Tuesday, November 30, 2021

சென்னை டூ- சிங்கப்பூர்; மீண்டும் விமான சேவை


சென்னை டூ- சிங்கப்பூர்; மீண்டும் விமான சேவை

Added : நவ 29, 2021 23:27

சென்னை : சென்னை - சிங்கப்பூர் இடையேயான விமான சேவை, ௨௦ மாதங்களுக்கு பின் மீண்டும் துவங்கியுள்ளது.

கொரோனா தொற்று பரவ துவங்கியதும், 2020 மார்ச் 25ல், சர்வதேச நாடுகளுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பின், அதே ஆண்டு மே 9 முதல், சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும், 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், மீட்பு விமானங்களும், சிறப்பு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், டிசம்பர் 15 முதல், அனைத்து சர்வதேச விமான சேவைகளும் இயங்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அத்துடன், சிங்கப்பூர் - இந்தியா இடையேயான விமான சேவைக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு நேற்று முதல் தினசரி விமான சேவையை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனமும் துவக்கி உள்ளன.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், இரவு 10:00 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து சென்னை விமான நிலையம் வந்து சேரும். மீண்டும் இரவு 11:15 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூர் செல்கிறது.இதேபோல, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து, இரவு 9:45க்கு சிங்கப்பூருக்கு புறப்படுகிறது.

தற்போது, 20 மாதங்களுக்கு பின், சென்னை -- சிங்கப்பூர் - இடையே, நேரடி பயணியர் விமான சேவை மீண்டும் துவங்கி உள்ளது.இந்த விமானங்களில் பயணம் செய்யும் பயணியருக்கு, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் மற்றும் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம்.

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...