தமிழ்நாடு
கனமழை எதிரொலி: 15 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
Updated : நவ 11, 2021 06:32 | Added : நவ 11, 2021 06:29
சென்னை: தமிழகத்தில் கனமழை எதிரொலி காரணமாக சென்னை, சேலம், கடலூர் உள்ளிட்ட 14 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(நவ.,11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதி கனமழை காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நீர்நிலைகள், அணைகள் நிரம்பி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று கரையை கடக்கும் என்றும், அதுவரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், அதி கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக பல மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
1. சென்னை
2. காஞ்சிபுரம்
3. திருவள்ளூர்
4. செங்கல்பட்டு
5. கடலுார்
6. நாகப்பட்டினம்
7. தஞ்சாவூர்
8. திருவாரூர்
9. மயிலாடுதுறை
10. ராமநாதபுரம்
11. வேலூர்
12 ராணிப்பேட்டை
13. விழுப்புரம்
14. சேலம்
15. திருவாரூர்
பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை:
15. கோவை
No comments:
Post a Comment