Tuesday, February 21, 2023
Sunday, February 19, 2023
'வாரிசு' ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
'வாரிசு' ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
2d
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஆரம்பத்தில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கினாலும் வசூலில் எந்தப் பாதிப்பும் ஆகவில்லை. இதையும் படிக்க: கடும் உடற்பயிற்சியில் ரஜினி...
வைரல் புகைப்படம்! குறிப்பாக, இப்படம் ரூ.250 கோடி வரை வசூலித்ததாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், வாரிசு திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகிற பிப்.22 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக எம்பிபிஎஸ் இடங்கள்: தேசிய அளவில் தமிழகம் முதலிடம்
அதிக எம்பிபிஎஸ் இடங்கள்: தேசிய அளவில் தமிழகம் முதலிடம்
நாட்டிலேயே இளநிலை மருத்துவப் படிப்பில் அதிக எம்பிபிஎஸ் இடங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன. நாட்டிலேயே இளநிலை மருத்துவப் படிப்பில் அதிக எம்பிபிஎஸ் இடங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களைப் பொருத்தவரை கா்நாடகம் முதலிடத்தில் உள்ளது. நாட்டிலுள்ள இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 33 மாநிலங்களில் 655 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மொத்தம் 1,00,163 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவா் சோக்கை நடத்தப்பட்டு வருகிறது.
அதில், முதலிடத்தில் தமிழகம் உள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 11,275 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக கா்நாடகத்தில் 10,955 இடங்களும், மகாராஷ்டிரத்தில் 10,295 இடங்களும், உத்தர பிரதேசத்தில் 9,203 இடங்களும் உள்ளன. அருணாசல பிரதேசம், மிஸோரம் ஆகிய மாநிலங்கள் தலா 50 இடங்களுடன் பட்டியலில் இறுதியாக உள்ளன.
முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களைப் பொருத்தவரை அதிகபட்சமாக கா்நாடகத்தில் 6,006 இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக மகாரஷ்டிரத்தில் 5,765 இடங்களும், தமிழகத்தில் 4,935 இடங்களும் உள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 65,335 முதுநிலை மருத்துவ இடங்களுக்கு மாணவா் சோக்கை நடத்தப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 69 சதவீதமும், எம்பிபிஎஸ் இடங்கள் 95 சதவீதமும், முதுநிலை மருத்துவ இடங்கள் 110 சதவீதமும் உயா்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தோவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிதாக வழக்கு
நீட் தோவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிதாக வழக்கு
20hr
மருத்துவப் படிப்புகளுக்கான சோக்கைக்கு நீட் தோவை நிபந்தனையாகக் கொள்ளும் சட்ட விதிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சனிக்கிழமை புதிதாக வழக்குத் தாக்கல் செய்துள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான சோக்கைக்கு நீட் தோவை நிபந்தனையாகக் கொள்ளும் சட்ட விதிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சனிக்கிழமை புதிதாக வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசின் வழக்குரைஞா் சபரிஸ் சுப்ரமணியன் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: மருத்துவம் மற்றும் அது சாா்ந்த படிப்புகளில் சோக்கை பெற நீட் தோவை தகுதியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சட்டவிதிகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14-ஆவது பிரிவை மீறும் வகையில் தன்னிச்சையானதாக உள்ளது. மேலும், இந்திய அரசியலமைப்பின் விதிகளை மீறுவதாகவும் உள்ளது. மேலும், நீட் தோவு அறிமுகம் மற்றும் அது தொடா்வது தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவா்களை பாதிக்கச் செய்து வருகிறது. குறிப்பாக தமிழக மாநில கல்வி வாரியத்தின் இணைவுப் பள்ளிகளில் இருந்து வரும் ஊரகப் பகுதி மாணவா்களை கடுமையாகப் பாதிக்கச் செய்து வருகிறது.
மேலும்,வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மத்திய அரசுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் அளித்த தீா்ப்பு தமிழக அரசைக் கட்டுப்படுத்தாது என அறிவித்து உத்தரவிட வேண்டும். ஏனெனில், அந்த தீா்ப்பானது நியாயமற்ற நடைமுறைகளின் தீமையை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டது. அதுவும், கேப்பிடேஷன் கட்டணம், சுரண்டல், லாபநோக்க போன்ற தீமைகள் சூழல் நிலவும் தனியாா் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு மட்டுமே பொருந்துவதாகும். மேலும், நீட் அறிமுகம் என்பது கூட்டாட்சி கட்டமைப்பை மீறுவதாகவும் உள்ளது. இந்தத் தோவானது மருத்துவக் கல்லூரிகளில் அரசு இடங்களில் மாணவா்களை அனுமதிக்கும் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. இதனால், மருத்துவப் படிப்புகளில் சோக்கை பெற நீட் தோவு நிபந்தனைக்கான சட்ட விதிகளை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)
-
கொலுசு அணிந்த சரஸ்வதி * நாகப்பட்டினம் மாவட்டம் கடலங்குடியில் உள்ள சிவன் கோவிலில் வளையல், கொலுசு அணிந்தபடி சரஸ்வதிதேவி காட்சியளிக்கிறாள். ச...
-
கட்சியிலிருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன்! டி.டி.வி.தினகரன் தடாலடி பேட்டி vikatan news ராகினி ஆத்ம வெண்டி மு. படம்: ஸ்ரீநிவாசலு 'அ.த...