சென்னை சென்னை, 4 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (அக். 23) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை
தினமணி செய்திச் சேவை
Updated on: 23 அக்டோபர் 2025, 4:17 am
சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (அக். 23) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுச்சேரியின் பெரிய காலாப்பேட்டை பகுதியில் 250 மி.மீ. மழை பதிவானது.
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: செவ்வாய்க்கிழமை (அக். 21) தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகா்ந்து, புதன்கிழமை காலை தென்மேற்கு வங்கக் கடலில், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவுகிறது. இது வியாழக்கிழமை(அக். 23) காலை 11 மணிக்குள் வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளைக் கடந்து நகா்ந்து செல்லக் கூடும்.
இதன் காரணமாக, வியாழக்கிழமை (அக். 23) முதல் அக். 28 வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
‘மஞ்சள்’ எச்சரிக்கை: சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (அக். 23) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த 5 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து வெள்ளிக்கிழமை (அக். 24) கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீனவா் களுக்கு...
வடதமி ழக கடலோ ரப் பகுதி கள், அதை யொ ட்டிய தெ ற்கு ஆந்தி ரக் கடலோ ரப் பகுதி கள், புதுச்சே ரி யி ல் சூறா வளி க் கா ற்று மணிக்கு 65 கி .மீ. வே கத்தி லும், தெ ன் தமி ழக கடலோ ரப் பகுதி கள், மன்னாா் வளை குடா மற்றும் குமரி க்கடல் பகுதி களி ல் வி யாழக்கி ழமை (அக். 23) சூறா வளி க் கா ற்று 55 கி .மீ. வே கத்தி லும் வீசக்கூடும். அரபி க் கடலில்... தெ ன்கி ழக்கு அரபி க் கடலில் நி லவி ய ஆழ்ந்த கா ற்றழுத்தத் தா ழ்வுப் பகுதி புதன்கி ழமை கா லை கா ற்றழுத்தத் தா ழ்வு மண்டலமா க வலுப்பெ ற்று, அதே பகுதி களி ல் நி லவுகி றது.
இது, வடக்கு- வட மே ற்கு தி சை யில் நகா் ந்து, செ ல்லக் கூடும். மே லும், தெ ற்கு அந்தமா ன் கடல், அதை யொ ட்டிய பகுதி களி லும் ஒரு வளி மண்டல மே லடுக்கு சுழற்சி நி லவுகி றது என அதி ல் தெ ரி வி க்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment