ஒரு கோடாரி வலுவானது, ஆனால் முடியை வெட்டாது.
ஒரு ப்ளேடு கூர்மையானது, ஆனால் அது மரத்தை வெட்டாது.
எல்லோருக்கும் ஒரு திறமை இருக்கும், ஆனால் ஒரே திறமை இருக்காது.
பிறருடன் ஒப்பிட்டு உங்கள் திறமையைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்.
உங்களுக்கென்று இறைவன் கொடுத்துள்ள தனித்திறமையை முதலில் வெளிக் கொணருங்கள். நோக்கத்தில் தெளிவும் மனதில் அமைதியும் கொண்டு செயல்படுங்கள். நீங்கள் விரும்பும் இலக்கை அடைவீர்கள்.
ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும் ஏதோ ஒரு காலகட்டத்தில் திருப்புமுனை அமைகிறது.....
இந்தத் திருப்புமுனையை தன்னோடு வாழ்நாளில் சரியாக பயன்படுத்துபவர்கள் வாழ்க்கையில் பல்வேறு உயர்ந்த நிலைக்குச் சென்றுள்ளார்கள்......
வலது கை மற்றும் இடது கை உதவியை விட நம்பிக்கை ஒரு போதும் வீணாவது இல்லை....
நம்பிக்கையுடன் செயல்படுவோம்..
வாழ்க்கையில நம்மை விடச் சிறப்பா பலர் வாழலாம்,
ஆனால்! நம்ம வாழ்க்கையை நம்மை விட சிறப்பா யாராலையும் வாழ்ந்து விட முடியாது!
வாழ்வினிது சிந்தித்து செயலாற்றுங்கள்.
வாழ்க வளமுடன்.