Saturday, October 17, 2026


திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறித்து...


திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை! - கோப்பிலிருந்து...

Updated On : 16 அக்டோபர் 2026, 4:31 pm IST

இணையதளச் செய்திப் பிரிவு

திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை(அக். 17) மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (அக். 16) திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தருமபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (அக். 17) நீலகிரி, கோயம்புத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், வேலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கடலூர், கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CORRIGENDUM Subject: Corrigendum regarding NRI documents to be submitted by candidates for Round-1 of PG Counselling 2026

Ref. U-12021/ 09/2026-MEC GOVERNMENT OF INDIA 

DIRECTORATE GENERAL OF HEALTH SERVICES , NEW DELHI-110108 

Dated: 14.10.2026 

CORRIGENDUM Subject: Corrigendum regarding NRI documents to be submitted by candidates for Round-1 of PG Counselling 2026 

Kind Attention Candidates: Reference is made to the NRI Chapter of PG Information Bulletin regarding documents to be submitted for claim of NRI seat. In this regard, it is informed that in addition to documents stated in the NRI chapter, candidates belonging to Category-I (NRI Candidate/ Parents/ Real Brother/ Real Sister) and Category IV (Indian to NRI ) are required to submit Valid Passport of Parents/ Real Brother/ Real Sister/ Sponsor for registration and verification. 

Notice posted on: 14.10.2026

NMC grants one-time relief to eligible MBBS students to clear first-year exam


NMC grants one-time relief to eligible MBBS students to clear first-year exam

These eligible students will be permitted one additional attempt over and above the prescribed four attempts for passing the First Professional MBBS Examination, thus taking it to a total of five attempts.


The National Medical Commission File photo | ANI


Updated on:
16 Oct 2026, 4:34 pm

NEW DELHI: The National Medical Commission (NMC) has granted one additional attempt, or mercy attempt, to eligible MBBS students admitted from the 2019-20 academic year onwards to clear the First Professional MBBS Examination.

This one-time move will increase the maximum number of attempts from four to five.

According to a notice by Dr.Raghav Langer, NMC Secretary, the matter was considered in response to representations from students, universities, and other stakeholders seeking an additional attempt due to exceptional circumstances, including disruptions caused by the Covid-19 pandemic, health-related issues, and other personal difficulties.

According to the Commission, the decision was approved at its 18th meeting, held on September 23.

The NMC said the one-time exceptional transitional relaxation is only for students admitted to the MBBS course from academic year 2019-20 and onwards.

These eligible students will be permitted one additional attempt over and above the prescribed four attempts for passing the First Professional MBBS Examination, thus taking it to a total of five attempts.

Also, the additional attempt shall be available even where the student has crossed the prescribed four-year period for completion of the First Professional MBBS Course.

This will be only if the student's admission continues to remain valid and has not been cancelled by the concerned University/College.

The NMC also clarified that students admitted in MBBS Course from academic year 2019-20 and onwards and who have already availed one additional mercy attempt, thus exhausting a total of five attempts, due to an earlier decision of the Commission or any directions of a Court, will not be entitled to any further mercy attempt under the present decision.

“Accordingly, the present relaxation shall not entitle any such student to a sixth attempt,” the public notice said.

NEWS TODAY 17.10.2026

 


















முன்னுரிமை பெற வேண்டும் முதியோர் நலன்!


தினமணி  நடுப்பக்க கட்டுரைகள்

முன்னுரிமை பெற வேண்டும் முதியோர் நலன்!

இந்தியாவில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோர்களின் எண்ணிக்கை சுமார் 17.3 கோடியாக உள்ளது.



Updated On :17 அக்டோபர் 2026, 6:34 am IST


தற்போது இந்தியாவில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோர்களின் எண்ணிக்கை சுமார் 17.3 கோடியாக உள்ளது. இது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 10.5% ஆகும். வரும் 2036-ஆம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை 23 கோடியாகவும், 2050-ஆம் ஆண்டிற்குள் 34.7 கோடியாகவும் (மொத்த மக்கள்தொகையில் 21%) உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2046-ஆம் ஆண்டுக்குள், இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த குழந்தைகளின் எண்ணிக்கையைவிட முதியோர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று ஐ.நா. சபையின் மக்கள்தொகை நிதியம் தெரிவிக்கிறது.

சர்வதேச அளவில் 50 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 2050-இல் 200 கோடியைத் தாண்டிவிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

மொத்த மக்கள்தொகையில் 2011-ஆம் ஆண்டு 10.6 சதவீதமாக இருந்த முதியோர்கள் 2031-ஆம் ஆண்டு 18.2 சதவீதமாக உயருவார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிற மாநிலங்களைவிட தமிழ்நாடு விரைவாக முதியோர் சமூகமாக மாறி வருகிறது. இந்தத் தகவலை தமிழக நிதி அமைச்சர் அண்மையில் அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், 2100-ஆம் ஆண்டளவில் தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் ஏறத்தாழ பாதி பேர் முதியோர்களாக இருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

மருத்துவ வளர்ச்சி, ஊட்டச்சத்து மேம்பாடு, சுத்தம், மருத்துவ அறிவியல், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி போன்றவற்றால் முதியோர்களுடைய வாழ்நாள் உயர்ந்து கொண்டே வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இருப்பினும், முதியவர்களின் உடலில் நோய்த் தடுப்புச் சக்திகுறைந்து விடுவதால் அவர்களுக்கு எலும்பு சார்ந்த சிக்கல்கள், சர்க்கரை நோய், முதுமை மறதி, தூக்கக் கோளாறுகள், உடல் நடுக்கம் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவை அவர்களின் மன நலத்தையும் வெகுவாகப் பாதிக்கின்றன. இதனால், அவர்கள் பிறரைச் சார்ந்திருக்கும் நிலை, சமூகத்திலிருந்து விலகி வாழ்தல், குடும்ப உறுப்பினர்களால் புறக்கணிக்கப்படுதல் போன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன.

முதியோர்கள் தங்களின் ஆரோக்கியத் தேவைகளைப் புரிந்துக் கொண்டு நோய்த் தடுப்புக்கான பரிசோதனைகளைச் செய்து வர வேண்டும்.

அன்றாட உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் புரதம், உயிர்ச்சத்து, தாதுச்சத்து, நார்ச்சத்து நிறைந்த சமச்சீர் உணவு ஆகியவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்வது அவசியம்.

மிதமான உடற்பயிற்சி, நடை, யோகா, தியானம் போன்றவை உடல் வலிமை, சமநிலை, நெகிழ்வுத்தன்மை போன்றவற்றை பேண அவர்களுக்கு உதவும். மேலும், அவர்கள் புகை, மது, புகையிலைப் பொருள்கள் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. உடலுக்குப் போதுமான உறக்கம் கொடுப்பது அவசியம். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பது, அவர்களின் மன நலனை நன்கு பாதுகாக்கும். மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மார்ச் 2020 முதல் ரயிலில் பயணச் சலுகை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இவ்வாறான புழக்கத்தில் இருந்த முதியோர்களுக்கான பல சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. தொற்று பாதிப்புகள் முழுமையாக நீங்கிவிட்ட நிலையிலும், இந்த சலுகைகள் முதியோருக்கு மீண்டும் வழங்கப்படவில்லை.

மோசமான பொருளாதார நிலையிலும் தற்போது மூத்த குடிமக்கள் அனைவரும் முழுக் கட்டணம் செலுத்தியே பயணிக்க வேண்டியுள்ளது. ரயில் கட்டணச் சலுகையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள மூத்த குடிமக்கள் அமைப்புகள் தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன.

70 வயதுக்கும் மேற்பட்ட அனைத்து முதியோர்களுக்கும் அவர்களின் பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரையிலான ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவக் காப்பீடு திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், எந்த மருத்துவமனையும் இந்தச் சலுகையை முதியோர்களுக்கு அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

முதுமையில் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் தனிப்பட்ட ஒரு முதியவரின் பிரச்னை மட்டுமல்ல, அது ஒரு சமூகம் தொடர்ந்து சந்திக்கும் ஒரு சவாலுமாகும். நாம் முதியோரை விலைமதிக்க முடியாத வளமாக அங்கீகரிக்க வேண்டும். அவர்களுடைய கவலைகளைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

இளமைக் காலத்தில் குடும்பங்களும், சமூகமும் முன்னேற உழைத்தவர்கள் இவர்கள். இவர்களில் பலர் முதியோர் இல்லங்களிலும், சமூகத்திலும் இழிநிலையில் வாழ்வது இனியாவது தவிர்க்கப்பட வேண்டும். அதிகமாக வாழும் தற்போதைய சமூகத்தில் அவர்களுடைய நலன்கள் காக்கப்பட வேண்டும். அதற்கு அரசும், குடும்பங்களும், சமூக ஊடகங்களும், சமூகமும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அவர்களின் நலன் காக்கும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். தேர்தல் நேர வாக்குகளுக்காக மட்டும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்வது கூடாது. அவர்கள் இழந்த சலுகைகளை திரும்பப் பெற்று அவர்களும் கண்ணியத்துடன் சமூகத்தில் வாழும் நிலையைப் பெறுதல் வேண்டும். இதை சாத்தியமாக்க நாம் ஒன்றிணைவோம். அவர்கள் வாழ்வு சிறக்க பாடுபடுவோம். முதியோர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண 14567 என்ற இலவச உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

வெற்றிப் பயணம் - விரயமா, வரப்பிரசாதமா?


வெற்றிப் பயணம் - விரயமா, வரப்பிரசாதமா?

முதல்வர் விஜய் தொடங்கி வைத்த பெண்களுக்கான இலவச வெற்றிப் பயணத் திட்டம் விரயமா, வரப்பிரசாதமா? என்பதைப் பற்றி...


பெண் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து வெற்றிப் பயணத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் விஜய். - @CMOTamilnadu

Updated On :12 அக்டோபர் 2026, 4:45 am IST



தமிழகத்தில் பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம் 2021-இல் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில், சாதாரணக் கட்டணப் பேருந்துகளில் மட்டுமே பெண்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இத்திட்டம் தற்போது மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. டீலக்ஸ் பேருந்துகளிலும், புறநகர்ப் பேருந்துகளிலும் பெண்கள் இனி இலவசமாகப் பயணிக்கலாம்.

வெற்றிப் பயணம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்குப் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதில் ஆச்சரியம் இல்லை. அதேசமயத்தில், இத்திட்டம் பெண்களுக்கான சமூக முதலீடா? அல்லது பெண்களை வாக்குவங்கி ஆக்குவதற்காக அரசின் நிதியைப் பயன்படுத்தும் முயற்சியா? என்பன போன்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.


இத்திட்டம் தொடங்கியதிலிருந்து பல கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெண்களின் தினசரி பேருந்துப் பயண எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இந்தத் திட்டத்தால் ஒரு குடும்பத்துக்கு மாதந்தோறும் சராசரியாக ரூ.1,000 வரை சேமிப்பு ஏற்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதன் மூலம், தினசரி பயனாளிகள் எண்ணிக்கை சுமார் 84 லட்சம் பெண்கள் என்ற அளவை எட்டும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சமூகப் பலன்கள்


இலவசப் பயணத்தால் பெண்களுக்குக் கிடைக்கும் பொருளாதார மற்றும் சமூகப் பலன்களைப் பார்க்கும்போது, பேருந்துக் கட்டணம் காரணமாக, ஒரு பெண் வேலைக்குச் செல்ல முடியாமல் இருந்தால், குடும்பத்துக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. தொலைவில் உள்ள கல்வி நிறுவனத்தைத் தேர்வு செய்ய முடியாமல் போனால், தரமான கல்வி வாய்ப்பு குறைகிறது. மருத்துவமனைக்குச் செல்ல பணம் இல்லாவிட்டால், உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் போகலாம். ஆகையால், இலவச பேருந்துப் பயணத்தைக் குடும்பப் பொருளாதாரக் கோணத்தில் பார்த்தால், பெண்களின் பயணச் செலவு குறைகிறது; இதனால், குடும்பச் செலவு குறைகிறது.


அதன்மூலம் மிச்சமாகும் தொகை, குடும்ப உறுப்பினர்களின் கல்வி, உணவு, மருத்துவம் போன்றவற்றுக்குப் பயன்படுகிறது. குடும்பத்தின் செலவழிக்கக்கூடிய வருமானம் அதிகரிக்கிறது, பெண்கள் வேலைக்குச் செல்வது அதிகரிக்கிறது, மாணவிகளின் கல்வி வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை அணுகுவது எளிதாகிறது. இதன்மூலம் பெண்களின் சமூக மற்றும் பொருளாதார நிலை மேம்படுகிறது. இதனால்தான் அரசு இதை சமூக முதலீடு என்று குறிப்பிடுகிறது.

ஆனால், ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல, இதற்கு எதிர்மறைப் பக்கமும் இருக்கிறது. இலவசம் என்ற சொல் இனிமையாக இருக்கலாம். ஆனால், பொருளாதாரத்தில் எதிலும் இலவசம் என்பதற்கு இடமில்லை. எல்லாவற்றுக்கும் ஒரு விலை//கட்டணம் உண்டு. ஒருவர் செலுத்தாத கட்டணத்தை மற்றொருவர் செலுத்துகிறார்.

இங்கே பேருந்துப் பயணத்துக்காகப் பெண்கள் செலுத்தவேண்டிய கட்டணத்தை போக்குவரத்துத் துறைக்கு அரசு செலுத்துகிறது. அவ்வாறு கட்டணம் ஈடுசெய்யப்படாவிட்டால், போதிய வருவாய் இல்லாமல், போக்குவரத்துத் துறையின் நிர்வாகம் சீர்குலையும் சூழல் ஏற்படும்.


ஊழியர்களின் ஊதியம், புதிய பேருந்துகள் வாங்குவது, பேருந்துகள் பராமரிப்பு போன்ற அனைத்தும் பாதிக்கப்படும் என்பதால், அரசு மானியம் வழங்குவதன் மூலம் இலவசப் பயணங்களால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டுகிறது.

2026-27 தமிழக பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,561 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் போக்குவரத்துக் கழகங்களுக்கான மானியம் மட்டும் ரூ.7,675 கோடி. அதாவது, மொத்த போக்குவரத்துத் துறைக்கான ஒதுக்கீட்டில் மானியம் மட்டும் சுமார் 56.6%. எரிபொருள் விலை, ஊதியம், உதிரிபாகங்கள், பேருந்து பராமரிப்பு ஆகிய செலவுகள் அதிகரிக்கும்போது மானியத் தேவையும் அதிகரிக்கும். இவ்வாறாக, ஆண்டுதோறும் உயரும் மானியத்தொகையை அரசால் எந்த அளவுக்குச் சமாளிக்க முடியும் என்கிற கேள்வி எழுகிறது.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சமூகப் பொறுப்புடன் செயல்படுபவை. குறைந்த கட்டணத்தில் கிராமங்களுக்குப் பேருந்து இயக்குதல், மாணவர்களுக்கு சலுகை, முதியோர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு சலுகை, தொலைதூரப் பகுதிகளுக்குச் சேவை எனப் பல்வேறு சமூகப் பணிகளையும் அவை செய்கின்றன. இதனால் அவற்றை லாப நோக்கம் மட்டுமே கொண்ட சாதாரண வணிக நிறுவனங்களாகக் கருத முடியாது. அதேசமயத்தில், வருவாய்க்கும் செலவுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கும்போது, பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். ஆண்டுதோறும் அதிகரிக்கும் மானியத் தொகை, போக்குவரத்துத் துறையின் மீது பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

புதிய பேருந்துகள் வாங்குவதற்கு நிதியில்லாமல் போகக்கூடும், பழைய பேருந்துகளைப் பராமரிப்பதில் சிரமம் ஏற்படலாம். பேருந்துகளின் பராமரிப்புச் செலவைக் குறைக்க வேண்டிய நிலை உருவாகலாம், ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணிக்கொடை, சலுகைகள் போன்றவற்றை வழங்குவதில் தொய்வு ஏற்படலாம், இது ஊழியர்களின் சேவைத் தரத்தைப் பாதிக்கும்.
Advertise with us

வாடகை வாகனங்கள் பாதிப்பு

இலவசப் பயணம் பொதுப் போக்குவரத்தின் பயன்பாட்டை அதிகரிக்கும் என்பதால் அதற்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்காவிட்டால், கூட்ட நெரிசல் காரணமாகப் பொதுமக்கள் சிரமப்படுவார்கள். அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் என்பது தனியார் பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களின் வருவாயைக் குறைக்க வாய்ப்பிருக்கிறது. போக்குவரத்துத் துறைக்கான மானியம் அதிகரித்துக் கொண்டே செல்வது, பிற துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டைப் பாதிக்கும்.

முறையான கண்காணிப்போ, கட்டுப்பாடுகளோ இல்லாததால் அரசுக்குக் கூடுதல் செலவு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. தாய் மாமன் தங்க மோதிரம் போன்ற திட்டங்களின் கீழ் பிற மாநிலங்களைச் சேர்ந்தோர் பயன்பெற முடியாது. ஆனால், இலவச பயணத் திட்டத்தில் அத்தகைய கட்டுப்பாடு எதுவும் இல்லை. பிற மாநிலங்களைச் சேர்ந்த பெண்களுக்கும் இலவச பயணச் சலுகை கிடைக்கிறது. இதற்கான செலவுத் தொகையையும் தமிழக அரசே ஏற்கிறது.

அதேபோல், இலவச பயணச் சீட்டு வழங்குவதில் இருக்கும் பல்வேறு பிரச்னைகளும் சுட்டிக்காட்டப்படுகின்றன. சாதாரணப் பேருந்துகளில், ஏற்கெனவே அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டுகள் கொடுக்கப்படுகின்றன. பயணிகள் குறைவாக இருக்கும் சமயங்களில் ஒருசில நடத்துநர்கள் டிக்கெட்டுகளைக் கிழித்து வீசிவிட்டு, பெண்கள் பயணித்ததாகக் கணக்குக் காட்டுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

அதேபோல், டீலக்ஸ் பேருந்துகளில், ஒருசில நடத்துநர்கள் டிக்கெட் வருவாயை அதிகரித்துக் காட்டும் நோக்கில், கடைசி நிறுத்தத்தைக் குறிப்பிட்டு பயணச் சீட்டுகளை வழங்குவதாகவும் புகார் கூறப்படுகிறது. இதனால் அரசு வழங்கும் கூடுதல் மானியத் தொகை உண்மையான பயனாளிகளைச் சென்றடையாமல் போகிறது. பொழுதுபோக்காக ஊரைச் சுற்றி வருவது போன்ற தேவையற்ற பயணங்களும் அரசுக்குக் கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்துவதும் சுட்டிக்காட்டப்படுகிறது. இதுபோன்ற நிலை உருவாகாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.

தீர்வு என்ன?

இலவசப் பயணத் திட்டத்துடன் சேர்த்து போக்குவரத்துக் கழகங்களின் நிதி மறுசீரமைப்பும் அவசியமாகிறது. இலவசப் பேருந்துப் பயணத்தை நிறுத்துவது பிரச்னைகளுக்குத் தீர்வு அல்ல. மாறாக, பொருளாதார ரீதியாகவும், போக்குவரத்து ரீதியாகவும் இத்திட்டத்தை நிலைத்திருக்கச் செய்வதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.

ஒவ்வொரு இலவசப் பயணத்துக்கும் அரசு நிர்ணயிக்கும் மானியத் தொகை வெளிப்படையாக இருக்க வேண்டும். அதற்கான சமூகப் பலன் கணக்கிடப்பட வேண்டும், பெண்கள் சேமிக்கும் தொகை மட்டுமல்ல; இலவசப் பயணத் திட்டத்தின் மூலம் எத்தனை பேர் பணிக்குச் சென்றனர்? எத்தனை மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல முடிந்தது/ குடும்ப வருமானத்தில் என்ன மாற்றம் ஏற்பட்டது? என்பது ஆண்டுதோறும் மதிப்பிடப்பட வேண்டும்.

அப்போதுதான் இத்திட்டத்தின் நோக்கம் எத்தகைய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மதிப்பிட முடியும். போக்குவரத்துக் கழகங்களின் எரிபொருள் சேமிப்பு, நேரக் கட்டுப்பாடு, பேருந்து பயன்பாடு, பராமரிப்பு போன்ற செயல்திறன் அளவுகோல்களுக்கு ஏற்ப மானியத்தை வழங்கலாம்.

அரசுப் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் ஒரே வழித்தடத்தில் இயங்கும்போது, தனியாருக்கு ஏற்படும் இழப்பை ஆய்வு செய்து, தேவையான இடங்களில் வழித்தட அடிப்படையிலான மானியம் அல்லது சேவை ஒப்பந்த முறையை பரிசீலிப்பதன் மூலம் தனியார் பேருந்துகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்யலாம்.

தமிழ்நாட்டில் தற்போது சுமார் 21,000 பேருந்துகள் உள்ள நிலையில், அவற்றில் சுமார் 19,000 பேருந்துகள் மட்டுமே இயக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவற்றிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பேருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட ஆயுள்காலத்தைத் தாண்டி, இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

எனவே, அதிக எண்ணிக்கையில் புதிய பேருந்துகளை வாங்க வேண்டிய கட்டாயமும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க வேண்டிய அவசியமும் அரசுக்கு உள்ளன. எனவே, இலவச பயணங்களுக்கான இழப்பீட்டை வழங்குவதோடு நிறுத்திக்கொள்ளாமல், புதிய பேருந்துகள் வாங்குவதிலும், கிராமப்புற இணைப்புச் சேவைகளிலும் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தவேண்டும்.

உண்மையான வெற்றி என்னவென்றால், பெண்களுக்கு இலவசப் பயணம்; அரசுக்கு கட்டுப்படுத்தப்பட்ட மானியச் செலவு; போக்குவரத்துக் கழகங்களுக்கு நிதி நிலைத்தன்மை; தனியார் பேருந்துகளுக்கு நியாயமான போட்டி; பயணிகளுக்கு தரமான சேவை. இந்த ஐந்தையும் ஒரே நேரத்தில் உறுதி செய்தால்தான் இலவசப் பயணம் உண்மையான வெற்றிப் பயணமாகும். இல்லையெனில், இன்று பெண்களுக்கு மிச்சமாகும் ரூபாய், நாளை அரசின் கணக்கில் கூடும் சுமையாக மாறக்கூடும்.

தமிழக அரசின் ஒட்டுமொத்த நிதிநிலை ஏற்கெனவே பல்வேறு நலத்திட்டங்கள், மானியங்கள், அரசுப் பொதுத்துறை நிறுவனங்களின் கடன்கள் உள்ளிட்டவற்றால் பெரும் அழுத்தத்தில் இருப்பதால், இந்தத் திட்டத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரே கேள்வி, இலவசப் பயணத் திட்டம், பெரும் நிதிச்சுமையாக மாறிவிடாமல் தொடர்ந்து செயல்படுவதற்கு அரசு என்ன செய்யவேண்டும் என்பதுதான்.

பெண்களுக்கு வெற்றிப் பயணமாக இருக்க வேண்டும்; அதேசமயத்தில், அரசுக்கு தேவையற்ற செலவாக மாறிவிடக்கூடாது. எனவே, திட்டத்தை நிறுத்தாமல் இந்த இலவசப் பயணம் யாருக்கு? எதற்காக? எவ்வளவு? என்ற அடிப்படையில் முறைப்படுத்த முடியுமா? என்பதே அடுத்த கட்டக் கொள்கை விவாதமாக இருக்கவேண்டும்.

ஆயுள்காலத்தைக் கடந்தும் 'கடமையாற்றும்' பேருந்துகள்

சென்னை மாநகர போக்குவரத்துக் கழக (எம்டிசி) பேருந்துகளில் 15 ஆண்டுகளைக் கடந்த 611 பேருந்துகள் இன்னும் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்துள்ளது.

தற்போது மாநகர் போக்குவரத்துக்கழகத்தின் கீழ் சுமார் 4,153 பேருந்துகள் 35 பணிமனைகள் மூலம் இயக்கப்படுகின்றன. இதில் நாள்தோறும் 3,933 திட்டமிட்ட பேருந்து சேவைகள் நடைமுறையில் உள்ளன.

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரபூர்வ புள்ளிவிவரத்தின்படி 2026 செப்டம்பர் வரை பேருந்துகளின் எண்ணிக்கை 4,148 ஆகவும், சராசரி வயது 5 ஆண்டுகளாகவும் உள்ளது. நாள்தோறும் சராசரியாக 34.16 லட்சம் பயணிகள் பேருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் 9 ஆண்டுகள் சேவை செய்த பிறகு அல்லது 12 லட்சம் கி.மீ. ஓடிய பிறகு இதில் எது முதலில் நிறைவடைகிறதோ அதன்படி மாற்றப்பட வேண்டும்.

தேசிய வாகனக் கழிவு கொள்கை நடைமுறைக்கு வந்த 2023 ஏப். 1-ஆம் தேதி நிலவரப்படி, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 15 ஆண்டுகளைக் கடந்த 529 பேருந்துகள் இருந்தன. அந்த எண்ணிக்கை தற்போது 611- ஆக அதிகரித்துள்ளது.

தனியார் பேருந்துகளுக்கு பெரும் பாதிப்பு

தமிழகத்தில் 8,500 தனியார் பேருந்துகள் இயக்கப்ப டுகின்றன. தனியார் பேருந்துகள் மூலம் ஓட்டுநர், நடத்துநர், மெக்கானிக் என நேரடியாக 60,000 பேரும், மறைமுகமாக 25,000 பேரும் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர். வெற்றிப்பயணம் திட்டத்தால், பெண்கள் தனியார் பேருந்துகளில் ஏறுவதில்லை. இதனால் தனியார் பேருந்துகளுக்கு 70 சதவீதம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. 2018-க்குப் பின்னர் தனியார் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

2018-இல் டீசல் விலை ரூ.65 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.102 ஆக உள்ளபோதும் கூட பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. தனியார் பேருந்துகளை இயக்க 1 கி.மீ-க்கு ரூ.52-இல் இருந்து ரூ.60 வரை செலவாகிறது. ஆனால் வெற்றிப்பயணம் திட்டத்தால் தனியார் பேருந்தின் வருமானம் 1 கி.மீ-க்கு ரூ.30-ஆகக் குறைந்து விட்டது. அனைத்துப் பேருந்துகளும் நஷ்டத்தில்தான் இயக்கப்படுகின்றன.

ஒரே தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளுக்கும், அரசுப் பேருந்துகளுக்கும் இடையே நேர இடைவெளியைப் பின்பற்ற உத்தரவிட வேண்டும். வருவாய் இழப்பை சமாளிக்க தனியார் பேருந்துகளுக்கு சில சலுகைகள் அல்லது மானியத்தை அரசு அளிக்க வேண்டும்.

- எஸ்.ஆர்.சிவபெருமாள். நாகை-மயிலாடுதுறை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கச்செயலர்

செலவு அல்ல, முதலீடு...


அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் வரவேற்கத்தக்க ஒன்று. பெண்கள் இலவச பயணத்தால் ரூ. 3,000 கோடி முதல் ரூ.4,000 கோடி வரை கூடுதல் செலவாகிறது. இதை மாநில அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியமாக வழங்குகிறது. இந்தத் தொகை செலவு அல்ல, முதலீடாகும்.

இதன்மூலம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்; மாநிலத்தின் ஜிடிபி உயர்கிறது. பெண்கள் பல்வேறு வேலைக்காக தினமும் சுமார் 10 முதல் 15 கிலோ மீட்டர் பயணம் செய்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் உயர்வு அடைகிறது. மாணவியர் இலவச பேருந்தில் பள்ளிக்குச் செல்வதால் பெண்கல்வி பயில்வோர் சதவீதம் அதிகரித்துள்ளது.

ரூ. 1 செலவு செய்தால் ரூ.4 வருவாய் கிடைக்கிறது. அதனால் இது சிறந்த திட்டம். உலகில் 15 நாடுகளில் இலவச பயணம் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டத்தால் நடத்துநர், ஓட்டுநர்களுக்கு பணிச் சுமை அதிகம் என்றாலும் பணியாளர்கள் மகிழ்ச்சியுடனே பணியாற்றுகின்றனர். மேலும் நடத்துநர், ஓட்டுநர்களுக்கு ஊக்கத் தொகையாக 1.5 சதவீதம் வழங்கப்படுகிறது.


அ.சௌந்தரராஜன், சிஐடியு தேசிய துணைத் தலைவர்.

முழு படிக்காசு வழங்க வேண்டும்

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு காலை, மதிய உணவு, தேநீர்அருந்துவதற்காக படிக்காசு வழங்கப்படுவது நடைமுறையாக இருந்து வருகிறது. ரூ.100 வருவாயில் ஒரு ரூபாய் 15 காசு படிக்காசாக வழங்கப்படும். புறநகர்ப் பேருந்துகளில் பணியாற்றுபவர்களுக்கு குறைந்தது ரூ.150 முதல் ரூ.160 வரை படிக்காசு முன்பு கிடைத்து வந்தது. நகரப் பேருந்துகளில் பணியாற்றுபவர்களுக்கு ரூ.50 முதல் ரூ.70 வரை படிக்காசு கிடைத்து வந்தது.

நகரப்பேருந்துகளில் கட்டணமில்லா பயணத் திட்டம் அறிமுகமானது முதல் வருவாய் குறைந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு ரூ.20முதல் ரூ.30 வரையிலும்,வெற்றிப்பயணத் திட்டம் அறிமுகமானது முதல் புறநகர்ப் பேருந்துகளின் ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு ரூ.35 முதல் ரூ.40 வரை மட்டுமே படிக்காசாக கிடைக்கிறது.

ரூ.7000 முதல் ரூ.8000 வரை வசூலித்த நகரப் பேருந்துகளில் தற்போது ரூ.3000 வரைதான் வருவாய் கிடைக்கிறது. அதேபோல, முன்பு ரூ.17 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை வசூலித்த புறநகர்ப் பேருந்துகளில் தினசரி வருவாய் ரூ.6000

முதல் ரூ.7000 என்று குறைந்துவிட்டது. இதனால், 12 மணி நேரம் பணியாற்றக்கூடிய ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு கிடைத்து வந்த முழுமையான படிக்காசு தற்போது, வெகுவாகக் குறைந்துவிட்டதால்அவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். எனவே, மகளிர் பயணத் தொகைக்குரிய படிக்காசையும் சேர்த்து, முன்பு வழங்கப்பட்டது போல தற்போதும் படிக்காசு தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.வேலு, பொதுச் செயலர், அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) விழுப்புரம்.

அரசின் பரிசீலனைக்கு...

இலவசப் பயணங்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்கலாம் (மாதத்திற்கு 60 பயணங்கள்). பிற திட்டங்களைப் போன்று இதற்கும் வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கலாம் (ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சம்). தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் மின்னணு பயண அட்டை வழங்கி, ஒவ்வொரு பயணத்தையும் பதிவு செய்தல்.

பெண்களின் பயணத்துக்கு தனியார் பேருந்துகளுக்கும் அரசு மானியம். அரசுப் பேருந்து, மினி பேருந்து, ஷேர் ஆட்டோ, வீடு என்ற இணைப்புப் போக்குவரத்து மாதிரியை உருவாக்கி, வீடுவரை பாதுகாப்பான இலவச வெற்றிப் பயணமாக்கலாம்.

பெண்களுக்குக் கிடைக்கும் இலவசப் பயணப் பயனை குறைக்காமல், ஷேர் ஆட்டோ-மினி பேருந்து-சிறு வாகன உரிமையாளர்களைப் போட்டியாளர்கள் என்பதிலிருந்து கடைசி மைல் போக்குவரத்து கூட்டாளிகளாக மாற்றுவது நீண்டகால தீர்வாக அமையும்.

-நமது சிறப்பு நிருபர்கள் குழு

Amid empty seats, govt slashes dental PG cut-off

Amid empty seats, govt slashes dental PG cut-off 

Anuja.Jaiswal@timesofindia.com 17.10.2026

New Delhi: For the third straight year, govt has lowered the qualifying cut-off for NEETMDS for the third consecutive year. The qualifying percentile for NEET-MDS 2026 has been reduced by 20.576 percentage points across categories, following reductions of 19.863 perc‐ entage points in 2025 and 21.692 percentage points in 2024. A senior health ministry official estimated that around 1,200 MDS seats remained vacant nationwide. The official said state-wise vacancy figures were not available and said the estimate was based on division of seats between all-India quota, which accounts for 50%, and state counselling, which covers the remaining 50%. 




The Medical Counselling Committee (MCC) has listed 460 clear vacancies and 762 virtual vacancies for Round 2 of counselling this year. The seats are spread across govt and private institutions, which account for 7,716 seats in 287 colleges. Of these, 46 govt colleges have 1,103 seats, while 241 private colleges account for 6,613. Virtual vacancies are not confirmed vacancies as these seats are currently allotted to candidates who may opt for upgradation. If they move to another seat, their existing seats could become available for allotment to other candidates. 

The General/EWS qualifying score has been reduced from 308 to 234 out of 960, while General-PwBD score has fallen from 289 to 218 and SC/ST/OBC score from 271 to 200. In 2025, the respective scores were reduced from 261 to 197, 244 to 182 and 227 to 168. National Board of Examinations in Medical Sciences said the 2026 revision followed a letter from the ministry dated Oct 12 and was made under the MDS regulations. The notice did not explicitly state that vacant seats had prompted the decision. The NEETMDS 2026 results were declared on June 2.

திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை! திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்...