to be opened,” he said.
The minister also revealed that he was looking into suggestions of having more international flights to Coimbatore and Tiruchy and improved services to Madurai.
Trujet connects second rung cities
Hyderbad based low-cost airline Trujet began operations from Chennai to Mysuru under the regional connectivity scheme with more than 49 passengers boarding the flight from Chennai on Wednesday. “The inaugural price is Rs 1,000 while normal fare for booking of first 35 seats would be Rs 2,000. The maximum fare will be Rs 3,000,” said the managing director of Trujet V Mahesh.
“We will be starting operations from Salem under the regional connectivity scheme from November first week,” said Mahesh. Trujet will also be launching a service from Thoothkudi to Chennai on November, which does not come under the regional connectivity scheme.
Was Tamil Nadu's NEET Ordinance not even read by Union Health Ministry?

By Thinakaran Rajamani | Express News Service | Published: 20th September 2017 02:17 AM |

Last Updated: 20th September 2017 09:22 AM

MADURAI: When Attorney General KK Venugopal reversed his own position and trashed Tamil Nadu’s NEET exemption Ordinance, he did so after being asked to take a relook by the Union Health Ministry, which provided him what was reported as additional facts and past judgments of the apex court.

However, as information obtained under RTI reveals, the ministry had not even received the Ordinance, much less discussed it, before prodding Venugopal to reconsider his stand.

To put this in perspective, the information that Venugopal had reversed his stand appeared in the media on August 21. The next day, the apex court made NEET mandatory, for even TN. However, according to its own admission, the Health Ministry received a copy of the Ordinance from the Home Ministry only on August 23.

“There was no meeting held in this regard,” said the chief public information officer of the Union Health Ministry, in reply to request from this correspondent under RTI, seeking minutes of the meeting, if any. “It is painful to know that the ministry was adamant about rejecting the Ordinance without even holding a discussion,” said a senior health department official here, who spent long hours in pursuit of the sanction from the Centre.

After TN forwarded the copy of the Ordinance to the Union Home Ministry on August 14 seeking sanction to proceed, it was referred to the HRD and law ministries. When the latter sought his opinion, Venugopal had given positive response, which buoyed the mood back in Tamil Nadu. However, when it was the turn of Health Ministry, it reportedly asked the A-G to reconsider the position. “The ministry was reluctant to approve the Ordinance even after the two other ministries had cleared it,” said the TN official.

The State submitted the Ordinance only after the Union minister Nirmala Sitharaman said that the Centre would cooperate, the official pointed out. “When an Ordinance is unanimously adopted by a State, it should be respected by the ministries concerned at the Centre,” he added.

Anna University VC appointment: Madras HC upholds appointment of member in search committee


By PTI  |   Published: 20th September 2017 11:30 PM  |  
Last Updated: 20th September 2017 11:30 PM   
Anna University Building, Guindy (File | EPS)
CHENNAI: The Madras High Court today upheld the appointment of Anantha Padmanabhan as a member of the search committee to select the vice chancellor of Anna University.
"We find no illegality in the appointment of Anantha Padmanabhan as a member of the search committee," the first bench of Chief Justice Indira Banerjee and Justice M Sundar said as it dismissed the petition by Students Federation of India (SFI) assailing his inclusion.
Yesterday the court was informed by state Advocate General Vijay Narayan that former Chief Justice of India R M Lodha, who heads the search committee, has decided to quit, as inclusion of Padmanabhan in the committee has been assailed in the court.
The court declined to accept the contentions of the counsel for SFI that Padmanabhan was holding the post of Professor of Eminence in the university when he was nominated as a committee member, which is against the bye-laws.
He is also a research supervisor in the university, they contended.
Yesterday the court had raised doubts about the authenticity of the resignation letter of Padmanabhan, as it found two such letters in the case documents, one with an official stamp and other on a plain paper.
The Advocate General then informed the court that he will produce all the records on the resignation of Padmanabhan as the Professor of Eminence in the university.
When the PIL was taken up for hearing today, the advocate general produced the original copies of the letter.
The court said he has resigned from the post of Professor of Eminence before being nominated to the search committee.
The research supervisor post is one without any remuneration, the bench said.

PONDY OFFICIALS

BUS STRIKE

NEWS TODAY 30.12.2025