Thursday, August 16, 2018

Train News

விருதுநகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தம்: அந்தியோதயா எக்ஸ்பிரசில் வந்த பயணிகள் தவிப்பு

தாம்பரம்–நெல்லை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று விருதுநகர் ரெயில்நிலையத்தோடு நிறுத்தப்பட்டதால் நெல்லை வரை பயணச்சீட்டு பெற்ற பயணிகள் பரிதவிப்புக்குள்ளாயினர்.

பதிவு: ஆகஸ்ட் 16,  2018 04:15 AM

விருதுநகர்,

தாம்பரம்–நெல்லை வரை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. நள்ளிரவு தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரெயில் நேற்று மதியம் விருதுநகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. கோவில்பட்டி– மணியாச்சி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் விருதுநகர்– நெல்லை இடையே இந்த ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மாலை விருதுநகரில் இருந்து தாம்பரத்திற்கு இந்த ரெயில் புறப்பட்டுச் செல்லும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் அந்த ரெயிலில் பலருக்கும் நெல்லைவரை டிக்கெட் கொடுக்கப்பட்டிருந்தது. அதனால் பயணிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி ஏற்கனவே ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும் பயணிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது பயணிகள் விருதுநகர்–நெல்லை இடையே இந்த ரெயில் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் ஏற்கனவே முடிவு செய்திருந்தால் நேற்று தாம்பரத்திலிருந்து நெல்லைவரைக்கும் எங்களுக்கு பயணச்சீட்டு வழங்கியது ஏன் என்று கேள்வி எழுப்பினர். குறைந்தபட்சம் இந்த ரெயில் மதுரை வந்த உடனாவது மதுரை ரெயில் நிலையத்தில் இதுபற்றிய அறிவிப்பு செய்யப்பட்டிருந்தால் நாங்கள் மாற்று ஏற்பாடு ஏதாவது செய்து நெல்லை சென்றிருப்போம் என்று தெரிவித்தனர்.

பல பயணிகள் வேறு ரெயில் மூலமாகவோ பஸ் மூலமாகவோ நெல்லை செல்வதற்கு தங்களிடம் பணம் இல்லை என பரிதவிப்புடன் கூறினர். விருதுநகர்– நெல்லை இடையேயான கட்டணத்தை ரெயில்வே நிர்வாகம் திருப்பி தரவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்திய போது அதற்கு உடனடி வாய்ப்பில்லை என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரெயில்வே நிர்வாகம் குறிப்பிட்ட ரெயில்நிலையங்களுக்கு இடையே ரெயில் போக்குவரத்தை ரத்து செய்திருந்தால் அந்த ரெயில் நிலையங்களுக்கு இடையேயான பகுதிகளுக்கு பயணச்சீட்டு வழங்கியிருக்கக்கூடாது. பயணச்சீட்டு வழங்கும் இடத்திலேயே இது பற்றி தெரிவித்திருக்க வேண்டும். நிர்வாகத்தின் குறைபாட்டால் பயணிகளை பரிதவிக்க விடுவது ஏற்புடையதல்ல. இனியாவது இம்மாதிரியான குழப்பங்கள் ஏற்படுவதை ரெயில்வே நிர்வாகம் தவிர்க்க வேண்டும்.

Rain News

நீலகிரி, கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 16,  2018 05:30 AM

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா கடற்கரை பகுதியில் புவனேஸ்வருக்கு தென்மேற்கே சுமார் 30 கி.மீ. தொலைவில் நிலைகொண்டு உள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும்.

இந்தநிலையில் ஈரப்பதத்துடன் கூடிய மேற்கு திசைக்காற்று, இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை நோக்கி தமிழக பகுதிகள் வழியாக செல்ல உள்ளது.

எனவே அடுத்து வரும் 24 மணி நேரத்தில் இன்று மலைப்பகுதிகள் அடங்கிய நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட கோவை மாவட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும் தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு.

தமிழகத்தின் இதர பகுதிகளிலும் புதுச்சேரியிலும் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் இடைவெளி விட்டு சில முறை மழை பெய்யக்கூடும்.

வடக்கு ஆந்திரா கடற்கரை, வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

செங்கோட்டையில் 27 செ.மீ. மழை

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

செங்கோட்டை 27 செ.மீ., சின்னக்கல்லார் 21 செ.மீ., பேச்சிப்பாறை 20 செ.மீ., பாபநாசம் 19 செ.மீ., வால்பாறை 16 செ.மீ., தேவலா, பெரியாறு தலா 13 செ.மீ., நடுவட்டம் 11 செ.மீ., குழித்துறை, அண்ணா பல்கலைக்கழகம் தலா 9 செ.மீ., கூடலூர் பஜார், தரமணி தலா 8 செ.மீ., பூதப்பாண்டி, நாகர்கோவில், டி.ஜி.பி.அலுவலகம்., பூந்தமல்லி, சென்னை விமானநிலையம், தாம்பரம், மைலாடி தலா 7 செ.மீ., அம்பாசமுத்திரம், சென்னை நுங்கம்பாக்கம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் தலா 6 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை பதிவாகி உள்ளது.

Income tax news

அரசு ஊழியர்கள் கவனத்திற்கு ! வருமான வரி பற்றிய முக்கிய செய்தி

நிதி ஆண்டிற்கு Quarter 1,2,3&4 என வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் அதை தாங்கள் தான் தாக்கல் செய்ய வேண்டும் என அலுவலர் (Drawing Officer) கூறியிருப்பார்.........

Income Tax Act -1961 ல் Section 203 ன் படி சம்பளம் பெற்று தரும் அலுவலர் தான் நாம் வாங்கும் ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்து மத்திய அரசு கணக்கில் செலுத்த வேண்டும்.

சம்பளம் வழங்கும் அலுவலர் Section 203 ன் படி Quarter 1,2,3&4 ல் நமது வங்கி கணக்கில் வழங்கப்பட்ட  ஊதியம் (credited pay) மற்றும் ஊதியத்தில் பிடித்தம் செய்த வருமான வரி தொகை (Amount of Tax Deducted) , அரசு

ஊழியரின் வருமான வரி தொகையை மத்திய அரசின் கணக்கில் BIN (Book Identification Number) அல்லது CIN (Challan Identification Number) வழியாக செலுத்தியதை Rule 31(1)(a) ன் Form -16 Part A உறுதிமொழி படிவம் , Part B நிதி ஆண்டில் வழங்கிய ஊதியம் மற்றும் வருமான வரி பிடித்தம் செய்த தொகை Annexure நமக்கு வழங்க வேண்டும். இதனுடன் Income Tax Return Form அதாவது ITR-V தர வேண்டும்....
கல்விச்சுடர்
நாம் எவ்வித பணமும் யாரிடமும் கொடுக்க தேவையில்லை...

பணம் கொடுக்காமல் இருந்தால் நமக்கு அலுவலர் கட்டாயம் Income Tax Return Form (ITR-V) வழங்கிவிடுவார்.....

பின் சதுரங்க வேட்டை படம் மாதிரி நம் மனதை வசியப்படுத்தும் வார்த்தையாக அரசு ஊழியர்களே தாங்கள் ஏதேனும் வங்கியில் Loan பெற சென்றால் Form-16 கட்டாயம் தேவைப்படும். ஆகையால், Form-16 தேவைப்படுபவர்கள் ரூ.200 கொடுத்து வாங்கி கொள்ளுங்கள் என கூறும் நிலை தொடரும்.....

வருமான வரி தாக்கல் செய்யும் போதே Automatically generate
Form -16 ...... .                             
வருமான வரி பிடித்தம் செய்வது சம்பளம் வழங்கும் அலுவலரின் கடமை. Form-16 வழங்குவதும் Drawing Offer கடமை.

தமிழ்நாடு  நிதி விதி தொகுப்பு 86(a) -ன்படி வருமான வரி பிடித்தம் IT சம்மந்தப்பட்ட அலுவலர் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலரே பொறுப்பாளர்.

தங்களது ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்து Form-16 ஐ சம்பளம் வழங்கும் அலுவலர் தர மறுத்தால் புகார் அளிக்கும் முகவரி

The Commissioner,
Income Tax (TDS) ,
7th Floor , New Block,
Aayakar Bhawan,
121, M.G.Road ,
Chennai-34.

SSTA 

Wednesday, August 15, 2018

காற்றில் கரையாத நினைவுகள்

காற்றில் கரையாத நினைவுகள் 24: எது பொற்காலம்!

வெ.இறையன்பு

Published :  14 Aug 2018 09:11 IST

மனம் பழையவற்றை வசந்தகாலமாக எண்ணிப் பார்க்கும் விசித்திரம் கொண்டது. சிலநேரங்களில் விடு பட்டவைகூட மகிழ்ச்சியானதாக தோன் றும். விடுதலையானவன் சிறைச்சாலையைக் கடக்கும்போது சோகப்படுவதுபோன்ற ஒருவித மயக்கம் அது. சமூக அளவில் இந்த 50 ஆண்டுகளில் எத்தனையோ விரும்பத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருக் கின்றன. கல்லூரியில் கிராம முகாம் சென்றபோது, அங்கிருந்த தேநீர் கடைகளில் இரட்டைக் குவளைகள் இருப்பதைப் பார்த்து வேதனைப் பட்டோம். ஒருவரை ‘ஒதுக்கிவைக்கப்பட்டவர்’ எனக் குத்திக் காட்டு வதற்கு அதனினும் வேறு முத்திரை இல்லை. இன்று எல்லா இடங் களிலும் காகிதக் குவளைகள் அந்த அவலத்தை அறவே நீக்கி விட்டன. மனிதர்கள் செய்ய முடியாததை தொழில்நுட்பம் சாதித்துவிட்டது.

இந்திய ஆட்சிப் பணி என்பது கனவாக இருந்த காலம் மாறி எண்ணற்ற சிற்றூர்களில் இருந்து தமிழில் படித்தவர்கள் எழுதித் தேர்ச்சி பெற்று இந்தியாவெங்கும் உயர்ந்த பணிகளில் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறோம். மாதிரித் தாள்கள் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ள சென்னையில் ஒரு வாரம் தங்கியிருந்து நடையாக நடந்து அவற்றைப் பெற்ற அனுபவம் எனக்கு உண்டு.

இன்று விரலைச் சொடுக்கினால் விவரங்கள் குவியல் குவியலாக வந்துவிழும் இணைய வசதி. அரிய புத்தகங்களை எளிதில் பெறும் வசதி. உலகின் எந்த மூலையில் கிடைக்கும் புத்தகத்தையும் கணினியில் பதிவிறக்கம் செய்து விடலாம். அறிவு ஒரு சாராருக்கே சொந்தம் என்பதை அடித்து ஒடித்த விஞ்ஞான முன்னேற்றம். எந்த நாட்டுக்கும் ஒரு விநாடியில் மின்னஞ்சல் அனுப்ப முடியும் என்ற அதிவேக தகவல் பரிமாற்ற வசதி.

நிறைய குழந்தைகள் பெரிய வயிற்றுடன். வெளிறிய முகத்துடன். குழி விழுந்த கண்களுடன் போஷாக்குக் குறைவுடன் இருந்த நிலை மாறி இன்று ‘ஊளைச் சதையை குறைப்பது எப்படி?’ என்கிற கவலையில் பெற்றோர். அன்று கோழிமுட்டை என்பது ஒரு சில கடைகளில் இரும்புக் கூடையில் உறியில் தொங்கும் அபூர்வ வஸ்து. பால் காலையில் மட்டுமே கிடைக்கும் அரிய பண்டமாக இருந்த நிலை மாறி, 24 மணி நேரமும் பாக்கெட்டில் வாங்கி வரும் பொருள்.

வதவதவென பிள்ளைகளைப் பெறுவது வாடிக்கையாக இருந்தது. பெண்கள் உடல்நலம் குறைந்து, ஆண்கள் கவலைகள் நிறைந்து அப்போதெல்லாம் கதைகளில் ‘40 வயதுப் பெரியவர்’ என்று எழுதும் வழக்கம் இருந்தது. இன்று 60 வயது நிறைந்தவர்களும் 20 வயதுபோல இருக்க முனைகிறார்கள். வயது என்கிற வரையறை இன்று எடுபடுவதில்லை.

எங்கு பார்த்தாலும் ஓலைக் குடிசைகள் இருந்த சிற்றூர்கள் இன்று மெல்ல மெல்ல மாறி வருகின்றன. அப்போது ஓட்டு வீடு அரிது. மாடி வீட்டை கல்வீடு என்று அழைப்பார்கள். இன்று பல வீடுகள் மச்சு வீடுகளாக மாறி வருகின்றன. அரசு கட்டித் தரும் வீடுகளும், மானியத்தால் உருவாக்கப்படும் இல்லங்களும் நிமிர்ந்து நிற்கின்றன. அன்று வசதியுள்ளவர் உபயோகித்த ஆடைகளை வாங்கி அணிந்து கொள்ள சிலர் ஆயத்தமாக இருந்தார்கள். இன்று பழைய துணிகளை யாரும் பெற விருப்பமாக இல்லை.

இன்றைய தலைமுறை சென்ற தலைமுறையைவிட உயரமாகிக்கொண்டிருக்கிறது. ஊட்டச்சத்துக்கள், புரதம் போன்றவை தாராளமாகக் கிடைப்பதும் இதற்குக் காரணம். தெளிவான முகமும், தோற்றப் பொலிவும் அனைவருக்கும் சாத்தியமாகும் நிலை உருவாகிக்கொண்டு வருகிறது. பலரது முகத்தில் படித்த களையும், கற்றறிந்த தேஜசும் காணப்படுகின்றன. கல்லூரிக் கல்வி ஒரு சில ருக்கு மட்டுமே என்பது மாறி மேனிலைப் பள்ளி களாக மூலைமுடுக்குகளிலெல்லாம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. பொறியியல் படிப்பு சிற்றூர்களிலும் கிடைக்கிறது. பள்ளிப் பக்கமே எட்டிப் பார்க்காத குடும்பங்களில் மருத்துவமும், பொறியியலும் சாத்தியமாகியிருக்கின்றன.

வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. வாங்கும் திறன் அதிகரித்திருக்கிறது. பஞ்சம், பட்டினி ஆகியவற்றின் தாக்கம் குறைந்திருக்கிறது. சோப்புகூட ஆடம்பரப் பொருள் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட காலம் ஒன்று உண்டு. இன்று சின்னச்சின்ன ஊர்களிலும் உடல் தூய்மையை உறுதிசெய்யும் பொருட்கள் சின்னப் பொட்டலங்களாக கண் சிமிட்டி மின்னுகின்றன. ஊருக்கு ஓர் ஆங்கிலப் பள்ளி என்றிருந்த நிலை மாறி திரும்பிய பக்கமெல்லாம் ‘ஆங்கிலவழி படிப்பு’ என்று அந்நிய மொழியில் படிப்பது இப்போது சர்வசகஜமாகிவிட்டது. ஆனால், தமிழும் சரியாகப் படிக்கத் தெரியாமல் ஆங்கிலமும் முறையாக பேசத் தெரியாமல் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு காலாய்த் தடுமாறும் தலைமுறை ஒன்று உருவாகியிருக்கிறது.

இன்று சமூக விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. திரைத் துறையினரும் நடிப்பு மட்டுமே வாழ்வு என நினைக்காமல் மக்களின் நாடித் துடிப்புகளையும் அறிந்து களத்தில் இறங்கிப் போராடுகிறார்கள்.

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி எதையோ தொலைத்த உணர்வு எங்கள் தலைமுறையில் அனைவருக்கும் இருக்கிறது. அந்த இனம்புரியாத சோகத்தை எப்படி ஆற்றுவது என்று புரியாமல் அடிக்கடி பழைய நினைவுகளில் மூழ்கி மகிழ்ச்சியாக இருந்த காலங்களை மனத்தால் வருடிப் பார்க்கின் றோம்.

பிள்ளைகளுக்கு எல்லாம் வாங்கித் தந்தும் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போன்று தோன்ற வில்லை. ஆனால் அன்று எதுவுமே யாரும் வாங்கித் தராமலேயே நாங்கள் மகிழ்ச்சியாக இருந்த உணர்வு. இன்று வீட்டில் பொருட்களெல்லாம் குவிந்தும் ஒருவித வெறுமை. உறுப்பினர்கள் நிறைந்தும் ஒருவிதத் தனிமை.

மிகுந்த பாதுகாப்பான வாழ்க்கைக்கு நடுவில் ஏதோ பயம் ஊஞ்சலாடுகிறது. தூங்கி எழும்போது பொழுதை ரசித்துக்கொண்டு எழுபவர்கள் குறைவு. எதுவும் இல்லாதபோது இருந்த சுதந்தரம் எல்லாம் இருக்கும்போது பறிபோனதைப் போன்ற பரிதாபம்.

நம் உறவுகளையும், உரிமைகளையும் யாரோ வழிப்பறி செய்ததைப்போன்ற எண் ணம். ஏதோ ஒன்று குறைகிற மாதிரியே எப்போதும் இருக்கிறது. சுவர்கள் பலமாக இருந்தாலும் இதயம் பலவீனமாக இருக்கிறது.

நாகையில் கல்லார் தர்காவில் கந்தூரி விழாவின்போது அங்கு இருக்கும் இஸ்லாமிய நண்பர்கள் அக்கரைப் பேட்டை நைனியப்ப நாட்டாரை `அப்பா’ என்று அழைப்பதைப் பார்த்து பூரித்துப் போயிருக்கிறேன். சின்ன வயதில் எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் சுபான் பாயும், விக்டர் குடும்பமும் அண்ணன், தம்பிகளாக உறவு வைத்து அழைத்துப் பழகியது நினைவுக்கு வந்தது. இப்போது அக்கம்பக்கங்களில் ஏனோ கண்ணுக்குத் தெரியாத இமயத் தடுப்புகள் பிரி வினைகளின் பெயரால் எல்லா இடங் களிலும் விரவிக் கிடப்பதைப் போன்ற வேதனை.

புதிய புதிய சந்திப்புகளில் பழைய உறவுகளையும், நட்புகளையும் தொலைத்துக்கொண்டே இருக்கிறோம். எல்லாம் மேம்போக்காக இருக்கும் பழக்கத்தில் மையத்தைத் தவற விடுகி றோம்.

இழந்தவற்றை நினைவுபடுத்த எப்போதும் இல்லாத அளவு எல்லா இடங்களிலும் பழைய மாணவர்கள் சந்திப்பு. அங்கு வழியிலேயே இடறி விழுந்தவர்கள் நினைவில் இதயம் வலிக்கிறது.

ஓய்வுக்குப் பிறகு சகோதர சகோதரிகள் ஒரே இடத்தில் ஒன்றாய்த் தங்க முடியாதா! செலவைப் பிரித்து உணவைப் பகிர்ந்து உயிரை நீட்டிக்க முடியாதா! ஒரே சமையலறையில் உள்ளங்கள் ஒன்றாக மாலையில் பழங்கதைகள் பேசி களித்திருக்க இயலாதா! அதிக நாட்கள் முடியாவிட்டாலும் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு வாரமாவது ஒன்றாய்க் கூடி மகிழலாமே!

அப்போது அந்தப் பொற்காலம் திரும்பலாம்.

அன்பின் ஆதிக்கம் அனைத்து சுயநலங்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு எழும்பி நிற்கும் காலம்தானே பொற்காலமாக இருக்க முடியும்!

- நிறைந்தது -

Ola at Chennai Airport

Only Ola cabs at Chennai airport

STAFF REPORTER

CHENNAI, AUGUST 15, 2018 00:00 IST

Operator will share revenue with AAI

Passengers will no longer be able to take Uber cabs from Chennai airport as the cab aggregator has lost its bid to Ola.

According to officials of Airports Authority of India (AAI), Ola cabs will be available in the airport as they have been awarded the contract for putting up kiosks outside the terminals.

In August last year, both Ola and Uber were given space to install the kiosks outside the terminals, in addition to the existing Fast Track, Aviation Express and pre-paid taxis.

Officials of the Airports Authority of India (AAI) said Ola and Uber were operating on a trial basis all these months. When AAI found that several people were using the services, it called for tenders to provide the service permanently.

“Ola won the bid and they will share a portion of their revenue with AAI. This apart, they will also pay some rent to AAI,” an official said. They refused to comment on the quantum of rent and the profit-sharing details.

The presence of these cab aggregators immensely benefited passengers. But more importantly, to meet the competition from them, prepaid taxis brought down their prices by Rs. 50 and Fast Track too had reduced their prices by 20%

Passengers feel this move may lead to inordinate delays in securing a cab during peak hours. Vasumathi Raghu, a passenger from Adyar said, “During peak hours, if Ola charges exorbitantly, I can use Uber and vice versa. And if Uber doesn’t have cabs I could take Ola. Having more options is always good for a passenger.” Uber, however, will continue to take riders to the airport.

RTI data on extra students wrong

‘RTI data on ‘extra’ students wrong’

Admission Process Was Fair, Claims Anna Univ

TIMES NEWS NETWORK

Chennai:

As news broke on Tuesday about extra students admitted to the second year at College of Engineering, Guindy, based on a RTI reply, Anna University responded by stating that the public information officer had committed a ‘mistake’ by providing incorrect data on the matter.

To a query on the number of students admitted to CEG in 2017, dean T V Geetha, the public information officer, provided data pertaining only to those admitted through single window counselling and did not include names of students admitted through other quotas, the varsity said.

“A total of 118 students were admitted under Children of Indian Workers in Gulf countries (CIWGC), Non-Resident Indians (NRI) and Foreign Nationals (FN) categories and 46 were admitted under industrial-consortium quota,” vicechancellor M K Surappa told reporters. Also, 1195 were admitted through single window counselling. Together, 1,359 students joined first-year BE/B Tech in CEG last year; 249 of them withdrew due to various reasons, said Geetha. Higher education secretary Sunil Paliwal has promised action against the dean for incorrect data to an RTI query.

“Every student pursuing the third semester attended classes last year and there was no illegality in the admission process,” Surappa added, referring to a TOIreport based on the RTI reply and documents provided by insiders.

He also denied reports pertaining to discrepancies in admissions to mining engineering and electronics and communication engineering courses. Of the 216 sanctioned seats in ECE, 197 were filled (including 158 via counselling and 39 in other categories).

Responding to other questions about the ongoing probe against G V Uma, the former controller of examinations under suspension for her involvement in a re-evaluation scam, Paliwal said they had analysed answer scripts pertaining to the Chennai zone and found that re-evaluators were at fault in 76 instances and that scripts from other zones were under analysis. “Also, the convener committee managed to submit evidence in connection with another irregularity committed by Uma in awarding contracts to print empty marksheets,” he said.

Referring to TOI report on I Transcript, the online transcription provider, coming under scanner, Paliwal said the university was coming up with an in-built portal to provide transcription services online and that the contract awarded to the private firm would be scrapped after this.

He clarified that he had not applied for central deputation and wished to continue service in the state where he served for 24 years.

கைபேசி தொலைந்தாலும் தகவல்களை பாதுகாக்கலாம்

கைபேசி தொலைந்தாலும் தகவல்களைப் பாதுகாக்கலாம்!

By DIN  |   Published on : 14th August 2018 11:20 AM  

சில ஆயிரம் முதல் சில லட்சம் வரை பணம் கொடுத்து கைபேசியை வாங்கியவர்கள் அது தொலைந்து விட்டால் பணத்துக்காக கவலைப்படுவதில்லை. மாறாக அதிலுள்ள தகவல்களை வைத்து அதை எடுத்தவர்கள் என்ன செய்வார்களோ? என்ற பயம்தான் தொலைத்தவர்களுக்கு ஏற்பட்டு வருகிறது. 

அத்தகைய கவலை இனி வேண்டாம். நமது தகவல்களை இருந்த இடத்திலிருந்தே கூகுளின் உதவியுடன் அழிக்கவும் முடியும். வாய்ப்பிருந்தால் அந்த கைபேசி எங்கு இருக்கிறது என கண்டறியவும் முடியும். 
கூகுளிலுள்ள find my device தான் இந்த வசதியை நமக்கு வழங்குகிறது.
முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find என டைப் செய்யுங்கள்.. பிறகு உங்கள் கூகுள் அக்கவுண்டை log in  செய்ய வேண்டும். உங்களின் email and password கொடுத்த பின்பு லாக் இன் ஆகும். அப்போது ஸ்க்ரீனின் இடது புறம் நாம் தவறவிட்ட செல்போன் மாடல் எண் இருக்கும். அதன் கீழே தொலைந்த கைபேசியின் சார்ஜின் அளவு சதவீதத்தில் காட்டும். 
மேலும் தொலைந்த கைபேசியில் ஜிபிஎஸ் ஆனில் இருந்தால் வலது புறத்தில் அந்த கைபேசி எந்த இடத்தில் உள்ளது என்பதை பச்சை நிற குறியீட்டுடன் காட்டும். ஜிபிஎஸ் ஆனில் இல்லாவிட்டால் அத்தகவல்களை காட்டாது.இடது புற விண்டோவில் play sound, Enable, Secure & Erase என்ற தகவல்கள் இருக்கும்.
play sound கிளிக் செய்தால் அந்த செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தாலும் கூட 5 நிமிடம் ஒலிக்கும். Enable, Secure & Erase கிளிக் செய்து lock ஆப்சனை கிளிக் செல்தால் செல்போன் லாக் ஆகி விடும். erase ஆப்சனை கிளிக் செல்தால் செல்போனில் உள்ள தகவல் அனைத்தும் அழிந்து விடும்.

எனவே, கைபேசி தொலைந்தால் கவலை கொள்ளாதீர்கள். பதறாதீர்கள். உங்கள் தகவலை பாதுகாப்பாக அழிக்க முடியும்.

- வி.குமாரமுருகன் 

Bakrid Holiday on 23 rd August

பக்ரீத் விடுமுறை ஆகஸ்ட் 23-க்கு மாற்றம்: மத்திய அரசு அறிவிப்பு

By DIN  |   Published on : 15th August 2018 01:30 AM  
 
பக்ரீத் பண்டிகை விடுமுறை வரும் 22-ஆம் தேதிக்குப் பதிலாக வரும் 23-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: மத்திய அரசின் சார்பில், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 2018-ஆம் ஆண்டுக்கான விடுமுறைப் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அதில், பக்ரீத் பண்டிகை விடுமுறை ஆகஸ்ட் 22-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பக்ரீத் பண்டிகை 23-ஆம் தேதி வருவதாகவும், அன்றைய தினமே அரசு விடுமுறை அறிவிக்க வேண்டுமெனவும் மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, தில்லி மற்றும் புதுதில்லியில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் வரும் 23-இல் பக்ரீத் பண்டிகைக்கான அரசு விடுமுறை விடப்படும். தில்லி மற்றும் புதுதில்லிக்கு வெளியே உள்ள மாநில அரசு அலுவலகங்கள் பக்ரீத் பண்டிகைக்கான விடுமுறை விஷயத்தில் அவர்களாகவே ஆலோசித்து முடிவினை எடுத்துக் கொள்ளலாம்.

BE admisdions

பி.இ. கலந்தாய்வு: 36 கல்லூரிகளில் ஒருவர்கூட சேரவில்லை: 120 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் சேர்க்கை

By DIN  |   Published on : 15th August 2018 01:34 AM 

பொதுப் பிரிவு பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வு இன்னும் ஒரு சுற்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் 36 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை என்பது தெரியவந்துள்ளது. 120 பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
2011- ஆம் ஆண்டிலிருந்து பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் குறைந்து வரும் நிலையில், நிகழாண்டில் அது மேலும் குறைந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் 5 சுற்றுகளைக் கொண்ட ஆன்-லைன் பொதுப் பிரிவு கலந்தாய்வில், திங்கள்கிழமை வரை 4 சுற்றுகள் நிறைவடைந்துவிட்டன. 
81 கல்லூரிகளில் மட்டுமே.. .மாணவர் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, தமிழகம் முழுவதும் உள்ள 509 பொறியியல் கல்லூரிகளில் 81 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்கள் நிரம்பியிருக்கின்றன. 
299 பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவான சேர்க்கை நடைபெற்றுள்ளது.
36 கல்லூரிகளில் ஒருவர்கூட சேரவில்லை: இதே போன்று 120 பொறியியல் கல்லூரிகளில் 10-க்கும் குறைவான இடங்களே நிரம்பியிருக்கின்றன. இதில் 83 கல்லூரிகளில் 5-க்கும் குறைவான இடங்களும், 18 கல்லூரிகளில் ஒரு இடம் மட்டுமே நிரம்பியிருக்கின்றன.
36 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலை காரணமாக தமிழகத்தில் உள்ள 250 பொறியியல் கல்லூரிகளை வரும் ஆண்டுகளில் மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது: இந்த முறை பி.இ. இயந்திரவியல், கட்டடவியல் (சிவில்) பிரிவுகளில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளது. 
உயிரி தொழில்நுட்பம், கெமிக்கல் பொறியியல் படிப்புகளை புதிதாக தொடங்கிய கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து காணப்படுகிறது.
100 பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே... நிலைத்து நின்று, தரமான கல்வியை மாணவர்களுக்குக் கொடுக்கக்கூடிய சூழல், தமிழகத்தில் உள்ள 100 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. தமிழக அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் பொறியியல் பாடத் திட்டத்தையும், தேர்வு முறையையும் மேம்படுத்தாவிட்டால், பொறியியல் படிப்பின் பக்கம் மாணவர்களை ஈர்ப்பது வரும் காலங்களில் மேலும் கடினமாகிவிடும். அது மட்டுமின்றி, வேலைவாய்ப்பு மற்றும் வளாகத் தேர்வில் சிறந்து விளங்கும் கல்லூரிகள் மட்டுமே வரும் ஆண்டுகளில் மாணவர்களை ஈர்க்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

NEWS TODAY 21.12.2024