ஒரு துன்பத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம்,அந்தத் துன்பத்தினை வேறு யாருக்கும் கொடுக்காமல் இருப்பதற்கே..!!
தகுதியை மீறி ஆசைப்படக் கூடாது என்பது உண்மை தான்... ஆனால், என் தகுதி என்ன என்பதை மற்றவர்கள் தீர்மானிக்கக் கூடாது..!!
வசதியானவனை விட... உழைச்சு அசதியானவன் தான் நிம்மதியா உறங்குறான்..!!
சிதறிச் சென்ற சில வார்த்தைகளால்... கோர்க்க முடியாமல் சிதறிக் கிடக்கிறது பலரது வாழ்க்கை..!!
எந்த சாதனையும் புரிவதற்கும் வயது ஒரு தடையே இல்லை... வயது என்பது மனதைப் பொறுத்தது...
உங்களின் வழக்கமான கடுகளவு தவறும், கடலளவுக்கு விமர்சிக்கப்படுமாயின், தயாராகிக் கொள்ளுங்கள் "விட்டு விடுங்கள்" என்று சொல்வதற்கு முன் விலகிக் கொள்வதற்கு..
விக்கல் வந்தால் தண்ணீர் எவ்வளவு முக்கியமோ... குழம்பிய மனதிற்கு அமைதியும் அவ்வளவு முக்கியம்..!!
சூழ்நிலை மாறும் போது.. சிலரது வாழ்க்கை மட்டுமல்ல வார்த்தைகளும் மாறுகிறது..!!
பெண்களுக்குத் திமிரும் கோபமும் கூட.. ஒருவகை பாதுகாப்பு தான் சில நேரங்களில்..!!
எவ்வளவு பிடித்தவராக இருந்தாலும்.. மனம் வெறுக்கத் தான் செய்கிறது… நம் அன்பை அலட்சியம் செய்யும் போது..!!
புரிதல் இருக்கும் இடத்தில் 'ஆணவத்திற்கு' வேலையும் இல்லை.. அடுத்தவர் 'ஆலோசனையும்' தேவையில்லை..
'நீயா நானா' என்ற போட்டியுமில்லை.. 'பிரிவிற்கு' இடமும் இல்லை..
புரிதலில் தான் 'அன்பு' அழகாய் மலர்கிறது..!!
No comments:
Post a Comment