Tuesday, July 31, 2018

`ஒரே நேரத்தில் நான்கு பேரிடம் வீடியோ காலில் பேசலாம்'- வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்

சத்யா கோபாலன்

'வாட்ஸ்அப் குரூப் வீடியோ கால் சேவையை இனி இந்தியாவில் பயன்படுத்தலாம்' என F8 டெவலப்பர்ஸ் மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.



நீண்ட நாள் சோதனைக்குப் பிறகு ஒருவழியாக, இந்தியாவுக்கு வந்தது வாட்ஸ்அப் குருப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் வசதி. இந்த அறிவிப்பை F8 டெவலப்பர்ஸ் மாநாட்டில் ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வசதிமூலம், ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு குரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் செய்யலாம். கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் இந்த வசதி இந்தியாவில் உள்ள பீட்டா வெர்ஷன் போன்களில் சோதனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இது, ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியை இன்று முதல் அனைத்து போன்களிலும் பயன்படுத்தலாம் என்றும், இதைப் பயன்படுத்த விரும்புபவர்கள் ,தங்களின் பிளே ஸ்டோர் ஆப் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் சென்று புதிதாக வழங்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் வெர்ன்ஸனை அப்டேட் செய்ய வேண்டும். பிறகு, வாட்ஸ்அப் வீடியோ காலின் வலது ஓரத்தின் மேலே உள்ள add participant பட்டனை அழுத்தினால் போதும். நீங்கள் பேச விரும்புபவரை அதன்மூலம் தேர்ந்தெடுக்கலாம். மேலும், இந்த வீடியோ கால் வசதியும் end-to-end encryption முறையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மூன்றாவது நபர் உங்களின் செயல்களைப் பார்க்க முடியாது என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வீடியோ மற்றும் வாய்ஸ் கால் மூலம் ஒரு நாளைக்கு 2 பில்லியன் நிமிடங்கள் வரை பேசலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர் கலைஞர்', 'பெரியவர் கலைஞர்!' - எடப்பாடி பழனிசாமி இப்படிக் குறிப்பிட்டது ஏன்?

ஆ.விஜயானந்த்

கருணாநிதியைக் கௌரவிப்பதற்கு நான் தயக்கம் காட்டவில்லை. இதனால், அ.தி.மு.க-வுக்கு எந்தவித பாதிப்பும் வராது.




தி.மு.க தலைவர் கருணாநிதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கச் சென்றது, அரசியல்ரீதியாக கவனத்தைப் பெற்றுள்ளது. ' 'தலைவர்', 'பெரியவர்' என கருணாநிதியை அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது, தி.மு.க-வுக்கு மரியாதைகொடுப்பதில் தவறு இல்லை' என அமைச்சர்களிடம் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் கருணாநிதி. கடந்த 29-ம் தேதி மாலை, அவரது உடல்நிலையில் ஏற்ற இறக்கமான சூழல் நிலவுவதாக வெளியான தகவலால், மருத்துவமனை முன்பு குவிந்தனர் தொண்டர்கள். மருத்துவமனைக்குள் என்ன நடக்கிறது என்ற விவரத்தை அறிய முடியாமல், ' மீண்டு வா தலைவா...உன் குரலுக்காகக் காத்திருக்கிறோம்' என உணர்ச்சிவசப்பட்டு குமுறினர். அன்று இரவு 10 மணியளவில், மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியான பிறகே, இயல்பு நிலை திரும்பியது. 'படிப்படியாகக் குறைந்த பல்ஸ் ரேட்டால் மிகுந்த கவலையில் ஆழ்ந்தனர் கருணாநிதி குடும்பத்தினர். அடுத்த சில நிமிடங்களில், மருத்துவ சிகிச்சையின் பயனாக மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டார் கருணாநிதி. அவர் மீண்டு வந்தது உண்மையிலேயே அதிசயம்தான்' என நெகிழ்ந்தனர் மருத்துவர்கள்.

கருணாநிதியின் உடல்நிலைகுறித்து மாறுபாடான தகவல்கள் வெளியானதால், 'அரசு நிகழ்ச்சிகளை ரத்துசெய்துவிட்டு சென்னை திரும்புகிறார் எடப்பாடி பழனிசாமி. இன்று நள்ளிரவு 1 மணியளவில் மருத்துவமனைக்குச் செல்கிறார்' என்றெல்லாம் செய்தி பரவியது. அதற்கு, முதல்வர் அலுவலகம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மறுநாள் காலையில், காவேரி மருத்துவமனையில் கருணாநிதியைச் சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. அதன்பிறகு, ஸ்டாலினிடமும் கனிமொழியிடமும் அவரது உடல்நிலைகுறித்து கேட்டறிந்தார். இந்தப் புகைப்படங்கள் வெளியானதும், 'வட இந்தியாவில் நிலவக்கூடிய அரசியல் நாகரிகம், தமிழகத்திலும் துளிர்விட்டுள்ளது' என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.



கருணாநிதியைச் சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ' முன்னாள் முதல்வர், தலைவர் கலைஞரின் உடல்நிலை சீராக உள்ளது. துணை முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோருடன் பெரியவர் கருணாநிதியை நேரடியாகச் சென்று பார்த்தேன். அவர் நலமுடன் இருக்கிறார். மருத்துவக்குழு அவரை கவனித்துவருகிறது’ என்றார். ' தலைவர் கலைஞர்', 'பெரியவர் கலைஞர்' என்றெல்லாம் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டதை ஆச்சர்யத்தோடு கவனித்தனர் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள். இதுகுறித்து அமைச்சர்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி, 'பழைய அரசியல் முடிந்துவிட்டது. கருணாநிதியோடு அம்மாவுக்கு (ஜெயலலிதா) இருந்த போட்டி 2016 சட்டமன்றத் தேர்தலோடு முடிந்துவிட்டது. கருணாநிதியைக் கலைஞர் என்பதாலோ பெரியவர் என்பதாலோ என்ன விளைவு வந்துவிடப் போகிறது?

தற்போது அவர், நமக்கு அரசியல் எதிரி அல்ல. ஸ்டாலினுக்கு எதிராக மட்டும்தான் நமது அரசியல் இருக்க வேண்டும். எனவே, கருணாநிதியைக் கௌரவிப்பதற்கு நான் தயக்கம் காட்டவில்லை. இதனால், அ.தி.மு.க-வுக்கு எந்தவித பாதிப்பும் வராது. அன்றைக்கு எம்.ஜி.ஆர் இறந்தபோது, திட்டமிட்டு கருணாநிதியின் சிலையை உடைத்தார்கள். அன்று இருந்த அரசியல் காலகட்டம் வேறு. இப்போதுள்ள காலகட்டம் என்பது வேறு. தி.மு.க-வில் உள்ள தலைவர் பதவியை கருணாநிதிக்கு கௌரவமாகத்தான் கொடுத்திருக்கிறார்கள். உண்மையில், ஸ்டாலின்தான் தலைவராக இயங்கிக்கொண்டிருக்கிறார். அரசியல் போட்டியில் ஸ்டாலின்தான் இருக்கிறார்; கருணாநிதி அல்ல. நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்கும்போதே அரசியலில் இருந்து கருணாநிதி ஓய்வுபெற்றுவிட்டார். அவரைப் புகழ்வதால் எந்தப் பிரச்னையும் இல்லை. தி.மு.க-வுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதிலும் எந்தத் தவறும் இல்லை' எனக் கூறியிருக்கிறார்.
முதுமை, நோய்மைக்கு சவால் விடும் கருணாநிதியின் ஆரோக்கிய ரகசியம்!

ஜி.லட்சுமணன்

பெ.மதலை ஆரோன்

HARIF MOHAMED S

அயராத உழைப்பு, உணவுக் கட்டுப்பாடு, நடைப்பயிற்சி... கருணாநிதியின் அன்றாட வாழ்க்கை இப்படித்தான் இருந்தது!




இதழியல், சினிமா, இலக்கியம், அரசியல் எனத் தொட்ட துறைகள் அனைத்திலும் உச்சத்தை அடைந்தவர் கருணாநிதி. 12 வயதில் `மாணவ நேசன்' என்ற கையெழுத்து பிரதியைத் ஆரம்பித்தபோதே தொடங்கியது அவரது பொது வாழ்க்கைப் பயணம். பல்வேறு தடைகளைத் தாண்டி எல்லா துறைகளிலும் யாராலும் எட்ட முடியாத அளவுக்குப் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார் அவர்.



தமிழகத்தில் கருணாநிதி கால்படாத நிலப்பரப்பே இல்லை. குக்கிராமங்களுக்குக் கூடச் சென்றிருக்கிறார். பொதுவாழ்க்கையில் நுழைந்த காலம் முதல் அமர முடியாத அளவுக்கு உடல் தொய்ந்துபோகும் வரை பயணித்துக்கொண்டே இருந்தவர் அவர். இன்னொரு பக்கம், அரசியல் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் மன அழுத்தங்கள், குடும்ப உறவுகளால் ஏற்படும் உளைச்சல்கள் என அனைத்தையும் லாகவமாகக் கையாண்டு தன் ஆரோக்கியத்துக்குச் சிறிதும் பங்கம் வராதவகையில் செயல்பட்டார் கருணாநிதி.

இன்று 35 வயதுக்காரர்களுக்கெல்லாம் இதயநோய் வருகிறது. சர்க்கரை நோய் பொதுநோயாகி விட்டது. முகம் சோர்வாக இருந்தாலே, சர்க்கரை நோய் டெஸ்ட் செய்துகொள் என்று பிறர் ஆலோசனை சொல்லும் அளவுக்கு அந்தநோய் இளம் தலைமுறையைப் பீடித்துக்கொண்டிருக்கிறது. 95 வயதில், முதுமை உடலை பீடித்து முடக்கிப்போட்டிருக்கும் இந்த நிமிடம் வரை கருணாநிதியின் இதயம் ஆரோக்கியமாகத் துடித்துக்கொண்டிருக்கிறது. சர்க்கரை உட்பட எவ்விதமான நோய்களும் அவரை நெருங்கியதில்லை.

இந்த அளவுக்குத் திட்டமிட்ட வாழ்க்கை முறை. எவ்வளவு பரபரப்பான பணிகளுக்கு மத்தியிலும் உடற்பயிற்சி, யோகா என உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மிகவும் மெனக்கெடுவார் கருணாநிதி.

`அதிகாலையில் எழுபவன் இன்னொரு நாளைப் பெறுகிறான்' என்பார்கள். கருணாநிதி இரவு எத்தனை மணிக்குப் படுக்கைக்குச் சென்றாலும் காலை ஐந்து மணிக்கு எழுந்துவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த நடைமுறையை மிகவும் கடுமையாகப் பின்பற்றினார். உடன் பயணிப்பவர்கள், உதவியாளர்களெல்லாம் மிரண்டு போவார்கள்.



சிறுவயது முதலே விளையாட்டில் அவருக்கு ஆர்வமுண்டு. பூப்பந்து, கபடி... இரண்டும் அவருக்குப் பிடித்த விளையாட்டுகள். நண்பர்களோடு கபடி விளையாடி சில நேரங்களில் படுகாயங்கள் கூட ஏற்பட்டுள்ளதாக அவர் பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

31 வயதில் கருணாநிதி சென்ற கார் ஒரு விபத்தில் சிக்கியது. அதில் அவரது கண் பாதிக்கப்பட்டது. கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது. அதன்பிறகே, பவருடன் கூடிய கறுப்புக்கண்ணாடியை அவர் அணிய ஆரம்பித்தார். காலையில் கண்ணாடியை அணிந்தால் இரவு உறங்கச் செல்வதற்கு முன்புதான் கழட்டுவார்.



தொடக்கத்தில், வாரத்தில் இரண்டு நாள்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டபிறகு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை விட்டுவிட்டார்.

ஒருமுறை கன்னத்தில் வீக்கம் ஏற்பட்டு வதைத்தது. `உல்லன் நூல் பட்டால் நல்லது' என்று மருத்துவர் சொல்ல அதன்பிறகு உல்லன் சால்வை அணிய ஆரம்பித்தார். பிறகு மருத்துவரின் ஆலோசனைப்படி மஞ்சள் சால்வை அணிவதை வழக்கமாக்கிக்கொண்டார்.

உணவு விஷயத்திலும் கருணாநிதி மிகவும் கட்டுப்பாடாக இருப்பார். சாப்பாட்டில் தேங்காய் பயன்பாடு அறவே ஆகாது. இட்லிக்குக் கூட தேங்காய்ச் சட்னி வைத்துக்கொள்ள மாட்டார். கொத்தமல்லி சட்னி, தக்காளிச் சட்னி, வெங்காயச் சட்னி, சாம்பார்தான் ஊற்றிக்கொள்வார். ஆப்பம் என்றால் தேங்காய்ப்பாலுக்குப் பதில் பசும்பால் சேர்த்துக்கொள்வார். எண்ணெயும் குறைவாகப் பயன்படுத்துவார்.

வெளியில் சாப்பிடுவது அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது. பிள்ளைகள் உணவகத்தில் சாப்பிட்டால் கூடத் திட்டுவார். வெளியூர் சென்றால், கூடவே ஒரு சமையல் குழுவும் உடன் செல்லும். ஒருநாள் பயணமென்றால் மிகவும் பிடித்த நண்பர்கள் வீட்டில் சாப்பிடுவார்.

முன்பெல்லாம் மதியம் 12 மணிக்கு சிக்கன் சூப் குடிப்பார். வீட்டில் நிகழ்ந்த ஒரு சம்பவத்துக்குப் பிறகு சிக்கன் , மட்டன் சாப்பிடுவதை அறவே நிறுத்திவிட்டார், சிக்கன் சூப் வெஜிடபிள் சூப் ஆகிவிட்டது. சூப் குடிப்பதற்கு ஒருமணி நேரத்துக்கு முன்பு ஒரு கப் காபி குடிப்பார். வெயில் காலமென்றால் காபிக்குப் பதில் இளநீர். மாதம் மூன்று முறை மீன் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக, திரவ உணவுகளை முற்றிலுமாக தவிர்த்துவிட்டார் கருணாநிதி.

மதிய சாப்பாட்டில் கண்டிப்பாக ஒரு கீரை இருக்க வேண்டும். கத்தரிக்காய், முள்ளங்கி விரும்பிச் சாப்பிடுவார். குழம்புதான் விரும்புவார். வறுவல், பொறியல் உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட்டார். மாலை நேரத்தில் தோசை இருக்க வேண்டும். 70 வயதுக்கு மேல் பிரெட் சாப்பிடத் தொடங்கினார். டீயில் தொட்டுச் சாப்பிடுவது பிடிக்கும். இரவு, இரண்டு சப்பாத்தியும் குருமாவும். திராட்சை, சப்போட்டா, பப்பாளி, பேரிச்சம்பழங்களும் சாப்பிடுவார்.

வயிறு நிறைய சாப்பிடுவதில்லை. அளவோடுதான் சாப்பிடுவார். அறிவாலயம் கட்டத் தொடங்கியபிறகு வாக்கிங் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார். நடக்க இயன்ற காலம் வரை தினமும் 20 நிமிடமாவது வாக்கிங் சென்றுவிடுவார். யோகக்கலை வல்லுநரான தேசிக்காச்சாரியிடம் யோகா கற்றுக்கொண்டார். வாக்கிங் முடிந்ததும் யோகா செய்யத் தவறுவதில்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இஞ்சி, ஏலக்காய் போட்ட டீ அருந்துவார். இடையிடையே கேரட் டாலட் சாப்பிடுவார். கேரட்டைப் பொடியாக நறுக்கி அதோடு எலுமிச்சை சாறு, உப்புச் சேர்த்துத் தருவார்கள்.

வெயிலோ, பனியோ, வெதுவெதுப்பான நீரில் குளிப்பது அவருக்கு மிகவும் பிடிக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு மூச்சுப்பயிற்சி, சூரிய நமஸ்காரம் போன்றவற்றையும் செய்யத் தொடங்கினார். கடும் உழைப்புக்கு மத்தியில் ஆரோக்கியத்தின் மேல் அவர் காட்டிய அக்கறைதான் உடல் வலிமைக்கு மட்டுமன்றி மன வலிமைக்கும் உறுதுணையாய் இருந்திருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

கோபாலபுரத்தில் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் டாக்டர் கோபால்தான் கருணாநிதியின் உடல்நிலையை முற்றிலும் அறிந்தவர். தினமும் வந்து சர்க்கரை அளவையும், ரத்த அழுத்தத்தையும் பரிசோதிப்பார். நட்பு அடிப்படையில் நரம்பியல் மருத்துவர் டாக்டர் ராமமூர்த்தியும் செக் அப் செய்வதுண்டு.

2006-ம் ஆண்டில், முதுமையின் காரணமாக, மூட்டுகள் உடம்பைத் தாங்கும் சக்தியை இழந்துவிட்டன. இருந்தாலும் அவரது இயல்பு வாழ்க்கையைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. சக்கர நாற்காலியைப் பயன்படுத்த ஆரம்பித்தார். அதன் பின்னரும்கூட தினமும் காலை ஒரு மணிநேரம் எளிய முறையில் யோகா, மூச்சுப் பயிற்சி செய்து வந்தார். நடப்பது குறைந்துவிட்டதால், வாரம் ஒருமுறை கை, கால்களுக்கு ஆயில் மசாஜ் செய்வதுண்டு.

கருணாநிதி அடிக்கடி எதிர்கொண்ட பிரச்னை, செரிமான பிரச்னைதான். கடந்த சில ஆண்டுகளாக சாதத்தை மிக்ஸியில் போட்டு திரவமாக்கியே சாப்பிட்டு வந்திருக்கிறார்.

நெஞ்சுச்சளி காரணமாக 2016 ம் ஆண்டு செப்டம்பரில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பிறகு மருத்துவமனையில் நெஞ்சுச்சளி அகற்றப்பட்டது. ஆனாலும் கருணாநிதியின் வயதைக் கருத்தில் கொண்டு தொடர்ச்சியான சுவாசத்துக்காக `ட்ரக்கியோடோமி' கருவி நிரந்தரமாகப் பொருத்தப்பட்டது. மருத்துவர்கள். கழுத்துக்குக் கீழே துளையிடப்பட்டு இக்கருவி பொருத்தப்பட்டுள்ளதால், அவரால் பேசமுடியவில்லை. அந்த சமயங்களில் விழிக்கும் நேரம், தூங்கும் நேரம் ஒழுங்கில்லாமல் போனது. படிப்படியாகச் செயல்பாடுகள் குறைந்தன.

வயோதிகம் அவரை முடக்கிபோட்டதே தவிர, நோய்களின் காரணமாக அவரது உடல்நிலை பாதிக்கப்படவில்லை. அவரின் மனோதிடமும் எந்தச் சூழலிலும் விடாமல் செய்த உடற்பயிற்சிகளும் யோகாவும் உணவுக்கட்டுப்பாடும்தான் இந்தச் சூழலை எதிர்கொள்ளும் வலிமையைக் கொடுத்திருக்கின்றன!

"இப்பக் கூட நான் ஏன் சிரிக்கிறேன் தெரியுமா..?!" - 'காவேரி'-யில் கலகலத்த துரைமுருகன் #Karunanidhi

ந.பா.சேதுராமன்



காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியைப் பார்ப்பதற்காக, கட்சித் தொண்டர்கள் திரண்டுவருவதால், சென்னை ஆழ்வார்பேட்டை மட்டுமல்லாது நகரின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் வழக்கத்தைவிட அதிகரித்துக் காணப்படுகிறது. காவேரி மருத்துவமனை வளாகத்தில் திரளும் தி.மு.க. தொண்டர்களை அப்புறப்படுத்தவும் முடியாமல், அவர்களுக்குச் சமாதானமும் சொல்ல முடியாமல் போலீஸாரும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் திணறுகின்றனர்.

'அப்பா நல்லா இருக்கார், அவருக்கு ஒரு குறையும் இல்லை' என்று கனிமொழி எம்.பி-யும், 'நானே கிளம்பி வீட்டுக்குப் போறேன்யா, அதைப் பார்த்துமா தெரியலே... தலைவர் நல்லாயிட்டாருய்யா' என்று மு.க. அழகிரியும் தொண்டர்களுக்கு குளுகோஸ் ஏற்றிச் சென்றனர். 'என் மகனுக்குத் தலைவர்தான், உதயசூரியன் என்று பெயர் வைத்தார். என் தந்தை போன்றவர் கலைஞர். அவர் குணமானால், நான் என் தலைமுடியைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன்' என்றபடி திருவாரூரைச் சேர்ந்த தி.மு.க. தொண்டர் ஒருவர், மருத்துவமனை அருகிலேயே மொட்டை போட்டுக் கொண்டார். 'தலைவர், குணமாகி வந்ததும் முதல்ல உன் மொட்டையிலதான் ஒரு குட்டு வைக்கப் போறாரு, தலைவருக்கு மொட்டை போடுறதும் பிடிக்காது. பிறரை மொட்டை அடிப்பதும் பிடிக்காது' என்று சிலேடையாக ஒருவர் கமென்ட் அடித்தார்.

கண்களில் இருந்து கசியும் கண்ணீருடன், அந்தக் கமென்ட் அடித்தவர், தி.மு.க. வழக்கறிஞரான ஆர்.கே.நகர் மருதுகணேஷ். 'எப்படியாவது மருத்துவமனைக்குள் நுழைந்து விடவேண்டும்' என்ற எண்ணத்தில் மிகுந்த பிரயத்தனம் செய்து கொண்டிருந்த தொண்டர்களை அதிகளவில் பார்க்க முடிந்தது. காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிற நோயாளிகளின் உறவினர்கள், கழுத்தில் அந்தந்த வார்டுக்கான அடையாள அட்டையுடனேயே, மருத்துவமனையை விட்டு வெளியே வருவதும், உள்ளே போவதுமாக இருக்கிறார்கள். போலீஸார் அறிவுறுத்தலின்பேரில், மருத்துவமனையில் குறிப்பிட்ட கேட்டையே அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். வெளியூரில் இருந்து வந்திருந்த சில தி.மு.க. தொண்டர்கள், அவர்களிடம், "நீங்க எந்த வார்டுப் பக்கம் இருக்கீங்க, நாலாவது மாடியிலயா? தலைவர் எப்படி இருக்காரு? பேப்பர்லாம் படிக்கிறாரா?" என்றெல்லாம் வெள்ளந்தியாக விசாரித்துக் கொண்டிருந்தனர்.



சிலர் இன்னும் ஒருபடி மேலேபோய், "நீங்க வெளியே போகும்போது எங்களை உங்களோட சொந்தக்காரர்னு சொல்லி மருத்துவமனைக்குள்ளே கூட்டிட்டுப் போயிடறீங்களா?" என்று கெஞ்சிக் கொண்டிருந்தனர். "ஒரு நோயாளிக்கு ஒரு விசிட்டர் மட்டும்தான் இருக்க முடியும். நாங்கள் திரும்பிச் செல்லும்போது யாரையாவது, உள்ளே அழைத்துப் போவதாக இருந்தால் முன்கூட்டியே மருத்துவமனை நிர்வாகத்தில் சொல்லி, என்ட்ரி போட்டால் மட்டுமே அழைத்துச் செல்ல முடியும். அப்படியே நாங்கள் உங்களைக் கூட்டிக் கொண்டு போனாலும், எங்க 'விஸிட்டர் பாஸ்' இருக்கும் அறையைத் தாண்டி, நீங்கள் வேறு இடத்துக்குப் போகமுடியாது. அடுத்தமுறை வரும்போது, கண்டிப்பாக உங்களை உள்ளே அழைத்துப் போகப் பார்க்கிறேன்" என்று தெரிவித்தார் ஒரு நோயாளியின் அட்டெண்டர்.

  அரசு நிகழ்ச்சிகளை ஒத்திவைத்து விட்டு, காவேரி மருத்துவமனைக்கு இன்று காலை வந்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மருத்துவமனையில் சுமார் 20 நிமிடம்வரை இருந்துவிட்டு, வெளியே வந்ததும், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் அவர். "முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஸ்டாலின், கனிமொழி ஆகியோரிடமும் விவரம் கேட்டறிந்தேன். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், நானும் கருணாநிதியை நேரில் பார்த்தோம்" என்று அவர் சொன்னதும், தி.மு.க. தொண்டர்கள் கூடுதல் உற்சாகம் அடைந்தனர். திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், ஆ.ராசா போன்ற தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள், கருணாநிதி உடல்நிலை குறித்து உற்சாகமாகப் பேட்டி அளித்தபோதிலும், கடந்த சில நாட்களாகவே தூக்கம் தொலைத்திருந்ததால், அவர்களின் முகம் வாடியிருந்ததைக்கூட தொண்டர்களால் ஏற்க முடியவில்லை. பேட்டியளித்தத் தலைவர்களின் முகக்குறிப்புகளை வைத்து, கருணாநிதியின் உடல் நலத்தை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் மட்டும் மருத்துவமனை வளாகத்தில், சிரித்த முகத்துடன் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். அங்கிருந்த தொண்டர்களிடம் "நான் இவ்வளவு சந்தோஷமா இருக்கும்போதே நீங்களெல்லாம் கிளம்பி வீட்டுக்குப் போயிருக்க வேண்டாமா? என் சிரிப்புக்கும், சந்தோஷத்துக்கும் காரணமே தலைவர்தானப்பா... அவர், நல்லா இருக்காருப்பா... முன்னைவிட வேகமான பழைய தலைவரை அறிவாலயத்துல நீங்களெல்லாம் பார்க்கப் போறீங்க" என்று அவர் சொன்னதும் அங்கே எழுந்த ஆரவாரமும், விசில் சத்தமும் அடங்க வெகுநேரம் பிடித்தது. துரைமுருகனின் பேச்சை ஊடகங்களும் விடாமல் ஒளிபரப்ப, மருத்துவமனை முன் திரண்டிருந்த தி.மு.க.வினருக்கு கூடுதல் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

கடன் வாங்கச் சென்ற பெண் சடலமாக மீட்பு! - ஈரோட்டில் நடந்த பயங்கரம்!


நவீன் இளங்கோவன்


ரமேஷ் கந்தசாமி




ஈரோட்டை அடுத்த சென்னிமலை அருகே, பணத்துக்காக அக்கா உறவுமுறை கொண்ட பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் கழுத்தை நெரித்துக் கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த முகாசிபிடாரியூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம் - சிந்து தம்பதியினர். ஆறுமுகம் பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் எலெக்ட்ரீஷியனாகவும், சிந்து சென்னிமலை பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் அலுவலகப் பணியாளராகவும் வேலைபார்த்து வந்துள்ளனர். தம்பதியினர் இருவருமே வேலைக்குப் போனாலும், அவ்வப்போது கடன் வாங்கியே குடும்பத்தை நடத்திவந்திருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு, குடும்பச் செலவுக்காக ஆறுமுகம் தன்னுடைய உறவினரான தனசேகர் என்பவரிடம் 5 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டிருக்கிறார். ‘என்னிடம் இல்லை, வேறு யாரிடமாவது கேட்டு ஏற்பாடுசெய்து கொடுக்கிறேன்’ என தனசேகர் கூறியிருக்கிறார்.



இதற்கிடையே, கடந்த ஜூலை 28-ம் தேதி காலை, ஆறுமுகத்துக்கு போன் செய்த தனசேகர், ‘தோப்புபாளையத்தில் நண்பர் ஒருவர் கடனாக பணம் தருகிறேன் என்கிறார். நீ அல்லது உன்னுடைய மனைவி என யாராவது வந்தால் வாங்கித் தருகிறேன்’ என கரிசனம் காட்டுவது போல் பேசியிருக்கிறார். வேலையை விட்டுவிட்டு வரமுடியாது என்பதாலும், தனசேகர் உறவினர் என்பதால் அவர் மேல் உள்ள நம்பிக்கையாலும், ‘என்னுடைய மனைவியை அழைத்துச்சென்று வாங்கி வா’ என ஆறுமுகம் கூறியிருக்கிறார்.
 
ஆறுமுகத்தினுடைய மனைவி சிந்துவை அவர் வேலைசெய்யும் அலுவலகத்துக்குச் சென்று அழைத்துக்கொண்டு, ஊத்துக்குளி அருகேயுள்ள அரசண்ண மலை அடிவாரம் அருகே போய், ‘எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது. பணம் இல்லாமல் திண்டாடி வருகிறேன். உன்னுடைய தாலிச் செயினை கழற்றிக் கொடு’ என கேட்டிருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ந்துபோன சிந்து, ‘தாலிச் செயினை கழற்றிக் கொடுன்னு சொல்ற... நீ எல்லாம் ஒரு ஆம்பளையா?’ எனக் கத்தியிருக்கிறார். ஒருகட்டத்தில் சிந்துவின் மூச்சை ஒரேடியாக நிறுத்த நினைத்த தனசேகர், சேலையால் சிந்துவின் கழுத்தை நெறித்துக் கொலைசெய்திருக்கிறார். பிறகு, அருகே கிடந்த கற்களை எடுத்து இறந்துகிடந்த சிந்துவின் மீது குவியலாக அடுக்க முயன்றிருக்கிறார். அது சரிவராததால், பிணத்தை அப்படியே விட்டுவிட்டு, சிந்துவினுடைய ஐந்தரை பவுன் தாலிக்கொடியை மட்டும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியிருக்கிறார்.

அதன்பிறகு, தனசேகர் அவருடைய உறவினர் ஒருவரை அழைத்துச்சென்று, அந்த நகையை 60 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்து பணம் வாங்கியிருக்கிறார். அந்தப் பணத்தில், 5 ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்று கொலைசெய்த சிந்துவின் கணவர் ஆறுமுகத்திடம், ‘அக்காவை பஸ் பிடித்து வீட்டுக்கு அனுப்பிட்டேன். இந்தா 5 ஆயிரம் ரூபாய் பணம்’ என கொடுத்திருக்கிறார். பணத்தை வாங்கிய ஆறுமுகம், வேலையை முடிந்து வீட்டுக்குச் சென்றபோது, வீட்டில் அவருடைய மனைவி சிந்து இல்லை. மனைவியை பல இடங்களில் தேடி அலைந்தவருக்கு, ஒருகட்டத்தில் தனசேகர் மீது சந்தேகம் வந்திருக்கிறது. தனசேகரிடம் விசாரிக்கையில், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியிருக்கிறார். இதனால், சந்தேகமடைந்த ஆறுமுகம், தன்னுடைய மனைவியை காணவில்லை என்றும் தனசேகர் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகார் கொடுத்திருக்கிறார்.



போலீஸார் விசாரணையில்,‘நான்தான் சிந்துவை பணத்துக்காகக் கொலைசெய்தேன். எனக்கும் சிந்துவுக்கும் தவறான உறவு இருந்தது. அந்த உரிமையில் நான் கேட்டால், தாலிச்செயினை கழற்றித் தருவாள் என நினைத்தேன். ஆனால், அவள் கத்தி கூச்சல் போட்டதால், எனக்கு கோபம் தலைக்கேறி, கழுத்தை நெறித்துக் கதையை முடித்துவிட்டேன்’ என கேஷூவலாகக் கூறியிருக்கிறார். இதையடுத்து, தனசேகரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். பணத்துக்காக நன்கு தெரிந்த உறவினரையே கொலைசெய்த சம்பவம் சென்னிமலை பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.


Tamil Nadu has become a land of rapes: HC

Tamil nadu , the land of spirituality and divinity, has some how turned out to be a land of rapes, the Madras High Court has observed.

Published: 31st July 2018 03:53 AM | 



Madras High Court (File Photo | PTI)

By Express News Service

CHENNAI : Tamil Nadu , the land of spirituality and divinity, has some how turned out to be a land of rapes, the Madras High Court has observed.Justice N Kirubakaran made the observation, while hearing a case relating to the rape of a 60-year-old mentally-retarded woman on November 10, 2016. While he was sitting in the Madurai Bench, the case had been posted before him.“Even toddlers or children are not spared by these brute beasts. Something basically is wrong with the development of the society or the psychology of men,” the judge added.

Originally, when the matter came up before him on December 15 last year in the Madurai Bench, the judge raised a set of questions to be answered by the Union Home Affairs and the Women Welfare and Child Development ministries in New Delhi, all relating to the cause for increase in sexual crimes against women and children in India.Now, the judge warned that if the response was not filed by the next hearing date, the respective Secretaries of the relevant departments shall appear before the court.
Corporation park rented out to birthday party?

Members of the AGS colony residents association, who went to inquire, said they found that the permission for the party was granted by the local Corporation Assistant Engineer.

Published: 30th July 2018 04:00 AM | 



Boys who came to the AGS colony playground to play had nowhere to go | Express

By Express News Service

CHENNAI:Residents of AGS colony who went to the Chennai Corporation ground in the locality to relax on Sunday were taken by surprise after they found arrangements in the ground for a private birthday party, complete with rows of chairs, a shamiana and a banner.

Members of the AGS colony residents association, who went to inquire, said they found that the permission for the party was granted by the local Corporation AE (Assistant Engineer), who allegedly received ` 2,000 from the group in order to ‘permit’ the celebrations.

“The group initially attempted to use the room for indoor games in the playground for the party. After we protested, they said they will shift the party outside the ground since they don’t have anywhere else to go and they had already paid the money,” said Sam Ponraj, secretary of Kottivakkam AGS colony and neighbourhood residents association.

When contacted, R Siva, father of the child whose birthday party was to be conducted at the ground, said, “My brother also works in the corporation. So, we thought we will ask the AE and conduct the party in the ground itself.” He was not given a receipt for the payment, he said.

The incident came to light after David Manohar, member of Arappor Iyakkam, a Chennai-based NGO, posted the details on social media. When contacted, AE Dhandapani denied the allegations. “I have not rented the playground to anyone. I have no right to rent out a Corporation playground,” he said.

NEWS TODAY 2.5.2024