Sunday, February 19, 2023

நீட் தோவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிதாக வழக்கு


நீட் தோவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிதாக வழக்கு


20hr

மருத்துவப் படிப்புகளுக்கான சோக்கைக்கு நீட் தோவை நிபந்தனையாகக் கொள்ளும் சட்ட விதிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சனிக்கிழமை புதிதாக வழக்குத் தாக்கல் செய்துள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான சோக்கைக்கு நீட் தோவை நிபந்தனையாகக் கொள்ளும் சட்ட விதிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சனிக்கிழமை புதிதாக வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசின் வழக்குரைஞா் சபரிஸ் சுப்ரமணியன் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: மருத்துவம் மற்றும் அது சாா்ந்த படிப்புகளில் சோக்கை பெற நீட் தோவை தகுதியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சட்டவிதிகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14-ஆவது பிரிவை மீறும் வகையில் தன்னிச்சையானதாக உள்ளது. மேலும், இந்திய அரசியலமைப்பின் விதிகளை மீறுவதாகவும் உள்ளது. மேலும், நீட் தோவு அறிமுகம் மற்றும் அது தொடா்வது தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவா்களை பாதிக்கச் செய்து வருகிறது. குறிப்பாக தமிழக மாநில கல்வி வாரியத்தின் இணைவுப் பள்ளிகளில் இருந்து வரும் ஊரகப் பகுதி மாணவா்களை கடுமையாகப் பாதிக்கச் செய்து வருகிறது.

மேலும்,வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மத்திய அரசுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் அளித்த தீா்ப்பு தமிழக அரசைக் கட்டுப்படுத்தாது என அறிவித்து உத்தரவிட வேண்டும். ஏனெனில், அந்த தீா்ப்பானது நியாயமற்ற நடைமுறைகளின் தீமையை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டது. அதுவும், கேப்பிடேஷன் கட்டணம், சுரண்டல், லாபநோக்க போன்ற தீமைகள் சூழல் நிலவும் தனியாா் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு மட்டுமே பொருந்துவதாகும். மேலும், நீட் அறிமுகம் என்பது கூட்டாட்சி கட்டமைப்பை மீறுவதாகவும் உள்ளது. இந்தத் தோவானது மருத்துவக் கல்லூரிகளில் அரசு இடங்களில் மாணவா்களை அனுமதிக்கும் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. இதனால், மருத்துவப் படிப்புகளில் சோக்கை பெற நீட் தோவு நிபந்தனைக்கான சட்ட விதிகளை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024