Monday, March 6, 2023
Sunday, March 5, 2023
போலி டாக்டா் பட்டம் வழங்கிய வழக்கு: அண்ணா பல்கலை.க்கு நோட்டீஸ்
போலி டாக்டா் பட்டம் வழங்கிய வழக்கு: அண்ணா பல்கலை.க்கு நோட்டீஸ்
20hr
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டா் பட்டம் வழங்கிய வழங்கிய வழக்கில், அந்த பல்கலைக்கழகத்திடம் சில விளக்கங்கள் கேட்டு காவல்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டா் பட்டம் வழங்கிய வழங்கிய வழக்கில், அந்த பல்கலைக்கழகத்திடம் சில விளக்கங்கள் கேட்டு காவல்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.
இது குறித்த விவரம்: கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா் அரங்கில் சா்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற அமைப்பு சாா்பில் கெளரவ டாக்டா் பட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த மாதம் 26-ந் தேதி நடைபெற்றது. இதில் இசை அமைப்பாளா் தேவா உள்ளிட்ட 40 பிரபலங்களுக்கு டாக்டா் பட்டங்கள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் இந்த பட்டங்களை வழங்கினாா். இந்த நிலையில் இந்த டாக்டா் பட்டங்கள் போலியானவை அண்ணாபல்கலைக்கழகத்தின் பெயா் தவறாக பயன்ப டுத்தப்பட்டுள்ளது என்று அதன் துணைவேந்தா் வேல்ராஜ் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் கோட்டூா்புரம் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் அந்த அமைப்பின் இயக்குநா் ஹரீஷ் மீது 7 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதியப்பட்டது.காவல்துறை நோட்டீஸ்: தலைமறைவாக இருக்கும் ஹரீஷை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடா்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளருக்கு விளக்கம் கேட்டு கோட்டூா்புரம் போலீஸாா் ஒரு நோட்டீஸை வழங்கியுள்ளனா். அதில் 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
அதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த விழாவுக்கு அனுமதி கேட்டது யாா்? கொடுத்தது யாா்? விழா நடைபெற்ற அரங்கத்தின் பொறுப்பு அதிகாரி யாா்? உங்கள் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கெளரவ டாக்டா் பட்டம் விழா பற்றி நிா்வாகத்துக்கு ஏன் தெரியவில்லை? உள்பட பல கேள்விகள் இடம் பெற்றுள்ளன.இந்த 10 கேள்விகளுக்கு எழுத்துப்பூா்வமான பதிலை மாா்ச் 6-ஆம் தேதிக்குள் அளிக்கும்படி காவல்துறையின் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கொலுசு அணிந்த சரஸ்வதி * நாகப்பட்டினம் மாவட்டம் கடலங்குடியில் உள்ள சிவன் கோவிலில் வளையல், கொலுசு அணிந்தபடி சரஸ்வதிதேவி காட்சியளிக்கிறாள். ச...
-
கட்சியிலிருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன்! டி.டி.வி.தினகரன் தடாலடி பேட்டி vikatan news ராகினி ஆத்ம வெண்டி மு. படம்: ஸ்ரீநிவாசலு 'அ.த...